Wednesday, May 3, 2017

உணவே மருந்து

உணவே  மருந்து 
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு - என்ற முதுமொழிக்கேற்ப சில பொருட்களை அளவோடு நமது அன்றhட வாழ்வில் சேர்க்க வேண்டும். அதே போல, சில உணவு பொருட்களுடன் சிலவற்றை சேர்த்து உண்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அவை என்னவென்பதை தெரிந்துக்கொள்வோம் இன்று... ஆம்...
* தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகி விடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றையே ஒரு நேரத்தில் சாப்பிட வேண்டும்.
* வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
* பழங்களைத் தனியே தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
* வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
* மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
* ஆஸ்துமா மற்றும் சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
* மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.
* நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
* காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ அருந்தக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் அருந்தலாம்.
* அல்சர் மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
* பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.
* தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
* கோதுமையை நல்லெண்ணெய் சேர்த்து சமைத்துச் உண்ணக் கூடாது.
* மூட்டுவலி மற்றும் வாத நோய் உள்ளவர்கள் அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.
தேடல்கள்  தொடரும்…
மேலும், பல தகவல்கள் அறிய… இணைந்திருங்கள் ..

வெனிஸ்

கடலில் மிதக்கும் கம்பீர நகரம் - வெனிஸ்

மத்திய தரைக்கடலின் மகாராணி

அது கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம். அதன் அகன்ற தெருக்களிலும், குறுகலான தெருக்களிலும் வலம்வருகிற கடல் ஒருகணம் சீறியவாறு ஏறும், மறுகணம் சிணுங்கியவாறு இறங்கும். அதன் அரண்மனையின் பளிங்குக் கல்லில் கடற்பாசி அமர்ந்தபடி அடம்பிடிக்கும் என ஆங்கிலக்கவிஞர் சாமுயல் ரோஜர்ஸ்-ஆல் விவரிக்கப்பட்டுள்ள அந்த கம்பீரமான நகரம் தான் வெனிஸ்.
மிகப் பெரிய குடியரசு ஒன்றின் முன்னாள் தலைநகரான வெனிஸ், நில மற்றும் கடல் பேரரசை பல நு}ற்றhண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தது.
இத்தாலி நாட்டின் வட பகுதியில் உள்ள வெனிஸ் நகரம் இன்று பலருக்கும் தெரிந்த நகரம். இந்நகரத்தின் வணிகன் பற்றி ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் பற்றியும் அதில் வரும் ஷைலாக் எனும் வட்டிக்காரன் பற்றியும் பலரும் அறிந்திருப்பர்.   அதுமட்டுமில்லாமல் நீரின் மேல் இந்நகரம் கட்டப்பட்டதா? அல்ல.. நகரம் கட்டப்பட்டபின் நீர் சூழ்ந்ததா? என புருவங்களை உயர வைக்கும் இந்நகரிலுள்ள தண்ணீர்த் தெருக்களில் செல்ல முடிகிற ஒரே மோட்டார் வாகனம் படகுகளே... படகை இங்குள்ளவர்கள் கண்டோலா எனவே அழைக்கின்றனர். இங்கு வீடுகளுக்கு விதவிதமான வண்ணங்கள் அதில் குடியிருப்பவர்கள் பூசுகிறhர்கள். அதனால் நகரமே வண்ணமயமாக உள்ளது. மேலும், இங்கு பிரமாண்டமான, நவீனமான கட்டிடங்களைக் கட்டினால் அந்நகரின் பழமையான தோற்றம் போய்விடும் என்று அம்மக்கள் எண்ணுவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய பாரம்பரிய வரலாறு கொண்ட வெனிஸ் நகரம் முழுவதும் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கிறன.
வெனிஸுக்கு விஜயம் செய்யும் அநேகருக்கு இரண்டு, மூன்று நு}ற்றhண்டுகள் பின்னோக்கிச் சென்றது போல் இருக்கும். அந்தளவிற்கு இந்நகரத்தின் சூழல் தனித்தன்மையுடையதாக அமைந்திருக்கிறது. ஏனெனில், அமைதியே அங்கு காணப்படுகிற ஒரு முக்கிய அம்சம்.
பாதசாரிகளுக்கான குறுகிய நடைபாதை பெரும்பாலும் கால்வாய்களிலுள்ள போக்குவரத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கால்வாயை ஒட்டியுள்ள பாதைகளும், கால்வாயுக்குக் குறுக்கே செல்லும் வளைந்த கற்பாலங்களின் பாதைகளும் இதற்கு விதிவிலக்கு.  கண்கவர் காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும் இந்த வெனிஸ் நகரில், தேவாலயத்தோடு கூடிய புனித மார்க் சதுக்கம், மணிக் கூண்டு, பச்சைக் கடற்கழியில் சூரிய ஒளிக்கதிர்கள் பிரகாசிக்கிற பிரம்மாண்ட கடற்பகுதி ஆகியவை ஓவியர்களின் மனதைத் துரிகை பிடிக்கத் தூண்டுகின்றன.
இங்கிருக்கும் முக்கிய சதுக்கத்தில் எப்போதும் பிஸியாக காணப்படும் கஃபேக்கள் சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர்வாசிகளையும் ஒரு சேர சுண்டி இழுக்கின்றன. சிறிய ஆர்கெஸ்ட்ராக்கள் இசைக்கும் பாரம்பரிய இன்னிசையைக் கேட்டுக்கொண்டே நீங்கள் ஒரு பானத்தையோ அல்லது  ஐஸ்கிரீமையோ ருசிக்கலாம். அங்கு உட்கார்ந்து, வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டும், சுற்றியுள்ள பிரமாதமான கட்டடக் கலையை ரசித்துக் கொண்டும், இதுவரை எந்தக் காரையும் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டும் இருக்கையில், ஏதோ பல காலம் பின்னோக்கிச் சென்றுவிட்டதைப் போன்றே நாம் உணரக்கூடும்.
கலைப் பொக்கிஷங்களைத் தேடுவோரை இந்நகரம் சுண்டி இழுக்கிறது. ஆம்.. இங்குள்ள எண்ணற்ற அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள் போன்றவற்றில் பல பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் குடி கொண்டிருக்கின்றன. ஆனால் பார்வையாளர்கள் சிலர், குறுகலான பாதைகளில் சுதந்திரமாக நடந்து சென்று, தங்களைச் சுற்றியுள்ள வித்தியாசமான காட்சிகளைப் பார்ப்பதிலேயே திருப்தியடைந்து விடுகிறhர்கள். சுற்றுலாப் பயணிகளுக்கென்றே எண்ணிலடங்கா கடைகள் இங்கு உள்ளன. கடற்கழித் தீவான பூரானோவின் லேஸ் மற்றும் எம்பிராய்டரி வேலைகள், முரானோவின் கிரிஸ்டல் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் ஆகியவை இங்கு விற்கப்படுகின்றன. இவற்றிற்காக இந்நகரம் புகழ்பெற்று விளங்குகிறது.  மோட்டார் படகுகளில் கொஞ்ச நேரம் சவாரி செய்து இத்தீவுகளுக்குச் செல்லலாம், அங்கே இந்தப் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம். இப்படகுகளில் சிறிது நேரம் சவாரி செய்வதே ஓர் அலாதியான அனுபவம் தான்.
கூரிய முகடுள்ள வளைவுகளோடு கூடிய பிரம்மாண்டமான அரண்மனைகள், கடந்த காலத்து கிழக்கத்திய செல்வாக்கைப் பறைசாற்றுகின்றன. இந்நகரத்தின் முக்கிய போக்குவரத்துப் பாதையான கிராண்ட் கேனாலின் மீதுள்ள புகழ்பெற்ற ரியால்டோ பாலத்தையும், அதன் கீழே அமைதியாக நீந்திச் செல்லும் பளபளப்பான கருப்புப் காண்டோலா படகுகளையும் நின்று வேடிக்கை பார்க்க அநேகர் கூட்டம் கூட்டமாக நிற்பர். பலாடியோ, டிஷன், டின்டாரெட்டோ போன்ற பிரபல கட்டடக்கலை நிபுணர்களாலும் ஓவியர்களாலும் அலங்கரிக்கப்பட்ட இந்த வெனிஸ் நகரம், லாஸேரே நிசீமா என அழைக்கப்படுகிறது. அதாவது “மிக அமைதியானது” அல்லது “அழகானது” என்பதே அதன் அர்த்தம். “நாகரிக உலகின் மிகவும் செல்வச் செழிப்பான வியாபார மையமாக கொடிகட்டிப் பறந்த” இந்நகரம் “மத்தியதரைக் கடல் மகாராணி” என்று அழைக்கப்படுவது மிகப் பொருத்தமானதே. பல நு}ற்றhண்டுகளுக்கு அது அவ்வாறே இருந்தது. ஆனால் 16-ம் நு}ற்றhண்டில் முக்கிய வியாபார தடம் அட்லாண்டிக்கிற்கும் மேற்கே அமெரிக்க கண்டங்களுக்கும் மாற ஆரம்பித்த போது அதன் ஆதிக்கம் மங்க ஆரம்பித்தது. மத்தியதரைக் கடல் பகுதி முழுவதுமாகச் சிதறியிருந்த வெனிஸ் குடியேற்றங்கள் அருகருகே அமையவில்லை. ஒரே அரசாங்கத்தின் கீழ் ஒன்றுபடவில்லை. ஒன்றhகச் சேர்ந்து ஒத்துழைக்கவுமில்லை. இதனால் குடியேற்றங்களை இழக்க வேண்டிய கட்டாயம் வெனிஸுக்கு ஏற்பட்டது. அருகிலிருந்த அரசுகள் வெனிஸின் பிராந்தியங்களை ஒன்றன் பின் ஒன்றhகக் கைப்பற்ற ஆரம்பித்தன. கடைசியில், நெப்போலியன் இந்தக் கடற்கழி நகரத்தை 1797-ல் கைப்பற்றி ஆஸ்திரியாவின் ஆளுகைக்கு உட்படுத்தினார். 1866-ல் வெனிஸ் நகரம் இத்தாலி நாட்டின் பாகமானது.
 “கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம்” ஆர்வத்தைத் தூண்டுகிற கடந்த காலத்துக்குச் சாட்சி பகர்கிறது. ஆனால் வித்தியாசமான எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளபடி, “வெளியாட்கள் இந்நகர மக்களின் தேவைகளை உதாசீனப்படுத்தி, இங்கிருந்து துரத்திவிட்டுக்கூட இந்நகரை ஓர் அருங்காட்சியகமாக” மாற்றும் ஆபத்திருக்கிறது. பல காலமாக வெனிஸ் மோசமான இயற்கைச் சூழலோடு போராட வேண்டியிருந்தது. இந்நகரை “சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் புதுப்பித்து, குடியேற்றி, உயிரூட்டினால் தவிர மற்றபடி வெறும் தண்ணீரிலிருந்து இதைப் பாதுகாப்பது வீணான ஒன்றhகவே இருக்கும்.”

பயணம்  தொடரும்…



கம்பீரமாக நிற்கிறது… கல்லணை

கம்பீரமாக நிற்கிறது… கல்லணை

உலகிலுள்ள அணைகளிலேயே மிகவும் பழமையானதும், தற்போதும் புழக்கத்தில் உள்ளதுமான அணை என்றhல் அது நம் தமிழ் மன்னனாகிய கரிகாற் சோழன் கட்டிய கல்லணையே.. காலத்தை வென்று கம்பீரமாக காட்சியளிக்கும் கல்லணையை பற்றிய சிறு தொகுப்பே இது…
திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உலகின் மிக பழமையான அணைகளில் ஒன்றhன கல்லணை. இந்த அணை பழமையானது என்பதைக்காட்டிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள ஒரு அணை என்ற பெருமைக்குரியது.
கி.பி.இரண்டாம் நு}ற்றhண்டில் கற்களாலும், களிமண்ணாலும் கட்டப்பட்ட இந்த அணை, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக பழந்தமிழனனின் கட்டிடக்கலையை, பாசன மேலாண்மையை பறைசாற்றுகிறது.
தமிழர்களின் பெருமையை உலகறிய செய்தவர்கள் சோழர்கள். அந்த சோழர்களின் வழி வந்த பிற்கால சோழர் என அழைக்கப்படும் கரிகாற்பெருவளத்தான் கட்டிய அணையே கல்லணை.
காண்போரை கவர்ந்து கம்பீரமாக நிற்கும் இந்த அணை கரை புரண்டு ஓடும் நீரின் குறுக்கே எப்படி கட்டியிருப்பார்கள்…
ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கரையோர விளைநிலங்களை நீர் அடித்து சென்று கடலில் வீணாக கலந்தது. விவசாயிகள் வேதனைக்குள்ளாயினர். இதனால் அக்காலகட்டத்தில் நாட்டில் நிலவும் வறுமை, மக்களின் துயர் கண்டு காவிரியின் குறுக்கே ஒரு பெரிய அணையை கட்ட முடிவெடுத்தார் கரிகாற் சோழன். ஆனால், அது சாதாரன விஷயம் அல்ல.. இருப்பினும் ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். அது என்ன வழி?.. நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். அதன்படி, காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறெhரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணை தான் கல்லணை.
கல்லணைக்கு கட்ட தேவைப்பட்ட பெரிய கற்களையெல்லாம் திருவெறும்பூர் பகுதியிலிருந்து கொண்டு வந்ததாக கூறுகின்றனர்.வடக்கு புறத்திலுள்ள கொள்ளிடத்தையும், காவிரியையும் இணைக்கும் உள்ளாற்றில் அமைந்தது கல்லணை.
இந்த கல்லணை காலத்தின் போக்கில் நீரோட்டமின்றி மணற்மேடுகளாக காட்சியளித்த காலங்களும் உண்டு..  அக்காலகட்டத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியான வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். கல்லணையை பல ஆண்டு காலம் ஆராய்ந்த இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் இவர் மணற்திட்டை அகற்றி நீரோட்டத்தை சீர்படுத்தும் நோக்கில், கல்லணையில் தைரியமாக  சிறு சிறு பகுதிகளாக பிரித்து எடுத்து மணற்போக்கிகளை அமைத்தார். அப்போது கல்லணையை ஒட்டி 12 அடி ஆழம் தோண்டிய போது தான் ஆழங்கான முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் இந்த அணை எப்படி கட்டப்பட்டது என்ற கேள்விக்கு பல ஆண்டு காலம் கழித்து விடை கிடைத்தது. காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து பழந்தமிழரின் அணைகட்டும் முறையையும், பாசன மேலாண்மையையும் உலகிற்கு எடுத்து கூறினார். கல்லணைக்கு  தி கிராண்ட் அணைக்கட்  என்ற பெயரையும் Nட்டினார். அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று.
அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. பிரிந்த காவிரி ஆறு கல்லணையை வந்தடைகிறது. இவ்வாறு வந்தடையும் காவிரியை கல்லணையானது காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என நான்காக பிரிக்கிறது. பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படும். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், டெல்டா மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் விளை நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.
இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளாக விரிவு அடைந்துள்ள இந்த கல்லணை அமைப்புகள் தாம் தஞ்சைப்பாசனத்திற்கு வழிவகுத்த தலைவாசலாக அமைந்துள்ளன. கல்லணையிலிருந்து சுமார் 20 மைல் வரை, காவிரியும், கொள்ளிடமும் அருகருகே ஓடுகின்றன. கீழே போகப் போகக் காவிரி மீண்டும் குடமுருட்டி, அரசலாறு, மன்னியாறு, வீரசோழளாறு என்று பிரிந்து கொண்டே போகிறது. கல்லணையிலேயே பிரிந்த வெண்ணாறும், வடவாறு, வெட்டாறு, வெள்ளையாறு, கோரையாறு, பாமினியாறு, முள்ளியாறு என்று பிரிந்து கொண்டே போகிறது. சுமார் 3,000 சதுர மைல் பகுதியைச் செழிக்கச் செய்துவிட்டு, கிளைகளில் சில ஆறுகள் மீண்டும் ஒன்று சேர்கின்றன. அவ்வாறு சேர்ந்து இனிப் பயன்படுத்த முடியாது என்றுள்ள கடை கோடிக் கழிவு நீரையும் மழைத் தண்ணீரையும் சுமந்து கொண்டு கடலில் கலந்து விடுகின்றன.
இன்றைக்கு உருவாகும் அணையின் ஒவ்வொரு கல்லும் உலகின் தொன்மையான அணைகளில் ஒன்றhன கல்லணையின் பிரதிபிம்பமே. இத்தகைய பிரம்மாண்ட அணையை கட்டிய கரிகாற்சோழனுக்கு அந்த அணைக்கு அருகிலேயே அமைந்திருக்கும் மணிமண்டபத்தால் சோழ மன்னிற்கு கூடுதல் பெருமை. இம்மண்டபத்திலுள்ள யானை சிலையின் மீது அமர்ந்திருக்கும் கரிகாற்சோழனது சிலை காலம் கடந்து நிற்கும் கல்லணையின் பெருமையையும், தமிழர்களின் கட்டுமான திறமையையும் கம்பீரமாக பறை சாற்றுகிறது…


தேடல்கள்  தொடரும்… இரா.ஜhன்சிராணி கண்ணன்…

சண்டை சேவல்

தடையை தகர்த்தெறியுமா ..? சண்டை சேவல்


ஜல்லிக்கட்டிற்கும், சேவல் சண்டைக்கும்; சங்க இலக்கியத்தில் குறிப்பு, பிராணிகள் வதை காரணம் காட்டி தடை என சில ஒற்றுமைகள் உண்டு. தடை நிலை இருந்தாலும், இந்த இரண்டும் நிழல் போல, தமிழர்களின் வாழ்வை பின் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
தமிழர்களின் வீர விளையாட்டில் ஒன்றhக இருக்கும் இந்த சேவல் சண்டைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றhலும், இந்த சேவல் சண்டை  உலகம் முழுக்க நடக்கிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் பலர் இன்றும் சேவல் சண்டையை முழு வாழ்நாள் தொழிலாக வைத்திருக்கிறhர்கள்.
2000 ஆண்டுகள் பழமையான இந்த சேவல் சண்டையானது, சேவல் கட்டு, கோச்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, என வௌ;வேறு இடத்துக்கு ஏற்ப வௌ;வேறு விதிகளுக்கு ஏற்ப வௌ;வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படி பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ அதே போல சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர்.
பொதுவாக பெண் கோழி ஆதிக்க உரிமைக்காகப் பிற ஆண் கோழிகளோடு சண்டையிட்டுக் கொள்ளும். இந்தச் சண்டையை யாராலும் விலக்க முடியாது. இந்த கோழிச்சண்டையை ஒரு விளையாட்டாக புகார் நகரத்து மக்கள் சங்ககாலத்தில் கண்டுகளித்து வந்ததாகவும் பின்னர் நாளடைவில் அது போட்டியாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
சேவல் சண்டையானது மனு நீதி சாஸ்திரம், காட்டு சேவல் சாஸ்திரம், மற்றும் பிற சங்க வயது இலக்கியம், போன்ற பண்டைய இலக்கியங்களில் பழமையானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பண்டைய காலத்தில் மறவர்களால் ஓய்வுநேரத்தில் விளையாடப்பட்டது எனவும் அதில் குறிப்பிடப்படுகிறது.
சேவல்களை சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டை பயிற்சியோடு சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவலுக்கு கொடுக்கப்படுகிறது. இதே போல இரையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வழக்கமான உணவை விட உடலை வலுப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம்,பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை கொடுக்கப்படும்.
சேவல் சண்டையில் வெப்போர், வெத்தடி அல்லது வெற்றுகால் சேவல் சண்டை என்றும், கத்திகால், கத்தி கட்டு சேவல் சண்டை என்றும் இருவகை உண்டு. இந்த இரண்டு வகை சண்டைக்கும் இரண்டு வௌ;வேறு வகை சேவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ் இரண்டு வகை சண்டை சேவல்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சாமானியனுக்கு தெரியாது ஆனால் சேவல் சண்டை காரர்களுக்கு எளிதாகவே தெரிந்து விடும்.
சென்னை, தஞ்சாவூர், பெரம்பலு}ர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, பாண்டிச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வெற்று கால் அல்லது வெப்போர் சேவல் சண்டை நிகழ்த்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான ஆடுகளம் படத்தில் வந்த சேவல்கள் அணைத்து வெப்போர் சேவல்களே.
வெப்போர் சேவல்களை அசில்(Aளடை அல்லது Aளநநட) என்றேஅலைகின்றனர். காரணம் “அசில்” என்ற சொல் “அசல்” என்ற சொல்லின் திரிபே. அதன் அர்த்தம் “சுத்தமான” அல்லது “கலப்படம் இல்லாத” என்பதே. இதில் சுத்தமான வகையாக இருந்தால் மட்டும் தான் சேவல் சரியாக சண்டையிடும். வெப்போர் சேவல்களை பொருத்தமட்டில் வேகம் மட்டும் அல்ல விவேகமும் முக்கியம். பெரும்பாலும் இச் சேவல்கள் பிறக்கும் போதே சண்டைபோடும் குணாதிசயத்துடன் பிறக்கின்றன. இவற்றிற்கு சண்டை பயற்சியளிக்கும்போது அந்த குணம் மேலும் மெருகெற்றப்படுகின்றது. எந்த எதிரியை எப்படி அடிக்கவேண்டும் என்று அவற்றிற்கு தெரியும். இவ்வகை சேவல்களுக்கு உடம்பே ஆயுதம். காலில் உள்ள நெகங்கல் மட்டும் அல்லது கட்டை விரலுக்கு மேல் மாட்டு கொம்பினை ஒத்த நேகமும் வளர்கிறது. இதனை “முள்” என்பர். இந்த “முள்” அம்பின் முனைபோன்று பயிற்சியின் போது கூர்ப்பாக்க படுகின்றது. சிறந்த சேவல்கள் அந்த முள்ளை பயன்படுத்தி எதிரி சேவலை ஒரே அடியில் கூட வீழ்த்தி விட முடியும்.
சேவல் சண்டை என்பது ஒரு மணி நேரம் 45 நிமிடம் நடைபெறுகிறது. இதில் 15 நிமிடங்களுக்கு இடைவேளை. அதனைத் தான் தண்ணிக்கு எடுப்பது என்பர். அப்போது சேவலின் காயங்கள் சரிசெய்யப்பட்டு, வலி ஒத்தடம், குளுக்கோஸ் போன்றவை தரப்பட்டு சண்டைக்கு மீண்டும் தெம்பூட்டப்படுகிறது. நல்ல தரமான சேவல் வகைகள் எதிர் சேவலை 3 நிமிடங்களில் கூட கொல்லமுடியும். இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தைவிட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது. அதே போல, சேவலின் அலகு அதாவது மூக்கு மண்ணில் பட்டுவிட்டாலும், எதிர் சேவல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் பரிசு வழங்கப்படும். இப்படி ஐந்தாறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரு சேவல், லட்ச ரூபாய்க்கு குறையில்லாமல் விலை போகும். அதுமட்டுமில்லாமல் வெற்றி பெற்ற சேவலை, போர் வீரனைப் போல் கொண்டாடுவர்.
இவ்வகை சேவல்கள் பலவகைகள் உண்டு.. அவை பொதுவாக ரேஜh என்றழைக்கப்படும் குள்ளமான சேவல்கள், கல்கத்தா அசில், மதராஸ் அசில் என்று பிரிக்கப்பட்டாலும். அவைகள் அவற்றின் சிறகின் வனங்களை பொறுத்தே அழைக்கபடுகின்றன. இவை மட்டுமின்றி பேட்டை போன்று காட்சியளிக்கும் “பேட்டை மாதிரி” தாடியுடன் இருக்கும் “கல்வா” ஆகிய வகைகளும் உள்ளன.
வெப்போர் சேவல்களுடன் கத்திகால் சேவல்களை சண்டைக்கு விடமுடியாது காரணம் கத்திகால் சேவல்களால் வெப்போர் சேவல்களுக்கு நிகராக சண்டை போடமுடியாது. சிறிது நேரத்தில் ஒய்ந்து விடும்.
ஈரோடு, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டும் இரத்தம் தோய்ந்த கத்தி சண்டை நடத்தப்படுகிறது. சேவலின் வலதுகாலில் இதற்காக சிறு கத்தி கட்டப்படுகிறது. பிறகு சேவல்களை ஜhக்கிகள் பிடித்துக்கொண்டு இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு ஆக்ரோஷமாக்கி சேவல்களை மோதவிடுகின்றனர். கத்தி கட்டிற்கு பயன்படும் சேவல் கட்டு சேவல்கள் என்று அழைக்கபடுகின்றன.. வால் நீளமாக இருக்கும் கத்தி சேவல்களில், பச்சை மற்றும் கருங்கால் சேவல்கள் சிறந்த வகைகளாக கருதப்படுகின்றது. நிறத்தை பொருத்தமட்டில் பலவகைகள் உண்டு அவை…கோழி வள்ளுவர், காக வள்ளுவர், கீரி வள்ளுவர், பூத வள்ளுவர், பொன்ற வள்ளுவர், பொன்றக் காகம், செங்காகம், கருங்காகம், வெண்காகம், செங்கீரி, காகக் கீரி, பொன்றக் கீரி, வள்ளுவர்க் கீரி, பூதிக் கீரி, காக பூதி, பொன்ற பூதி, செம்பூதி, பொன்ற வெள்ளை, புள்ளி வெள்ளை, காகக்கருப்பு, பேய்க்கருப்பு, சேவப்பேடு, கோழிப்பேடு, கரும்பேடு, வெண்பேடு, பொன்றப்பேடு, பூதப்பேடு, காகப்பேடு,சித்திரப்புள்ளி, நு}லாவள்ளுவர், ஆந்தை, மயில் என்பன.
கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல். கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள். கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக் கொண்டவை  காகச் சேவல்கள். கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள்.
வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள். கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை பேய்க்கருப்பு. பழுப்பு நிறத்தை உடையவை பொன்(நி)றம்;. சாம்பல் நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, பூதிகள்.
கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல், கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் என சேவல்களில் பல இரகமுண்டு. அதேபோலக் கால்களைப் பொறுத்தும் வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால், காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் என நீண்டு கொண்டே போகிறது அதன் பட்டியல்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணியினரில் யாராவது ஒருவர் செவ்வக வடிவ களத்தின் மையத்தில் தமது சேவலைக் கொண்டு நிறுத்தி, பின் கையில் எடுத்துக்கொள்வர். இதன் பெயரே நடவு போடுதல்;. நடவு போடுதல் செய்த பின்பு எதிரணியினர் நடவு போட்ட சேவலுக்கு இணையான, அதே நிற, இன, அளவுள்ள சேவலைச் சண்டைக்கு விடுவர். இந்நிலையில் இரு சேவலுக்கும் காலில் கத்தி வைத்துக் கட்டப்படுகிறது. பின்னர், சேவல் விடுபவர்கள் களத்தின் உள்ளே சென்று இரு சேவலுக்கும் இடையில் சுமார் 10 அடி இடைவெளியில் நிறுத்துவர். இதுவே முகைய விடுதல் என்பதாகும். முதலில் வேகமாக நொடிபொழுதில் எதிர் சேவலின் நெஞ்சில் கத்தியை பாய்ச்சும் சேவலே பெரும்பாலும் ஜெயிகின்றது. போரிட்டுக் கொள்ளும் இரு சேவல்களின் போர்ச்செயல்முடிவே இவ்விளையாட்டின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது. தோற்ற சேவல் உயிருடனோ, இறந்த நிலையிலோ வெற்றியடைந்த சேவலின் உரிமையாளருக்கு கிடைக்கிறது. இதனையே “கோச்சை” எனபர்.
இத்தகைய வீர விளையாட்டாக கருதப்படும் சேவல் சண்டை அண்மை காலமாக Nதாட்டம் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த விளையாட்டில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல், கலவரம் என நடந்ததைத் தொடர்ந்து இவ்விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் தடையும் விதிக்கப்பட்டது.
இருப்பினும், பண்டைய இலக்கியங்களில் 64 கலைகளுள் சேவல் சண்டையும் ஒன்று என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் இத்தனை பெருமைக்குரிய அறிய விஷயமான சண்டை சேவல்களையும், அக்கலையையும் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழ்மகனின் கடமை.

தேடல்கள்  தொடரும்… இரா.ஜhன்சி ராணி கண்ணன்.

புருவத்தை உயர்த்தும் அசத்தல் கண்டு பிடிப்பு, வெளியில் தெரியாமல் போன சிரிஜேசின் திறமை!


சிரிஜேஷ் என்ற இளைஞர் வானில் விட்டெறிந்தால் நான்கு புறமும் சுற்றி தன்னிடமே வரும் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதை ஆங்கிலத்தில் boomerang எனக் கூறுவார்கள். இது போன்ற காட்சிகள் சினிமாக்களில் தான் இடம் பெறும், அதை அவர் நிஜமாக்கியுள்ளார்.
கோடாறி போன்ற ஒரு அமைப்பில் இதை அவர் உருவாக்கியதே இவரின் தனி சிறப்பு
boomerang என்ற பெயரில் இதே போன்று வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டாலும், அது சிரிஜேஷ் உருவாக்கியது போன்று கனக்கட்சிதமாக செயல்டுமா என்பது சந்தேகமே. மேலும் அதற்கும் சிரிஜேஷ் உருவாக்கியதற்கும் ஏரமாளான வித்தியாசங்கள் உள்ளது.
மேலும் இவர் இதை ப்ளாஸ்டிக் மரக் கட்டை என பல பொருட்களில் இருந்து உருவாக்குகின்றார்.
வீட்டில் பின் புறம் கூட இதை பறக்க விட்டு தன்னிடம் கொண்டு வருகின்றார். சிரிஜேஷ் திறன் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விட்டது.
அவரின் இந்த கண்டுபிடிப்புகள் பார்ப்பவர்களின் புருவதை உயர்த்த வைக்கின்றது. இவர் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர். அங்கு கசராகோட் மாவட்டத்தில் வசிக்கின்றார்.
யாருக்கேனும் இது போன்று தேவை எனில் இவர் உருவாக்கி தருவார் அல்லது உருவாக்குவதற்கான வழிமுறைகளை கற்று தருவார் என்பது குறிப்பிடதக்கது.

மின்னுவதெல்லாம் ஆர்கானிக் அல்ல

மந்திரமான ஆர்கானிக்

ஆர்கானிக் இன்றைய வணிக உலகின் மந்திரச்சொல். ஆர்கானிக் என்று சொல்லி விற்கப்படும் பொருளுக்கு இன்றைய விலை மற்றவற்றேhடு ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம். ஆனாலும் விலை எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை என்று மக்களும் ஆர்கானிக் பொருட்களை அதிகம் வாங்குவதை பெருமையாக நினைக்கின்றனர். ஆர்கானிக் என்ற சொல் மட்டுமே தெரிந்தவர்களுக்கு ஆர்கானிக் பொருட்கள் எப்படி இருக்கும் என்று பெரும்பாலும் தெரிவதில்லை. இதனால் வியாபாரிகளும் தங்கள் தொழில் உத்தியை பயன்படுத்தி மக்களை எளிதில் ஏமாற்றுகின்றனர். ஆனால் ஆர்கானிக் பொருட்களை வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என சில இருக்கின்றன. அதில் இந்த  விஷயங்கள் மிகவும் முக்கியம்.
உதாரணமாக, காய்கறிகள் கண்களைக் கவரும் வண்ணம் பளபளப்பாக இருந்தால், அது ஆர்கானிக் அல்ல. இயற்கை பொருட்களின் தோல் மென்மையாக சற்று சுருங்கி இருக்கும். இயற்கை பழங்கள் மற்றும் காய்கறிகள் ஒரே வடிவத்திலும், ஒரே நிறத்திலும் இருக்காது. தக்காளி ஒருவாரம் வரை கெடாமல், தோல் மட்டும் சுருங்கினால் அது ஆர்கானிக்.
அதே போல, நாம் வாங்கும் ஆர்கானிக் காய்கறிகளில் 20ு முதல் 25ுவரை வண்டுகள், பூச்சிகள் இருக்கத்தான் செய்யும். வண்டுகளே ஒதுக்கிய பழங்களையும், காய்கறிகளையும் நாம் வாங்குவது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. வண்டுகள் தாக்கிய பகுதிகளை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு காய்கறிகளை பயன்படுத்தலாம்.
அடுத்ததாக, அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்களில் வண்டுகள் இருந்தாலோ அல்லது பழுப்பு நிறமாக இருந்தாலோ அந்த பொருட்களை தாராளமாக வாங்கலாம். அதை சுத்தப்படுத்தி நம் வீட்டில் சேமித்து பயன்படுத்தலாம். சிறுதானியங்கள் பளீர் என வெள்ளையாக இருந்தால் அதில் பச்சரிசி கலக்கப்பட்டிருக்கலாம். சிறிது பழுப்பு நிறத்தில் இருக்கும் தானியங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. ஆர்கானிக் அரிசிகளில் தயாரிக்கப்படும் உணவு மறுநாள் வைத்தாலும் கெட்டுப்போன மணம் வராது.
அதே போல, ஆர்கானிக் தேனை சுவைக்கும்போது சிறிது துவர்ப்புச்சுவையும் இருக்கும். தற்போது கடைகளில் சர்க்கரை, வெல்லப்பாகை சேர்த்து வேகவைத்த தேன்களே அதிகமாக கிடைக்கிறது.
தொடர்ந்து… முக்கியமாக அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும், காய்கறிகளையும் பயன்படுத்துவதே ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது. ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு என பிரத்யேக மணம் இருக்கும். சுவையும் நன்றhக இருக்கும்.
அடுத்ததாக, செக்கில் ஆட்டிய எண்ணையாக இருந்தால் சற்று விலை அதிகமாக இருக்கும். எள்ளிலிருந்து நல்லெண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆனால் இங்கு விற்கப்படும் நல்லெண்ணெய், எள்ளை விட விலை குறைவு. செக்கில் ஆட்டிய எண்ணையானது நல்ல மணமாகவும், உணவுக்கு சுவையூட்டக் கூடியதாகவும் இருக்கும்.
இதே போல, கீரைகள் பார்ப்பதற்கு பச்சை நிறமாகவும், செழிப்பாகவும் இருந்தால், அதில் மருந்து வாசனை இருக்கிறதா என பரிசோதிக்க வேண்டும். கீரைகள் பார்ப்பதற்கு பளீர் என பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் போதாது. பச்சை மணமும் அதில் இருக்க வேண்டும்.
தொடர்ந்து…பொதுவாக அளவினைப் பொறுத்து மட்டுமே ஆர்கானிக் காய்கறி என  நிர்ணயித்து விடக்கூடாது. வீரிய ரக காய்கறிகள் பார்ப்பதற்கு அளவில் பெரியதாக இருக்கும். பயிர்களுக்கும், கனிகளுக்கும் கொடுக்கப்படும் ரசாயன உரங்களை பொறுத்தே ஆர்கானிக் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
அடுத்ததாக, ஆர்கானிக்கில் பொதுவாக கருப்பட்டி கருப்பாக இருக்கும், நாட்டுச்சர்க்கரை சுவைத்தால் நாக்கு எரியக் கூடாது.
அதே போல, நீங்கள் ஆர்கானிக் கடைகளுக்கு சென்று காய்கறிகள் வாங்குவதாக இருந்தால் எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்ற விபரங்களை விசாரிக்கலாம். விபரங்களை சொல்லாத கடைக்காரர்களிடம் காய்கறிகளை வாங்குவதை தவிர்க்கலாம். பெரிய ஆர்கானிக் கடைகளில் காய்களை வாங்குவதை விட சிறிய வியாபாரிகளிடம் விசாரித்து வாங்குவதே சரியானது.
ஆக…முடிந்தவரையில் ஆர்கானிக் காய்கறிகளை நேரடியாக விவசாயிகளிடமோ அல்லது வீட்டில் மாடித்தோட்டம் அமைத்தோ உற்பத்தி செய்துகொள்ளலாம். இதனால் நம் செலவு குறைவதோடு, ஆரோக்கியமும் அதிகரிக்கும்

தேடல்கள்  தொடரும்…
மேலும், பல தகவல்கள் அறிய… இணைந்திருங்கள் 

ஆழியில் ஓர் ஆலயம் (கோலியாக் நிஷ்கலங் மகாதேவ் ஆலயம்)

ஆழியில் ஓர் ஆலயம்

அமைதியின் உருவாய் ஆக்ரோஷத்தின் மறுவடிவாய் அழகின் அடையாளமாய் இயற்கையின் கொடையாய்  இந்த உலகை Nழ்ந்திருக்கும் நான்கில் ஒரு பகுதி நீர்பரப்பில் பெரியது ஆழி. இந்த பரம்மாண்ட ஆழியின் நடுவே ஓர் ஆலயம் என்றhல் அது ஆச்சர்யமே.. ஆம் ஆர்ப்பரிக்கும் ஆக்ரோஷ அலைகள் இடையே எழுந்தருளியிருக்கும் மகாதேவரின் ஆற்றலை உணர்த்தும் சிவலாயமே கோலியாக் நிஷ்கலங் மகாதேவ் ஆலயம்…
குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இந்த கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நிஷ்களங் மகாதேவ் ஆலயம்.
நிஷ்களங் மகாதேவ் என்றhல் பாவத்தைப்  போக்குகிறவர், எந்தவித களங்கமும் இல்லாதவர் என்று பொருள்.
கரையிருப்பவர்களுக்கு சிறு புள்ளி போல தெரியும்.. கடலின் நடுவே அமைந்திருக்கும் இக்கோவிலும், அதன் பட்டொளி வீசும் கொடிமரமும்.. இந்த ஆலயத்தை முழுமையாக காண்பதோடு அங்கு சென்றும் தரிசிக்க இந்த கடலே இரு புறகும் விலகி வழி ஏற்படுத்தி தருகிறது. தனது ஆர்ப்பரிக்கும் அலைகளை அமைதியாக சுருக்கி சிவனை தரிசிக்க பக்தர்களுக்கு மெல்ல வழிவிடுகிறது.
தினந்தோறும் பகல் ஒரு மணி முதல் இரவு பத்து மணி வரை இவ்வாறhக கடல் உள்வாங்குகிறது. கொஞ்சம், கொஞ்சமாக கல் தூண் மற்றும் கொடிக்கம்பம் தௌpவாகத் தெரிவதுடன், ஒரு பெரிய சமவெளியில் சிறிய இடைவெளியில் 5 சிவலிங்கங்களும் காட்சி தருகின்றன. பக்தர்கள் நிதானமாக கடல் உள்வாங்கிவிட்ட மணல் பரப்பில் நடந்து சென்று ஆலயத்தை அடைகிறhர்கள். இந்த ஆலயத்தில் பாண்டவர்கள் வழி பட்டதன் நினைவாக ஐந்து சிவலிங்கங்கள் சுயம்புவாக அமைந்துள்ளன. அதன் முன் நந்தியும் உள்ளன. இதனருகே ஒரு குளமும் உள்ளது. பாண்டவர்கள் இறைவனை பூஜpப்பதற்கு முன் குளியலாட பயன்படுத்திய இந்த குளத்தில் பக்தர்கள் தங்கள் பாதங்களை கழுவி விட்டு அங்கிருக்கும் சிவனுக்கு தங்கள் கொண்டு வந்த பூ மற்றும் பால், தயிர் ஆகியவற்றhல் அங்குள்ள ஒவ்வொரு லிங்கத்தின் மேலும் அபிஷேகம் செய்து வடநாட்டினருக்கு உரிய பாணியில் பஜனை செய்கிறhர்கள்.
ஆம்… மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, பாண்டவர்கள் வெற்றிமிதப்பில் களியாட்டம் ஆடிக்கொண்டிருக்கவில்லை. மாறhக, யுத்தத்தில் நிகழ்ந்த இறப்பினால் உண்டான தோஷம் கருதி துயரம் அடைந்தனர். தங்களின் ரட்சகனான கிருஷ்ணரிடம் பாவ விமோசனம் தீர வழி கேட்டனர். அவர் ஒரு கரிய நிற தண்டமும், கருப்பு மாடு ஒன்றையும் வரவழைத்து, இக்கருப்பு தண்ட்த்தினை கையிலெடுத்துக் கொண்டு, இம்மாட்டினைப் பின் தொடருங்கள். இவ்விரண்டும், எங்கு வெள்ளை நிறமாக மாறுகின்றதோ, அங்கு, இறைவனை மனம் உருகி வழிபடுங்கள். உங்களின் போரினால் உருவான பாவங்கள் விலக இறைவன் அருள் புரிவான் என்றார். அதன்படியே, அவர்கள் மாட்டினைப் பின்தொடர, கோலியாத்தில் தண்டமும், மாடும் வெள்ளை நிறம் அடைந்த்து. அவ்விடத்திலே ஒரு குளம் வெட்டி, நீராடி, ஐவரும் இறைவனைக் குறித்து தியானித்தனர். ஐவருக்கும் ஐந்து சிவலிங்கம் ந்ந்தியுடன் சுயம்புவாக எழுந்தருளி, பாவ விமோசனம் அளித்தான் இறைவன். இது புராண வரலாறு.
நேரம் நெருங்க நெருங்க அமைதி காத்த கடல்மறுபடியும், ஆர்ப்பரிக்க சிறிது சிறிதாக கரையை நோக்கி முன்னேற ஆரம்பிக்க பக்தர்களும் கரையை நோக்கி விரைந்து வருகின்றனர். சில நிமிடங்களில், கடல் மீண்டும் அந்த கோவிலை முழுமையாக ஆக்கிரமிக்கின்றது. அக்கோயிலின் பட்டொளி வீசும் கொடி மரமும், கல் தூணும் மட்டுமே மறுபடியும் புள்ளியாகத் தெரிகின்றது.
அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கடலில் உள்வாங்கல் அதிகமிருக்கும் . இந்த நாட்களில் மக்களின் கூட்டமும் அதிகமாகவே இருக்கின்றது. இவ்வாலயத்திலுள்ள சிவனை தரிசிப்பதை ஒரு பாக்கியமாக கருதி, பாவ விமோசனம் தேடி பெருவாரியான மக்கள், குழந்தைகள் உட்பட தங்கள் குடும்பத்தினருடன் இங்கு வருகின்றனர்.
இருப்பினும், ஆவணி மாதம் சிவனுக்கு உரிய மாதம் என்பதால் இம்மாதத்தில் கோலியாக்கில் திருவிழாக்கோலம் தான்.
எத்தனையோ புயல் சீற்றம் கொண்ட போதிலும், பூகம்ப நிகழ்வு நடந்த போதிலும், இந்த ஆலயத்தின் கொடி மரமோ, கல் தூணோ பாதிக்கப்படவில்லை என்பது ஆச்சரியப்பட வைக்கும் செய்தி.
இதுபோன்ற கடல் உள்வாங்கும் நிகழ்வு இந்தியாவிலேயே அந்தமான், லட்சத்தீவு ஆகிய இடங்களில் நிகழ்கிறது. ஆங்கிலத்தில் இஸ்துமஸ் (ஐளவாரஅரள) என அழைக்கப்படும் இந்நிகழ்வை பல இடங்களில் நிகழலாம். ஆனால், அந்தக்கடல் நடுவே ஒரு புராதனமான சிவன் கோவில் இருப்பது இங்கு மட்டுமே.. அதுவே இந்த இடத்தின் சுவாரஸ்யம்..
இறை நம்பிக்கையின் சாட்சியாக இன்றளவும் திகழும் இந்த கோலியாக் சிவனை நாமும் வணங்கி பயன் பெறுவோம்.

பயணம்  தொடரும்… இரா.ஜhன்சிராணி கண்ணன்..

ரொக்கமில்லா பரிவர்த்தணைக்கான வழிகள்

ரொக்கமில்லா பரிவர்த்தணைக்கான வழிகள்

ஊழல், கருப்புப்பணம் ஆகிய முறைகேடுகள் நிகழாத நாடாக இந்தியாவை உருவாக்க வலுவான அடித்தளம் அமைக்கும் விதத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும். ஏனெனில், அதிக அளவிலான ரொக்க கையிருப்பே ஊழலுக்கும், கருப்புப்பணத்துக்கும் முக்கிய காரணம் என்கிறhர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. அதென்ன ரொக்கமில்லா பரிவர்த்தனை என  புருவத்தை உயர்த்தும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கான சிறு தொகுப்பே இது.
அதாவது,அதிக அளவில் ரொக்கக் கையிருப்பு வைத்திருப்பது, ஊழலுக்கு வழிவகுக்கிறது. ஊழலால் நாட்டின் வளர்ச்சி தடைபடுவதோடு, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கனவுகளும் தடுக்கப்படுகின்றன.  இந்த ஊழலை தடுக்க, செல்லிடப்பேசி வங்கிச் சேவை, வாலட் என்னும் செல்லிடப்பேசி பணப்பை ஆகியவற்றின் யுகத்தில் தற்போது வாழ்ந்து வரும் நாம், அவற்றின் மூலம், உணவு, வாடகைக் கார்களை அழைத்தல், மேiஜ-நாற்காலிகள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முடியும். ஏற்கெனவே, பெரும்பாலானோர் வங்கி அட்டைகளையும் இ-வாலட்களையும் பயன்படுத்தி வருகிறhர்கள் என்றhலும், ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் பெருகியுள்ளன. ஆம், நாம் ஒருவருக்கு ரொக்கமாக, காசோலையாக, வரைவோலையாக, மின்னணு பணப்பரிமாற்றத்தின் வாயிலாக என பல வித வழிகளில் பணம் கொடுக்கலாம். இதில் மின்னணு முறையில் பணம் செலுத்துவது மிகவும் விரைவான மற்றும் பாதுகாப்பான முறை.
அதாவது, ருPஐ எனும் ருnகைநைன Pயலஅநவே ஐவேநசகயஉநஇ Nநுகுகூ எனும் Nயவiடியேட நுடநவசடிniஉ குரனே கூசயளேகநசஇ சுகூழுளு எனும்  சுநயட கூiஅந ழுசடிளள ளுநவவடநஅநவேஇ  ஐஆPளு எனும்  ஐஅஅநனயைவந Pயலஅநவே ளுநசஎiஉநஇ  ளுBஐ அஊயளாஇ ளுBஐ pயலஇ Aகூஆ கூசயளேகநசஇ டீஒபைநn றயடடநவஇ வைணஉயளாஇ அ-pநளயஇ யசைவநட அடிநேலஇ pயலியடஇ pயலவஅ ஆகிய முறைகளில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.
முதலில், இந்த மின்னணு முறையில் பணம் அனுப்புவதற்கு சில விபரங்கள் தேவை. அவை என்னவெனில், பணம் பெறுபவரின் பெயர், வங்கிக் கணக்கு எண்., வங்கிக்கிளையின் ஐ.எஃப்.எஸ்.சி. எண். மேலும் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்தால் கணக்கு எண் மட்டுமே போதுமானது. நவம்பர் 2005 ல் துவக்கப்பட்ட Nநுகுகூ எனும் முறை வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதான முறையில் மற்றவர்களுக்கு பணம் அனுப்புவதற்கு எளிதாக உதவுகிறது. வங்கியில் நேரடியாகச் சென்று செலுத்தும் முறை தவிர சில வங்கிகள் ஏ.டி.எம். எனப்படும் இயந்திரம் மூலமாகவே இம்முறையில் பணம் அனுப்பும் வசதியை சில வங்கிகள் அளிக்கின்றன.
மொபைல் பேங்கிங் முறையில் ஆப்பிள், ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலமாகவும் இம்முறையில் பணம் அனுப்பலாம். இணையதள வங்கிச் சேவை மூலமாகவும் கணிணி வழியில் இம்முறையில் பணம் அனுப்பலாம். இம்முறையில் வங்கி விடுமுறை நாளன்று மற்ற வங்கிகளுக்கு பணம்  அனுப்ப முடியாது. அனுப்புபவரும் பெறுபவரும் ஒரே வங்கியின் வேறு வேறு கிளைகளில் கணக்கு வைத்திருந்தால் எந்நேரத்திலும் பணம் அனுப்பலாம், உடனே பெறுபவரின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
சுகூழுளு ஒரு வங்கியிலிருந்து மற்றெhரு வங்கிக்கு உடனடியாக பணத்தை மாற்றம் செய்யும் முறை. ரிசர்வ் வங்கியி செயல்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் ஒருவரது வங்கிக்கணக்கில் இருந்து மற்றெhருவரின் கணக்குக்கு உடனடியாக பணத்தை மாற்றுவதற்கு இம்முறை பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது.
என்.பி.சி.ஐ எனப்படும் நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனும் மத்திய அரசு நிறுவனத்தால் நிர்வகிகக்கப்படும் ஐஆPளு சேவை நவம்பர் 2010 ல் துவக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. வருடத்தின் எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் ஒரு வங்கியிலிருந்து மற்றெhரு வங்கிக்கு பணம் செலுத்துவதற்கான ஒரு எளிய நடைமுறை. உங்களது மொபைல் போனில் நிறுவப்பட்ட வங்கியின் ஆன்ட்ராய்டு, ஆப்பிள் செயலி மூலமாகவோ  உங்கள் இணைய வங்கிக்கணக்கு மூலமாகவோ அல்லது கணிணி வழியாகவோ பணம் செலுத்தலாம். சில வங்கிகள் பணம் பெறுபவருக்கு வங்கிக் கணக்கு இல்லாத நிலையிலும் இம்முறையில் அனுப்பப்படும் பணத்தை ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டுலெஸ் கேஷ் எணப்படும் ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் எளிய முறையில் பணம் அனுப்புவதற்கு வழி செய்கிறது.
பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்ற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இணைய வழியில் பணம் அனுப்புவதற்கான எளிய முறை ளுBஐ அஊயளா. பணம் பெறுபவர் இதற்கான ஆன்ட்ராய்டு அல்லது ஆப்பிள் செயலியை தன் மொபைலில் நிறுவி தனது வங்கிக்கணக்கு விபரங்களை அதில் உள்ளீடு செய்து வைத்திருந்தால் இம்முறையில் அனுப்பப்படும் பணமானது அவரது வங்கிக்கணக்குக்கு நேரடியாக மாற்றப்படும்.
உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகையிலிருந்து மற்றெhருவருக்கு பணம் செலுத்த ஓர் உடனடி முறை Aகூஆ கூசயளேகநச. இது அனைவரும் அறிந்ததே.
அடுத்தது.. ஊனுஆ அதாவது, ஊAளுழ னுநுPடீளுஐகூ ஆAஊழஐNநு.
இந்த தானியங்கி பணம் செலுத்தும் மையத்திற்கு சென்று பணம் செலுத்தும் இயந்திரத்தில் நீங்கள் யாருக்கு பணம் செலுத்த வேண்டுமோ அவரது கணக்கு எண்ணில் நேரடியாக கார்டுலெஸ் கேஷ் எனும் முறையில் ஏ.டி.எம். கார்டு இல்லாமலே பணம் செலுத்தினால் உடனடியாக பணம் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும்.
பொதுவாக, வங்கி அட்டை, மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறை அதிகரிக்க வேண்டுமெனில், பயன்படுத்துவதற்கு எளிதானதாக, எளிதில் கிடைப்பதாக, சாதாரணமாக ஏற்கப்படுவதாக, இந்தப் பரிமாற்றத்தில் ஈடுபடும் வணிகர், வாடிக்கையாளர் ஆகிய இரு பிரிவினருக்குமே தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தாத ஒன்றhக, அந்தந்த அளவிற்கு ஏற்ற முறையிலான பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டும்.
அந்த வகையில், சில தனியார் நிறுவனங்கள் வங்கிக்கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கான உரிமங்கள் பெற்றுள்ளன. அந்நிறுவனங்களின் அலுவலகங்களிலோ அல்லது அந்நிறுவனங்களின் முகவர்களிடமோ நீங்கள் பணம் பெறுபவரின் வங்கிக்கணக்கு விபரங்களையும் அனுப்ப வேண்டிய தொகையையும் அதற்குறிய சேவைக்கட்டணத்தையும் செலுத்தினால் உடனடியாக பணம் குறிப்பிட்ட நபருடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அதாவது, ஆக்ஸிஜென் - டீஒபைநnஇ இட்ஸ்கேஷ்  - வைணஉயளாஇ மற்றும் பல நிறுவனங்கள் தம் முகவர்கள் மூலமாக அனைத்து வங்கிக் கணக்குகளுக்கு வருடம் முழுவதும், விடுமுறை நாட்கள் உள்பட 24 மணி நேரமும் பணம் அனுப்பும் வசதியை ஏற்படுத்தியுள்ளன.
அதுமட்டுமில்லாமல் சில செயலிகளும் இம்மாதிரியான பணபரிமாற்றத்திற்கு உதவுகின்றன. அதாவது, அ-pநளயஇ யசைவநட அடிநேலஇ pயலியடஇ pயலவஅஇ ருPஐ போன்ற செயலிகள் தான் அவை. உதாரணமாக ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியான ருPஐ எனும் ருnகைநைன Pயலஅநவே ஐவேநசகயஉந வாயிலான சேவையை  15 தனியார் மற்றும் பொது வங்கிகள் தனது நிறுவன மொபைல் செயலி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்த பிறகு, நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் சிறு வணிகர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துக்கு மாறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரொக்கமில்லா பரிவர்த்தணையை மேற்கொண்டு இந்தியாவில், 21-ஆம் நு}ற்றhண்டில் ஊழலுக்கு இடமில்லை என்ற நிலையை கொண்டு வர வேண்டும்.

கருப்பு பண வேட்டையின் களத்தில்…இரா.ஜhன்சிராணி கண்ணன்









லங்காவி தீவு

அழகிய தீவுகளின் சொர்க்கலோகம்

லங்காவி தீவு

கழுகுகளின் தீவுகள்

நீல நிற தண்ணீரும், மென்மையான வெண்மணல் கடற்கரையும், கானகங்கள் நிறைந்த மலைகளும் ஒன்றhக இருக்கும் இடம் தான்…மலேசியாவின் இயற்கை பரிசளித்த தீவுகளில் ஒன்றhன லங்காவித் தீவு…
இயற்கை எழிலில் தன்னை மறக்க செல்ல வேண்டிய இடம் லங்காவி.  இத்தீவிற்கு இப்பெயர் வர இரண்டு காரணங்களைக் குறிப்பிடுவது வழக்கம். அதாவது, 1800 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் பிரசித்தி பெற்றிருந்த லங்காசுக்கா பேரரசை நினைவூட்டும் அடிப்படையில் இப்பெயர் அமைந்திருக்கின்றது என்பது ஒரு காரணம். மற்றெhன்று, hநடயபே ரூ முயறi  என்ற இரண்டு மலாய் சொற்களின் கூட்டாக அமைந்த பெயர்  என்பது. ஆம்… hநடயபே என்பது கழுகைக் குறிப்பது. இதன் சுருக்கம் டயபே.  முயறi  என்பது செம்பழுப்பு நிறத்தைக் குறிப்பது. ஆக டயபேமுயறi  என்றhல் செம்பழுப்பு  நிறத்திலான கழுகு என்று பொருள். அதே சமயம், லங்காவித் தீவின் சின்னமும் கழுகு தான். இத்தீவிற்கு கெடாவின் பொன்கலன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
லங்காவி என்பது 99 தீவுகளின் ஒரு கூட்டம். எழில் நிறைந்த இத்தீவு மலாக்கா சந்தியின் மூலமாக மலேசியாவில் இருந்து பிரிந்துள்ளது. மலேசியாவிலுள்ள கெடா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த லங்காவித்தீவு  கெடாவிலிருந்து 51 கிமீ மேற்கில் அமைந்துள்ளது. இந்தத் தீவுக்கூட்டங்களின் மொத்த பரப்பளவு 47 ஆயிரத்து 848 ஹெக்டேர். இத்தீவின் கடற்கரை பகுதிகளிலுள்ள தட்டையான சமவெளி பகுதிகளும், ஆங்காங்கே தென்படும் சுண்ணாம்புக்கல் பாறைகளும் காண்போரை கவர்கின்றன. இத்தீவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் காடுகளால் மூடப்பட்ட மலைப்பகுதிகளாகும். லங்காவியில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வறண்ட பருவம் என்றhலும், மார்ச் முதல் நவம்பர் வரை மழைக்காலம் தான். செப்டம்பரில் தான் அதிக மழை பொழியுமாம்.
இத்தீவினை காண நினைப்பவர்கள் கடல் வழியாகவோ அல்லது விமானம் மூலமாகவோ அங்கு சென்றடையலாம். அதுமட்டுமில்லாமல், லங்காவியிலுள்ள சர்வதேச விமான நிலையமானது மலேசியாவிலுள்ள 7 சர்வதேச விமான நிலையங்களில் ஒன்று என்ற பெருமைக்குரியது. இவ்விமானநிலையத்திலிருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர், பெனாங் போன்ற இடங்களுக்கும் விமானச் சேவை உள்ளது. முக்கியமாக இத்தீவில் பல சாலைகளும் அமைந்துள்ளன. உண்மையை சொல்லப்போனால், இங்கு நல்ல மற்றும் பொதுவான போக்குவரத்து என்று எதுவுமில்லை. ஆனால், இத்தீவில் நம்மை ஈர்க்கும் விஷயங்கள் பல உண்டு. ஆம், லங்காவியிலுள்ள கேபிள் கார் பெரிய ஈர்ப்பாகும்.
இது மலைக்கு மேலே அமைந்திருப்பதால், பண்டாய் செனாங் என்ற கானக பகுதியின் அருமையான காட்சியை நாம் எளிதில் கண்டு ரசிக்கலாம். டாப் ஸ்டேஷனில், ஸ்கை பிரிட்iஜப் பார்க்கலாம். ஆனால், அது பராமரிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பல கோலிவுட் திரைப்படங்கள் இந்த ஸ்கை பிரிட்ஜpல் படம் பிடிக்கப்பட்டுள்ளன. நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள அண்டர்வாட்டர் வோர்ல்ட் எனும் பல்வேறு வகையான மீன்கள் அமைந்துள்ள பெரிய அக்வாரியமான இது இத்தீவின் மற்றெhரு முக்கியமான ஈர்ப்பாகும். அவற்றுக்கு உணவூட்டப்படும் நேரத்தில் சென்று பார்;த்தால் காண்பதற்கு அழகாக இருக்கும். இதனை ரசிக்காதவர்கள் ரசனையற்றவர்கள் என சொல்லுமளவிற்கு அழகு. அண்டர்வார்ட் அக்வாரியம் அருகில் இரண்டு ஷhப்பிங் ஜோன்கள் இருக்கின்றன. இதில் நினைவுப்பொருட்கள், சாக்லேட்கள் என்று நாம் எடுத்துச் செல்ல பல விஷயங்கள் அங்கே நல்ல விலையில் கிடைக்கும். அங்கிருந்து லமன்பேடி நெல்வயலுக்கு இலவசமான சுற்றுலா ஒன்றும் கிடைக்கும். இந்த வயல்கள் அருமையான லேண்ட்ஸ்கேப்பிங் கொண்டவை. ஆங்கிலத்தில் விவரங்கள் எழுதப்பட்டுள்ள இங்கிருக்கும் மியூசியத்தில் அரிசியை விளைவிக்கும் முறைகள் தரப்பட்டுள்ளன. சுவாரஸ்யமான தகவல்கள் கிடைப்பதால் ஒரு வழிகாட்டியை அமர்த்தி கொண்டு அங்கு செல்வது பலன் தரும். லங்காவி தீவு சுற்றுலா செல்பவர்கள் ஈகிள் ஸ்கொயரில் Nரிய அஸ்தமனத்தைக் காண மறக்க மாட்டார்கள். அந்தளவிற்கு ரம்யமான காட்சி அது. இங்கு ஒரு பெரிய கழுகின் சிற்பமும், அழகாக வடிவமைக்கப்பட்ட குளங்களும், பாலங்களும் இருக்கின்றன. இரவில் ஒளியூட்டப்படும் போது இவை இன்னும் அழகாக ஜெhலிக்கின்றன.
அடுத்ததாக, லங்காவியிலுள்ள கில்ம் நேச்சர் பார்க்கில் மறக்க முடியாத காட்சிகளும் அனுபவங்களும் நிறைந்திருக்கின்றன. ஆம்.. இது வேறெhரு உலகத்திற்கு செல்வதை போன்று உள்ளது. 100 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இதில், நன்றhக பாதுகாக்கப்பட்ட மாங்க்ரோவ் காடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள வெண்மணல் கடற்கரைகள் நீல நிற லகூன்களுக்கு இடையே அமைந்துள்ளது. அதிலும் இதில் செல்லும் படகு சவாரி இருக்கே அது அருமையிலும் அருமை.. இங்குள்ள அமைதியான ஆற்றில் செல்லும் போது, பார்க்கின் முக்கியமான மரைன் எக்கோ சிஸ்டத்தினுடைய அழகுகளைப் பார்க்கலாம். தொங்கி வளரும் போகா மரங்கள், பிரவுன் ஈகிள்ஸ், மர நண்டுகள், மானிட்டர் லிசார்ட்ஸ் மற்றும் மக்காக் குரங்குகள் என்று பார்க்க நிறையவே இங்கே காணக் கிடைக்கின்றன.
தனித்துவமான சுண்ணாம்பு கல் பாறை படிவங்கள் மாங்க்ரோவ் சதுப்பு நிலங்களில் இருந்து உருவாகியிருப்பதையும் இங்கு நாம் பார்க்கலாம். இந்த அழகான புவியியல் அற்புதங்களுக்குப் பல்வேறு பெயர்களை உள்ளூர் மக்கள் வழங்கியுள்ளனர். ஆம்.. தி டெம்பிள் ஆப் போரோபொடுர், தி எலிபெண்ட் ஸ்டோன், தொங்கும் தோட்டங்கள் என்றெல்லாம் புனைப்பெயரை Nட்டியிருக்கின்றனர். இங்கேயிருக்கும் பெரிய வவ்வால் குகையையும் காணத்தவறக்கூடாத ஒன்று. இது மர்மங்களும் அன்பும் கலந்த கதைகள் நிறைந்த இடம். இறுதியாக திறந்த கடலில் சிறப்பான முறைகளால் மீன்களை பண்ணை முறையில் வளர்க்கும் அரிய முறைகளைக் காணலாம்.  அதுமட்டுமில்லாமல், முதலைப்பண்ணைகளும் இங்கு உள்ளன.
இத்தனை சிறப்புக்குரிய இத்தீவு அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்ற ஓய்வுக்கான ஒரு சுற்றுலா தளம் என்பதை விட குளிர்கால சொர்க்கம் என்று கூறினால் அது மிகையாகாது.
பயணம் தொடரும்...
மேலும், பல தகவல்கள் அறிய… இணைந்திருங்கள்...


இத்தீவில் கண்டிப்பாக வைக்க வேண்டிய  முக்கிய  காட்சிகள்  என்று எடுத்துக்கொண்டோமேயானால்,  த்ரில்லிங்கான கேபிள் கார், Nப்பரான படகு பயணம், ஈகிள் ஸ்கொயரில் Nரிய அஸ்தமனத்தைக் காண  மறக்காதீர்கள். டாப் ஸ்டேஷன் ஸ்கை பிரிட்ஜ் , நீருக்கடியிலுள்ள அண்டர் வாட்டர் வேர்ல்ட், பல்வேறு மீன்கள் அமைந்துள்ள பெரிய அக்வாரியம்.  மாங்க்ரோவ் காடுகள், வெளவால் குகை, பறவைகள் சரணாலயம், மீன், முதலை பண்ணை, ஸ்கை டைவ், ஸ்கை கேப், தமான் லெஜன்டா ஆகியன என்பது குறிப்பிடத்தக்கது. 





ஜல்லிக்கட்டு

தைத்திருநாளாம் பொங்கலுக்கு பிறகு நடைபெறும் 1500 ஆண்டுகளை கடந்த, நம்மை போன்ற தமிழர்களுடைய பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை செய்தது சரியா? தவறh? ஏன் தடை செய்யப்பட்டது? எதற்காக என்பதைப் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பே ,து…
ஜல்;லிக்கட்டு…காதலும் வீரமுமாய் வாழ்ந்த தமிழர்களின் வீர விளையாட்டு ,ந்த ஜல்லிக்கட்டு. ,லக்கியங்களில்;; ஏறுதழுவுதல் என்று போற்றப்படும் ,ந்த பாரம்பரிய விளையாட்டில், முரட்டுக் காளைகளை அடக்குகிற ஆண் மகனைத்தான் பெண்களுக்கு மணமுடிக்கும் வழக்கம் ,ருந்திருக்கிறது. அப்படி வீரத்தின் நிறமாக, கலாச்சாரத்தின் அடையாளமாக , சங்க கால கல்வெட்டில் ,டம் பெற்ற ,ந்த ஜல்லிக்கட்டிற்கு தற்போது ஆபத்து வந்திருக்கிறது. ஆம், மிருகவதை என்ற பெயரில் அப்படியான விளையாட்டு கூடாது என்கின்றனர் அதற்கான ஆர்வலர்கள். அவர்களின் ஆர்வம் பாராட்டக்கூடிய ஒன்று. ஆனால் ,தில் மிருகவதை எங்கே ,ருக்கிறது. 15 அடி முதல் 20 நிமிடம் வரை காளையின் திமிலை பிடித்து சென்றhல் அவன் காளையை அடக்கியவனாய] ஆவான். ,ப்படி ஓரிரு நிமிடங்களில் முடியக்கூடிய விளையாட்டில் வதை எங்கிருக்கிறது என்பது புரியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஸ்பெயின், துருக்கி போன்ற மேலைநாடுகளிலும் ,ப்படியான காளைகளை அடக்கும் வீர விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. சில நாடுகளில் காளை விளையாட்டுகள் முடிந்ததும் அதனை ஈட்டியால் குத்திக் கொன்று விடு கின்றனர். ,ங்கு ,து போன்ற கொடுமைகள் நடப்பது ,ல்லை. அதையெல்லாம் விட மிக நேர்த்தியாக தகுந்த பாதுகாப்புடன் சில நிமிடங்கள் நடத்தப்படும் ,ந்த ஜல்லிக்கட்டு எந்த வகையில் வதைக்கப்படுகிறது என்பதே ஆர்வலர்களின் கேள்வி. தொடக்ககாலத்தை விட ,ப்போது அரசும், தகுந்த அதிகாரிகளும் மேற்பார்வையிட்டு, கட்டுப்பாடுகளை விதித்து நடத்தும் போது எப்படி வதை செய்யப்படுகிறது என்ற கேள்வியும் வருகிறது. அப்போது ஏன் விலங்குகளின் ஆர்வலர்கள் என்று கூறி தடை செய்ய நினைக்கிறhர்கள் என்றhல் வேறு அரசியல் உள்ளே நிலைக்க பார்க்கிறது. அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஏற்பாட்டை நாங்கள் பொறுப்பேற்கிறேhம் என்று தனியார் நிறுவனங்கள் உள்ளே நுழையும் அபாயமும் ,ருக்கிறது அதற்கான முனைப்பு கூட ,தன் பின்னனி அரசியலாக ,ருக்கலாம் என்ற எதிர் தரப்பு கருத்துக்களும் ,ருக்கிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படும் எத்தனையோ சம்பவங்கள், நடவடிக்கைகள்,ருக்கின்றன. அதையெல்லாம் விட்டு விட்டு ,ந்த விளையாட்டை தடை செய்ய காரணம் என்ன? ,து உலக அளவில் தமிழனின் பெருமை சொல்லும் விழாவாக ,ருப்பதாலா? ..
ஜல்லிக்கட்டு குறித்த தகவல்களை சங்க கால ,லக்கிய நு}லான கலித்தொகை தௌpவாக எடுத்துக்  கூறினாலும், ,து ஏறுதழுவுதல் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளது. பண்டைய தமிழர்களின் நாகாPகத்தில் முக்கியமானதாக ,டம் பெற்றிருக்கும் ,ந்த ஜல்லிக்கட்டு பாண்டிய நாட்டு கிராமப்புறங்களில் பெருமளவில் அரங்கேறி வந்துள்ளன. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்னர் ,ருந்தே ஜல்லிக்கட்டு அங்கிருக்கும் அலங்காநல்லு}ரில்  முனியாண்டி சுவாமி, காளியம்மன், முத்தாலம்மன் ஆகிய கிராம தெய்வங்களுக்கும், பாலமேட்டில் மஞ்சமலை சுவாமிக்கும் நேர்த்திக்கடனாகவே நடைபெற்று வந்திருக்கிறது. பொதுவாக, ஆடி 18ம் பெருக்கு முதல் ,ப்பகுதியில் விவசாய பணிகள் ஆரம்பிக்கப்படும். விவசாய பணிகளுக்கு  பயன்படுத்தப்படும் காளைகளுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக தைப்பொங்கல் திருநாளுக்கு முன்பாக அறுவடை செய்த நெல்லில் ,ருந்து  பொங்கல் வைப்பது வழக்கம். பின்னர் விளைச்சலுக்கு காரணமாக ,ருந்த காளைகளை அலங்கரித்து கழுத்துமணி, கால் சலங்கை அணிவிக்கப்பட்டு, கொம்புகளுக்கு வர்ணம்  பூசப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட காளைகளை கிராம மந்தை திடலில் வரிசையாக நிறுத்தி வைத்து கிராம மக்களின் சார்பில் தங்களுக்காக  உழைத்த காளைகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் போன்றவற்றை கொடுத்து மரியாதை செய்யப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட காளைகளை  கிராம மந்தை திடலில் அவ்வூரை சேர்ந்த ,ளைஞர்கள், விரட்டிப் பிடித்து விளையாடி மகிழ்வர். ,வ்வாறு ஆரம்பிக்கப்பட்ட காளை விரட்டு,  பின்னாளில் ஏறு தழுவுதலாக மாறியது. அப்போது காளைகளுக்கு பிடி கயிறு ,ருக்கும். காளைகளும், காளையர்களும் களைப்பு ஏற்படும் வகையில்  விரட்டிப் பிடித்து மகிழ்ந்து வந்தனர். ,ந்த காலகட்டத்தில் உழவுக்கு பயன்படுத்தப்படும், உழவு மாடுகளுக்கு ஆண்மை தன்மை நீக்கப்படும்.  ஜல்லிக்கட்டுவுக்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் மாடுகளுக்கு ஆண்மை தன்மை நீக்கப்பட மாட்டாது. பின்னாளில் ஒரு ,டத்தில் மாட்டை நீண்ட  கயிற்றில் கட்டி வைத்து வடமாடு மஞ்சு விரட்டு என அழைக்கப்பட்டு, தற்போது ஜல்லிக்கட்டாக மாறியது. ,தற்காக அலங்காநல்லு}ரில் முனியசாமி கோயில் திடல், பாலமேட்டில் மஞ்சமலை சுவாமி ஆற்றுத்திடல் ஆகிய ,டங்களில் கோயில்  திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக நிரந்தர வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. ,ங்கிருந்தே காளைகள் அவிழ்த்து விடப்படும். ஆரம்ப காலங்களில் 20 முதல் 40 காளைகள் வரையே கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே ,தை சின்ன மஞ்சு விரட்டு என்றே குறிப்பிட்டுள்ளனர்.  சின்ன மஞ்சுவிரட்டுக்கு வரும் மக்கள் கூட்டத்தை பார்த்து, ,ப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது  ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் 600க்கும் குறையாத காளைகள் பங்கேற்கின்றன. துவக்க காலத்தில் எந்தவித பாதுகாப்பும் ,ல்லாமல் 2005 வரையே  திறந்தவெளி ஜல்லிக்கட்டாக நடந்து வந்துள்ளது. ,தன் பின்னர் காளைகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், காண வரும் கூட்டத்தை  கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியினர் சிறிய அளவிலான பாதுகாப்பு வேலிகளை அமைத்து நடத்தி வந்தனர். தற்போது  முழு அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், உச்சநீதிமன்ற வழிகாட்டு முறைகளின் கீழும், மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு உயர்  அதிகாரிகள், மிருகவதை பாதுகாப்பு அமைப்பினர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.  தமிழகத்தின் ஏராளமான ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்த போதும், அலங்காநல்லு}ரில் நடைபெறும் ஜல்லிக்கட்டே உலக புகழ் பெற்றது. ,ந்த உலகப்பெற்ற ஜல்லிக்கட்டை காண்பதற்காகவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ,ங்கிலாந்து,  ,த்தாலி, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல நாடுகளில் ,ருந்து சுற்றுலா பயணிகள் அலங்காநல்லு}ர் வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருபவர்களில் பல சாதாரண கூலி வேலை செய்பவர்கள் என்றhலும், அவர்கள் தங்களின் குடும்பத்தில் ஒரு  உறுப்பினராகவே காளைகளை கருதுகின்றனர். தாங்கள் உணவின்றி தவித்தாலும், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.  அதுமட்டுமில்லாமல் வயது முதிர்ந்து ,றக்கும் காளைகளை முறைப்படியாக நல்லடக்கம் செய்து சமாதிகள் அமைத்து கோயில் போல் வழிபட்டு வருகின்றனர். ,து  போன்ற சமாதிகள் அலங்காநல்லு}ர் அருகே பாலமேடு, பொந்துகம்பட்டி, வெள்ளையம்பட்டி போன்ற ,டங்களில் உள்ளன.
,த்தகைய பாரம்பரியமும், தமிழனின் உணர்வும் கலந்த ,ந்த வீர விளையாட்டு வருங்கால சந்ததியினரால் காக்கப்படுமா..?

35 ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் இல்லாத நகரம்

35 ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் இல்லாத நகரம்

மிரள வைக்கும் காரணம்


அழகு என்பதற்கு எதிர்பதமாக இன்றளவும் இருந்து வரும் ஆபத்தின் உச்சகட்டமாக ஒதுக்கப்பட்ட ஆள்நடமாட்டமில்லா ஒரு அழகிய நகரின் கதையே இன்றைய தேடல்…
பல மாநிலங்களாக பிரிவுற்றிருந்த இத்தாலியை தனி நாடாக பத்தொன்பதாம் நு}ற்றhண்டில் உருவாக்கிய அரசியல் சமூக செயற்பாடே இத்தாலிய ஐக்கியம் என இன்றளவும் அழைக்கப்படுகிறது. இத்தாலி ஒரு தீபகற்பம் அதாவது ஒரு புவியியற் பிரதேசம். இப்பிரேதசத்தில் அழகிய நகரங்கள் பல இருந்தாலும் அனைவரைiயும் மிரள வைக்கும் நகரம் ஒன்றும் உள்ளது. ஆம், இத்தாலியில் கடந்த 35 ஆண்டுகளாக அங்குள்ள பொதுமக்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான பெனவென்றேh மாகாணத்தில் உள்ள ஒரு நகரம். இந்நகரந்தான் பொதுமக்களால் கைவிடப்பட்ட நிலையில் பேய்வீடு போன்று காட்சி அளிக்கிறது. இதற்கு ஒரு மிரள வைக்கும் காரணமொன்றும் உள்ளது. கடந்த 1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட ஐசிinயை நிலநடுக்கத்தையடுத்து அங்கு குடியிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நகரை மொத்தமாக காலி செய்துவிட்டு உயிர் தப்பினர். சுற்றுலாவுக்கு பெயர் போன இந்நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,500 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். பெரும்பாலான கட்டிடங்கள் மொத்தமாக சேதமடைந்தன. மறுபடியும் வந்து அந்நகரில் குடியிருக்கும் எண்ணம் அங்குள்ள குடிமக்களுக்கு வராததன் முக்கிய காரணமாக கருதப்படுவது பீதியே. அதாவது, மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம்… தங்களின் வாழ்வாதாரம் மொத்தமும் மீண்டும் சீர்குலையலாம்… என்ற அச்ச உணர்வே இதுவரை இந்நகரில் மக்கள் குடியேற மறுத்து வந்ததன் காரணமாக கருதப்படுகிறது.
அதன் பின்னர் இதுவரை கடந்த 35 ஆண்டுகளாக அவர்கள் இங்கு குடியிருக்கும் நோக்கில் வந்ததில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது இந்நகரம் சிறுகச் சிறுக பொதுமக்களால் உயிர் பெற்று வருவதாக அந்நகரின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அழகு நகராக இருந்தாலும், ஆபத்து என்றhல் அனைவரையும் அதிர வைக்கும் என்பதில் அதிசயமேதுமில்லை… என்பதற்கேற்ப இப்பேய் நகரம் எப்போது அனைவரையும் வசிகாPக்கும் சொர்க்க பு{மியாக மாறும் என்பதே இந்நகரைப் பற்றி அறிந்த அனைவரின் கேள்வியும்…

பயணம் தொடரும்…

அழிவின் விளிம்பில் கிராமிய கலைகள்

கிராமங்கள் போற்றும் கிராமியம் 

அழிவின் விளிம்பில் கிராமிய கலைகள் 

பண்டைக் காலத்தில் இருந்தே சுடும் வெயிலும் கடும் குளிரும் உடல் நடுங்க வைத்த நியதி ஒன்று இருந்திருக்கிறது. அங்கே உழைப்பும், ஓய்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே வந்திருக்கின்றது. பசிக்காக மட்டுமே உழைத்து வாழ்ந்தவர்கள் தங்கள் ரசனையையும் மறந்ததில்லை. கற்கால பதிவுகள் சிதைந்து போயிருக்கலாம். பொற்கால சுவடுகளாய் உருமாறி அமைந்திருக்கலாம். ஆனால், உலகமும் உலோகமும் ஒருங்கிணைந்து முயன்றhலும் நம் மூத்தோர்களின் உணர்வுகளையும், உணர்வின் வெளிப்பாடுகளையும், யாரால் மறைக்க முடியும்? பழந்தமிழரின் உள்ளத்திலே ஏற்படும் மகிழ்ச்சி, அன்பு, கோபம், துக்கம், கவலை, ஏக்கம், காதல், கனிவு, போட்டி என உணர்வுகள் பலவும் வௌ;வேறhனாலும் உண்மை, நீதி, அன்பு, சமத்துவம் என உரிமைகள் சார்ந்த ஒடுக்குமுறைகளை மாற்றhரிடமிருந்து உணரும் போது தான் எதிர்ப்பு கிளம்பி போர்க் குணமாகப் பரிணமிக்கிறது. அத்தகைய பரிணாமங்கள் தான் நம் மூத்த குடிகளின் கைவரிசைகளாகவும், இம் மண்ணின் கலைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இக்கிராமியக் கலைகளில் இருந்தே நம் சாஸ்திரிய நடனமான பரதநாட்டியம் தோற்றம் பெற்றுள்ளது என்று பல ஆதாரங்கள் கூறுகின்றன. இக்கிராமியக் கலைகள் ஒரு சில கிராமங்களில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இக்கலையை காசுக்காக ஆசைப்பட்டு கலை சேவை செய்வதாக சிலர் நம் மண்ணில் கலைகளை கடைச்சரக்காகவும் கையாளுகின்றhர்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில் தமிழர் வாழ்வையும் அவர்தம் உரிமை மொழியும் கலைவழி மீட்டெடுக்க இந்த மண்ணில் கலைகளையே ஆயுதமாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எந்தவொரு கலை வடிவமும் அது உயிர் வாழ்வதற்கான சமூகக் காரணங்கள் உள்ளவரை தான் உயிர் வாழும். சமூகக் காரணங்கள் மாறும்போது அக்கலைகள் தானாகவே அழிந்துவிடும். எனவே, இக்கலைகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாக கிராமியக்கலைகள் தென்னிந்தியாவில் மட்டுமன்றி மேலை நாடுகளிலும் சில சமூக ஆர்வலர்களாலும், கலைஞர்களாலும் கொண்டு செல்லப்பட்டது. இக்கலைகளின் பிரிவுகளாக கும்மியாட்டம்,கோலாட்டம், ஒயிலாட்டம், லெசீம் ஆட்டம், கரகாட்டம், பறையாட்டம், சிலா ஆட்டம் என பல ஆடல் வகைகள் உள்ளன. இக்கிராமியக் கலைகள் அனைத்திலும் ஆண்கள் தார்ப்பாச்சி, மஞ்சள் நிற ஜpப்பா சட்டை அணிந்து கொள்வார்கள். பெண்கள் சாரியை கிராமத்து முறையில் கட்டிக் கொள்வார்கள். காலில் சலங்கைகள் கட்டி ஆடுவார்கள். இந்த கிராமியக்கலைஞர்களுக்கு இன்று முறையான அங்கீகாரம் என்று எதுவும் முறைப்படி கிடைக்கவில்லை. அதிலும் இக்கலையில் ஈடுபடும் பெண்களுக்கு பெரும்பாலும் பாதுகாப்பு கிடையாது என்பதே வேதனைக்குரிய நிஜம். அரசின் பல அமைப்புகள் கலைஞர்களின் முன்னேற்றத்தில் அக்கறை எடுத்துக்கொண்டாலும், கலை நிகழ்த்தும் போது அவர்கள் நடத்தப்படும் விதத்திற்கு யார் பாதுகாப்பு அளிக்க முடியும். இப்படியான Nழ்நிலையில், கிராமியக்கலைஞர்கள் தங்கள் வாரிசுகளிடம் கலை அடையாளத்தை இழக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாகவே கூறி வருகிறhர்கள் என்பது தமிழராகிய நம்மை கூனி குறுக வைக்கிறது. நடிகைக்குக் கோயில் கட்டுகின்ற, நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்கின்ற ரசிகர்கள் வாழ்கின்ற மாநிலத்தில் தான் இந்த கிராமியக் கலைஞர்களும் வாழ்கின்றனர் என்பதுதான் வினோதமானது. இந்த கிராமியக் கலைஞர்களும், அவர்களது கலையும் பொலிவுறுமா…?   போற்றப்படுமா..? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்…

பயணம்  தொடரும்… இரா.ஜhன்சி ராணி கண்ணன்.

அமைதியின் கம்பீர ஆலயம் போரோபுதூர் Borobudur

அமைதியின் கம்பீர ஆலயம் போரோபுதூர்

புத்த சம்ராஜ்யத்தின் ஒளி
இந்தோனேஷியாவில் ஓர் அற்புதம்


ஜகார்த்தா இந்தோனேசியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்றhல், மத்திய ஜhவா மாகாணத்தில் உள்ள ‘யோக்யா’என்றழைக்கப்படும் ‘ஜோக்ஜகார்த்தா’ இந்தோனேசியாவின் கலாசாரத் தலைநகரம்.

பவுத்தமும், இந்து மதமும் தழைத்தோங்கிய புனிதத் தலமாக ஜோக்ஜகார்த்தா-விற்கான வரலாற்றுச் சான்றhகப் புகழ்மிக்க ‘போரோபுதூர்’ புத்த கோயிலும், ‘பரப்பிரம்மன்’என்ற சொல்லில் இருந்து மருவிய  ‘பிரம்பானன்’ என்ற பெயருடைய சிவன் கோயிலும் விளங்குகின்றன. இவை இரண்டுமே யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தலங்களாகத் தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியது.

ஆம்.. கம்போடியாவில் உள்ள நமது தமிழ் மன்னன் Nரிய வர்மனால் கட்டப்பட்ட அங்கோர் வாட் புத்தக் கோயிலை விட முன்னு}று ஆண்டுகள் பழமையான போரோபுதூர் ஆலயமானது மகாயான பவுத்த நினைவுச் சின்னமாக விளங்கி வருகிறது. இது ஜோக்ஜகார்த்தாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.

சுமார் இருபத்து ஏழாயிரம் சதுர அடி பரப்பளவும், நு}ற்றுப் பதினைந்து அடி உயரமும் கொண்ட, இந்தோனேசியாவின் மிகப் பெரிய கோயில் என்ற சிறப்புக்குரியது போரோபுதூர். எரிமலைக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோயிலை முழுவதுமாகக் கட்டி முடிக்க எழுபத்து ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. இளம் பச்சை நிற நெற்கதிர்களுக்கும், உயர்ந்த பனைமரங்களுக்கும் இடையே அமைதியான சூழலில் அமைந்திருக்கும் இக்கோயில், 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்ற வரலாற்றிற்கு சாட்சியாக காட்சியளிக்கிறது.
மூடுபனியால் சூழப்பட்டும், பசுமையான மரங்களால் அலங்கரிக்கப்பட்டும் காட்சியளிக்கும் போரோபுதூரில், சூரிய உதயத்தைக் காண சீனா, திபெத், கம்போடியா, இந்தியா என்று பல்வேறு தெற்காசிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த ஆலயத்திலுள்ள காவி உடை அணிந்த புத்த பிட்சுகளுடன் சேர்ந்தமர்ந்து பிரார்த்தனை செய்ய பார்வையாளர்களுக்கும்  சிறப்பு அனுமதி உண்டு.
பதினான்காம் நு}ற்றhண்டு தொட்டு, எரிமலை வெடிப்புகளாலும், நிலநடுக்கத்தாலும், பயங்கரவாதத் தாக்குதலாலும் தொடர் பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறது இந்த போரோபுதூர் என்பதே நிஜம். இப்படியான இயற்கை மற்றும் மனிதப் பேரிடர்களால் சேதமடைந்த போரோபுதூர், யுனெஸ்கோ மீட்புக் குழுவினரால் புனரமைக்கப்பட்டு இன்று கம்பீர மிடுக்குடன் காட்சியளிக்கிறது.
சைலேந்திர ராஜ்ஜpயத்தில், ஜhவனீய-பவுத்தக் கட்டிடக் கலை அம்சங்களுடன் பிரமிட் வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்த போரோபுதூர் கோயில், ஒன்றின் மேல் ஒன்றhக ஆறு சதுர வடிவிலான தளங்களும், அவற்றின் மேல் மூன்று வட்ட வடிவ மேடைகளும், நடுவில் ஒரு முக்கியக் குவிமாடமுமாக, காண்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது.
ஒவ்வொரு தளத்திலும் எழுபத்து இரண்டு விகாரங்கள் உள்ளன. இவ்விகாரங்கள் ஒவ்வொன்றிலும் அமைந்துள்ள சிறு துவாரங்கள் வழியாகப் பார்த்தால் ஓர் அழகிய புத்த சிலை தெரியும். இவ்வாறhக இந்த ஏழு தளங்களையும் சேர்த்து, ஐநு}ற்று நான்கு புத்த சிலைகள் இக்கோவிலில் உள்ளன.
பவுத்த அண்டவியலுக்கு ஏற்ப இந்த ஏழு தளங்களும், காம தாது, ரூப தாது, அரூப தாது என்று மேலும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. மனிதச் சிந்தனைகளையும், மனநிலைகளையும் வகுத்தால், இம்மூன்று தளங்களாகப் பிரிக்க முடியும் என்பதே இந்தக் கட்டமைப்பின் அடிப்படைத் தத்துவம்.
முதல் பிரிவாக உள்ள அனைத்துத் தளங்களுக்கும் அடித்தளமாக அமைந்திருக்கிறது காம தாது. இது மனிதர்களின் அடிப்படை ஆசையாகிய காமத்தைக் குறிப்பதோடு, அவர்களின் ஆழ்மனப் போராட்டங்களையும் சித்திரிக்கிறது. மனித மனதில் தோன்றும் மலிவான சிந்தனைகளுக்கும், பவுத்த சித்தாந்தங்களுக்கும் இடையேயான தொடர் போராட்டங்களின் குறியீடான காமதாது, அறியாமை இருளால் சூழப்பட்ட பாதாள லோகத்தைக் குறிக்கிறது.

இரண்டாவது பிரிவான ரூப தாது காம தாதுவுக்கு மேல் தளம். ஒரு மனிதன் தன்னைக் காம இச்சைகளிலிருந்து விடுவித்துக்கொண்டாலும் உருவத் தோற்றங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அதன் அடிப்படையில் சிந்திப்பதை உணர்த்துகிறது இந்த ரூப தாது. இது புத்தர் தன் இளம்பருவத்தில் இருந்த மனநிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக பார்க்கப்படுகிறது. அதாவது இத்தளமானது பாதாள லோகத்துக்கும், தேவலோகத்துக்கும் இடையிலான ஒரு நிலையைக் குறிக்கிறது எனலாம்..
மூன்றhவது பிரிவான அரூப தாது உருவமற்ற உயர்ந்த சிந்தனை நிலையை உணர்த்துகிறது. அதாவது, உண்மையான மகிழ்ச்சிக்கு வித்திடும் இந்த நிலை, புத்தர் மோட்சம் அடைந்த பிறகான தெய்வீக நிலையாகப் பார்க்கப்படுகிறது. மேலும், காம உணர்ச்சிகளுக்கும், தோற்ற முக்கியத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட இந்த உருவமற்ற நிலை தேவலோகத்துக்கு ஒப்பானதாகும் என்பதையும் இது விளக்குகிறது.
அடுத்ததாக நம் கண்முன் கம்பீரமாக காட்சியளிக்கும் குவிமாடத்தைப்பற்றி ஆராய்ந்தால், கிடைக்கும் விளக்கம் ஒரு அருமையான வாழ்வியல் தத்துவம். ஆம்.. தொடக்கமும், முடிவும் இல்லாதவர் புத்தர் என்பதே குவிமாடம் விளக்கும் அதிபுத்தா தத்துவம். இந்த அதிபுத்தா சித்தாந்தத்தில் இந்தோனேசியா மற்றும் திபெத்திய மக்களுக்கு நம்பிக்கை உண்டு.  அந்த வகையில் காமதாது, ரூபதாது, அரூபதாது ஆகிய தளங்களுக்கு மேல் அமைந்துள்ள குவிமாடத்தில் புத்தரின் சிலை முடிவுறhது இருப்பதால், அது சுயம்புவாகத் தோன்றியிருக்கலாம் என்று அவர்களால் நம்பப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், இந்தக் குவிமாடமானது  ஆசைகள், விருப்பு வெறுப்புகள், வடிவத் தோற்றங்கள் ஆகியவற்றhல் பிணைக்கப்படாத அமைதியான, ஞான நிலையை எட்ட வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.
ஆக.. இந்தோனேசியாவானது, ஜhவனீயப் பெயர்களில் தொடங்கி, கட்டிடக் கலை அம்சங்கள்வரை, இந்தியாவுடன் பெரிதும் ஒத்துப்போவதைப் இந்த ஆலயத்தின் மூலம் நம் கண் கூடாக காண முடிகிறது.
இதற்கான காரண காரியங்களை ஆராய்ந்ததில், மகாபலிபுரத்தில் பல்லவ ஆட்சி நடந்த வேளையில் போரோபுதூரில் சைலேந்திர மன்னரின் ஆட்சி நிறுவப்பட்டிருந்ததாகவும், அவ்வேளையில் கடல் கடந்த வர்த்தகம் ஏற்படுத்திய தொடர்பும், அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட குடியேற்றங்களும் தான் இந்தியாவுக்கும் - இந்தோனேசியாவுக்கும் இடையேயான இந்த கலாசாரப் பரிமாற்றங்களுக்கு வித்திட்டிருக்கலாம் என்று இன்றளவும் நம்பப்படுகிறது.
ஆம்.. போரோபுதூர் கோயில் சுவர்களில் உள்ள எண்ணற்ற கல்வெட்டுகளில் சம்ஸ்கிருத மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதே இதற்கு சான்று. குறிப்பாகக் கோயிலின் மேல் தளத்தில் உள்ள புத்தரின் உருவமும், அவர் விரல்கள் சுட்டிக்காட்டும் முத்திரைகளும் இந்திய யோக சாஸ்திரக் கூறுகளின் படி அமைந்துள்ளன என்பது மற்றெhரு நிஜம்.
இத்தனை சிறப்பம்சங்களை தன்னுள் கொண்டு காலத்தை கடந்து கம்பீரமாக காட்சியளிக்கும் போரோபுதூர், மேல் கோணத்திலிருந்து பார்க்க, புத்தர் வீற்றிருக்கும் மலர்ந்த தாமரை மலராகக் காட்சியளிக்கிறது. தாமரை மலர் என்பது புத்த மதத்தினரால் அதிர்ஷ்டம், தூய்மை மற்றும் நம்பிக்கைக்கான அடையாளச் சின்னமாகப் பார்க்கப்படுவதால், இந்தோனேசியா மட்டுமல்லாது, தெற்காசிய நாடுகளின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கும் போரோபுதூர் அமைதியும், கம்பீரமும் ஒரு சேர விளங்கும் ஆலயமாக ஒளிர்கிறது..

பயணம்  தொடரும்…
மேலும், பல தகவல்கள் அறிய… இணைந்திருங்கள் ..

அங்கம் சிலிர்க்க வைக்கும் அங்கோர் வாட்…

அங்கம் சிலிர்க்க வைக்கும் அங்கோர் வாட்…

தமிழர் வரலாற்றை தாங்கி நிற்கும் கம்போடியா…


உலகிலுள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரிய இந்து ஆலயம் என்றhல் அது கம்போடிய நாட்டிலுள்ள அங்கோர் வாட் ஆலயம் தான். கம்போடியா நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டியதும் இந்த ஆலயம் தான். அதிலும், இதை கட்டியது ஒரு தமிழ்  மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம், அவர் தான் நம் தமிழ் மன்னன் இரண்டாம் சூர்யவர்மன்.
ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன், இப்பிரம்மாண்ட ஆலயத்தை இங்கு கட்டினான் என்பது வரலாறு. இக்கோவில் அமைந்துள்ள இடம் தான் அவனின் தலைநகரமாகவும் இருந்துள்ளது. சுமார் 200 ஹெக்டேர்  நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலானது சுற்றிலும் அகழியால் Nழப்பெற்றது.
அதாவது, ஒரு அகழியும், மூன்று மண்டபங்களும் மத்தியிலுள்ள ஐந்து கோயில்களைச் சூழ்ந்துள்ளன. மேற்கிலிருந்து வரும்போது அகழியின் மேல் அமைந்துள்ள நீண்ட பாலத்தினு}டாக முதலாவது வெளி மண்டபத்தை காணலாம். முதல் மண்டபத்தின் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (உநடைiபே) தாமரை வடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இச்சுவரின் வெளிப்புறம் தூண்களோடு கூடிய பால்கணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றhல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அங்குள்ள அனைத்து  மண்டபங்களிலுள்ள சுவர்களிலும் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழி மூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இதன் இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ள சிங்கச்சிலைகளுடன் கூடிய படிக்கட்டு வாயிலாகவே அங்கு செல்ல முடியும். இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகளும் ரம்யமாக காட்சியளிக்கின்றன. மூன்றhவது மண்டபம், உயர்ந்த வநசசயஉந இன் மீது அமைந்துள்ளதோடு ஒன்றேhடொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அழகுற அமைந்துள்ளது.
பெரும்பாலும், மண்டபங்களிலுள்ள கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் சிறிய கோவில் போன்ற அமைப்புகளுடன் இரண்டு நு}லகங்கள் உள்ளன.
அகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளிகளமைந்த பூங்காக்களும் உள்ளன.
இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3 புள்ளி 6 கிலோ மீட்டர் நீளம் கொண்டது எனக் கூறப்படுகிறது. இதனை கற்பனை செய்து பார்த்தோமேயானால் அதன் பிரம்மாண்டம் நம்மை புருவம் உயர்த்த வைக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இது வரை நாம் அறிந்த தமிழர்களின் சாதனைகளிலேயே மிக சிறந்தது இதுவென்றhல் அது மிகையாகாது.
பன்னிரெண்டாம் நு}ற்றhண்டில் சூரியவர்மனால் தொடங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்கள் கழித்து நிறைவு பெற்றதாம். இந்த ஆலயத்தை கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.
கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்தது என்ற மூதாதையர் மொழிக்கேற்ப இரண்டாம் Nரியவர்மன் கட்டிய வைணவ கோவிலை அவருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஆறhம் ஜெயவர்மன் புத்த கோயிலாக மாற்றியதாக வரலாறு கூறுகிறது. அதுமட்டுமில்லாமல், இன்றளவும் அந்த ஆலயம் புத்த ஆலயமாகவே விளங்கி வருகிறது என்பதே உண்மை.
அடர்ந்த காட்டிற்கு நடுவே இக்கோவில் அமைந்திருப்பதினால் பதினாறhம் நு}ற்றhண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலக பயன்பாட்டிற்கு வந்தது எனவும் கூறப்படுகிறது.
பின்னர் ழநசேi ஆடிராடிவ என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தனது புத்கத்தில் இக்கோவிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத் தொடங்கியது. அதன் பின்னரே, இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணிகளின் வாயிலாகவே, இது தமிழர்களாகிய நாம் கட்டியது என தெரிய வந்தது.
இன்றைக்கு இருக்கக் கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என இன்றைய பொறியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த கால கட்டத்தில் வெறும் 27 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றhல், நம் தமிழர்கள் கட்டிய இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய அரசு அந்நாட்டின் தேசியக்கொடியில் அங்கோர் வாட்-ஐ தேசிய சின்னமாக பொறித்துள்ளது.
இதில் பெருமைக்குரிய விஷயம் என சொன்னால், வைணவத் தளமான இந்த புத்த ஆலயமானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே பெரியது என்பது.
கலை பொக்கிஷமாக திகழும் இக்கோவிலின் திரும்பிய திசைகள் எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர்.
பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட இக்கோவிலின் அதிசயத்தக்க சிறப்பு என்றhல், அது... 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட, இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை என்பது தான். அதாவது, பூமியிலிருந்து 1000 அடிக்கு மேல் வானில் பறக்கும் விமானத்திலிருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது என்பது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே..
இப்படி பல வரலாறுகள் தமிழனின் கலையை தாங்கியவாறே வலம் வருகிறது. ஆம்.. வரலாற்றில் தமிழனின் கலை குறிப்பிடப்பட்டுள்ளதா..? அல்ல… தமிழனின் கலைகள் நிறைந்தது தான் வரலாறh..? என்பதும் நாம் அறியாத நிஜமே…

பயணம்  தொடரும்…

மேலும் பல தகவல்களுக்கு.. இணைந்திருங்கள்

உலகின் தலைசிறந்த நகரம் - வியன்னா

மெர்சர் என்ற நிறுவனம் உலகின் தலைசிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. மொத்தம் 231 நகரங்களை வைத்து மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரமும், 3-வது இடத்தை நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரமும் 4-வது மற்றும் 5-வது இடங்களை ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கோவர் நகரங்களும் பிடித்துள்ளன. ஆசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றhன சிங்கப்பூர் இந்தப் பட்டியலில் 25-வது இடத்தையும், அமெரிக்காவின் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரம் இதில் 29-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கும் பாக்தாத் உலகின் மோசமான நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. தொடர்ந்து 8-வது வருடமாக வியன்னா இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆற்றுக்குள் ஆயிரம் லிங்கம்...

ஆற்றுக்குள் ஆயிரம் லிங்கம்...

சால்மலாவில் சஹஸ்ர லிங்கம்...


லிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம்.. அதிலும் வடிவம் உடைய, வடிவம் அற்ற என்ற இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட அருவுருவமற்ற நிலை இது. லிங்க வழிபாடு என்பது இந்தியாவில் மிகவும் பழமையானது. அதிலும், சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ்வழிபாடு நிலவியிருக்கக்கூடும் என பல சான்றுகள் கிடைத்துள்ளன.
அந்த லிங்கம் ஓடும் நதியிலிருக்கும் பாறைகளில் இருக்கின்றன என்றhல் ஆச்சர்யமும்.. அதிசயமுமாகவே தோன்றுகிறது நம்மில் பலருக்கு.. அதிலும் ஒரு லிங்கம் கூட அல்ல சஹஸ்ர  லிங்கங்கள்.. அதென்ன சஹஸ்ர லிங்கங்கள்.. சஹஸ்ர என்றhல் ஆயிரம் என பொருள்.. ஆம்.. ஆயிரம் லிங்கங்கள் ஆற்றிற்குள் தனக்குத்தானே ஜலாபிஷேகம் செய்துக் கொண்டிருக்கின்றன. அந்த அதிசயம் நிறைந்த நதி எங்கிருக்கிறது.. அந்த நதியிலுள்ள லிங்கள் எங்கு இருக்கின்றன என்பதை இந்நிகழ்ச்சியில் நாம் காணலாம்…

கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் உள்ள சால்மலா ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் இந்த சஹஸ்ர லிங்கங்கள் இருக்கின்றன.
ஆம்.. கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சீர்சி என்ற ஊரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆற்றை அடையலாம். அந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் தான் ஆயிரம் லிங்கங்கள் இருக்கின்றன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான். ஆற்று நீரோட்டம் உள்ள பகுதிகளில் தான் இந்த அத்தனை லிங்கங்களும் உள்ளன.
இந்த லிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான இங்கு தென்மேற்கு பருவ மழையின் போது வெள்ளம் கரை புரண்டு ஓடும். அப்போது இந்தப் பகுதியைப் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஆலயங்களில் உள்ள லிங்கங்களுக்கு நடத்தப்படுவது போல் இந்த லிங்கங்களுக்கு அபிஷேகம் எதுவும் தேவையில்லை. ஏனெனில் இந்த லிங்கங்களுக்கு எந்நாளும், எப்பொழுதும் நீரால் அபிஷேகம் தான். இது தான் இங்குள்ள சஹஸ்ர லிங்கங்களின் சிறப்பாகும். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவின் போது, இந்தப் பகுதியில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
இந்த இடத்திற்கு வருவது ஒரு வித மன அமைதியையும் கொடுக்கிறது. சுற்றிலும் பச்சைப்பசேல் என்ற மரங்களும், சலசலத்து ஓடும் நதியும், அதன் நடுவே அமைந்திருக்கும் லிங்கங்களும் ஆத்ம திருப்தியைக் கொடுக்கின்றன. இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை, இந்தப் பகுதியில் இருக்கும் போது நாம் உணர முடிகிறது.
இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. யாராக இருந்தாலும், இப்படியொரு சிந்தனையை வெளிப்படுத்தியவர், மிகப்பெரிய மகானாகவே இருக்க வேண்டும் என்கின்றனர், இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள்.
இதே போல கம்போடியா நாட்டில் ஓடும் ஒரு ஆற்றிலும் ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கம்போடியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோவில் அங்கோர்வட். இங்கிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கபல்சியான் என்ற ஊரில் ஓடும் ஆற்றில் தான் இந்த ஆயிரம் லிங்கங்களும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.
இங்கு சிவலிங்கம் தவிர, ராமர், கிருஷ்ணர், லட்சுமி போன்ற சுவாமி சிலைகளும் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. ஆனால் இந்தப் பகுதிக்குச் செல்ல சபரிமலையைப் போன்று, காடுமேடுகளைக் கடந்து தான் செல்ல வேண்டும். கபால் சியான் என்றhல் ‘பாலம்’ என்று பொருள். இங்கு இயற்கையாக அமைந்த கல் பாலம் ஒன்று இருக்கிறது. இதன் வழியாகத்தான், சஹஸ்ர லிங்கம் இருக்கும் இடத்தை அடைய வேண்டும். ஆறு மட்டுமின்றி இங்கு 50 அடி உயரம் கொண்ட ஒரு நீர்வீழ்ச்சியும் இருக்கிறது.
இந்தியாவின் ஒரு கரையில் உள்ள கர்நாடக மாநிலத்திலும், பல மைல்களுக்கு அப்பாலுள்ள கம்போடியா நாட்டிலும் ஒரே போன்று ஆயிரம் லிங்கங்கள் வடிக்கப்பட்டிருப்பதும், அதுவும் அவை அனைத்தும் ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளிலேயே செதுக்கப்பட்டிருப்பதும், இரண்டிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பாமல் இல்லை.

தேடல்கள் தொடரும்..
இரா.ஜhன்சிராணி கண்ணன்

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பீன்ஸ்

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பீன்ஸ்

பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள. அவைகள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.
சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்து பீன்ஸ். இந்த நோயால் அதிகம் மக்கள் அவதியுறுகிறார்கள் இதற்கு தீர்வாக பல சிகிச்சைகள் முன்வைக்கப்பட்டாலும் பிரச்சனை என்னவோ அப்படியேதான் இருக்கிறது.  
1. ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும்.
2. நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன. இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது. இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தௌpவடையச் செய்கிறது. லு}ட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.  
3. எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
4. இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.  
5. இரைப்பைப் பிரச்சனைகளைச் சரிசெய்யும். வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.  
6. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஒருநாளுக்குத் தேவையான ஃபோவேட் சத்துக்களைத் தரும். வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும்.

கடலு}ர் - cuddalore

கடலு}ர் மாவட்டம்

கடலு}ர் மாவட்டம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்று. இதனை கிழக்கே வங்காள விரிகுடாவும், பிற பகுதிகளில் விழுப்புரம், பெரம்பலு}ர், அரியலு}ர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் சூழ்ந்து உள்ளது. இந்த மாவட்டம் 3678 ச.கி.மீ. பரப்பளவும், 57.5 கி.மீ நீளமுள்ள கடற்கரையும் கொண்டது.
 முன்பு தமிழ் நாட்டில் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் இப்பகுதி தென்னாற்காடு மாவட்டமாக இருந்தது. 1993இல் விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டபின் தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம் ஆகியது. பின்னர் கடலு}ர் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
 இம்மாவட்டம் நிர்வாக வசதிக்காக கடலு}ர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, புவனகிரி என ஒன்பது வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடலு}ர் நகராட்சியே இம்மாவட்டத்தின் தலைநகரமும், பெரிய நகரமுமாகும்.

வரலாற்று தகவல்கள்
சரித்திரக் குறிப்புகளின்படி சங்க காலத்திற்குப் பின் பல்லவர்களும், சோழர்களும், முகலாயர்களும், மற்றும் பல அரச பரம்பரையினரும் இப்பிரதேசத்தை ஆட்சி செய்துள்ளனர்.
 சோழ மன்னர் முதலாம் பராந்தகச் சோழன் (907-935) வீர நாராயண சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் ஒரு ஊரினை உருவாக்கினார். (வீர நாராயணன் என்பது அவரது சிறப்புப் பெயர்) அதுவே இன்று காட்டு மன்னார்கோயில் என்று அழைக்கப்படுகிறது.
 இந்த ஊருக்கு அருகிலேயே அவருடைய மகன் ராஜhதித்திய சோழனால் விவசாயிகளின் நலன் கருதி, ஞவீர நாராயணன் ஏரிங என்ற பெரிய ஏரி ஒன்று வெட்டப்பட்டதுஸ அந்த ஏரிதான் இன்று ஞவீராணம் ஏரிங என்று அழைக்கப்படுகிறது.
 1600ஆம் ஆண்டுக்குப் பின் ஐரோப்பாக் கண்டத்தின் டென்மார்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், பிரான்ஸ், மற்றும் பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்பகுதிக்கு வணிகம் செய்வதற்காக வந்துள்ளனர். இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பாண்டிச்சேரி பகுதியிலும், பிரிட்டிஷார் கடலு}ர் பகுதியிலும் வணிகம் செய்வதாகக் கூறிக்கொண்டு தங்கள் குடியிருப்புப் பகுதிகளை அமைத்து ஆதிக்கம் செலுத்தினர். ஆதிக்க ஆசையில் இப்பகுதி பலமுறை போர்க்களமானது.
 பிரிட்டிஷhரின் ஆட்சி காலத்தில் கடலு}ர், சிறிது காலம் தலைமை அதிகார மையமாகவும், முக்கியமான துறைமுக நகரமாகவும் இருந்தது. ச அவர்கள் காலத்திலிருந்தே இப்பகுதி கடலு}ர் என்று அழைக்கப்படுகிறது.
 ஆனால் முற்காலத்தில் பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு என மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் என்பதால் ஞகூடலு}ர்ங என்று அழைக்கப்பட்டதுஸ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூடலு}ர் 1780இல் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் ஞஇஸ்லாமாபாத்ங என்ற பெயரில் இருந்தது. 1782இல் அவரது மறைவுக்குப் பிறகு 1783இல் ஞகடலு}ர் போர்ங மூலம் ஆங்கிலேயர் கைப்பற்றி பெரிய துறைமுகமாக மாற்றினர். தங்கள் நாட்டுடன் வணிகத் தொடர்புக்கு இந்தத் துறைமுகத்தையே அதிகம் பயன்படுத்தினர். இங்கிருந்து கப்பல்கள் மூலம் பெருமளவில் பொருட்கள் அனுப்பப்பட்டதுஸ
 குறிப்பாக அவர்கள் தொடங்கிய சர்க்கரை ஆலையின் (நு.கூ.னு.PAசுசுலு டுகூனு 1782) சரக்குகளும் பரங்கிப்பேட்டை இரும்பு உருக்கு ஆலையில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்களும் இங்கிருந்தே இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
 இயற்கைத் துறைமுக நகரமான கடலு}ரின் அன்றைய பெருமையை வெளிப்படுத்தும் அடையாளங்கள் இன்றும் இங்குள்ளன. ஐரோப்பியக் கட்டிடக் கலையில் அமைந்த சில கட்டிடங்களும் ஆங்கிலேயர்கள் பெயர்கள் கொண்ட சில தெருக்களும் இந்நகரின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.
 இம்மாவட்டத்தின் ஆட்சியாளராக ராபர்ட் கிளைவ் இருந்தபோது கார்டன் ஹவுஸ் என்ற கட்டிடத்தில் தங்கியிருந்தார். இக்கட்டிடத்தின் கூரை, செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்டுள்ளது.
 கடலு}ரிலிருந்து 35கி.மீ. தூரத்தில் கடற்கரையில் அமைந்துள்ள பரங்கிப்பேட்டை முன்பு போர்டோ நோவோ என்று அழைக்கப்பட்டது. இங்கு போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார் என அடுத்தடுத்து ஆதிக்கம் செலுத்தினர். மேலும் இங்குதான் மைசூர் மஹhராஜhவிற்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே போர் நடந்தது.
நீர்வளம்
நதிகள் கடலில் சங்கமிக்கும் கழிமுகப் பகுதியான இம்மாவட்டத்தினை தென்பெண்ணையாறு, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு, கொள்ளிடம் ஆகிய நதிகள் கடந்து செல்கின்றன.
தென்பெண்ணையாறு
 பெங்களூரிலிருந்து 60கி.மீ. தூரத்தில் உள்ள நந்திமலையில் தோன்றி, கர்நாடகம், தமிழ்நாடு மாநிலங்கள் வழியாக 391கி.மீ தூரம் ஓடி, கடலு}ர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கெடிலம் ஆறு
 விழுப்புரம் மாவட்டத்தில் தோன்றி கடலு}ரில் வங்காளவிரிகுடாவில் கலக்கிறது. இச்சிறு நதியைப் பற்றி தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளாறு
 சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையில் தோன்றி 193கி.மீ தூரம் பயணித்து பரங்கிப்பேட்டையில் கடலில் கலக்கிறது. இந்நதியில் முக்கிய துணையாறான மணிமுக்தா நதி இம்மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றுடன் இணைகிறது.
 இந்நதிக்கரையில் உள்ள புவனகிரிதான் மகான் ஸ்ரீராகவேந்திரர் பிறந்த ஊராகும். இங்கு அவருக்கு ஒரு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம்
 காவிரி ஆறு திருச்சி அருகே முக்கொம்பில் இரண்டாகப் பிரிகிறது. இங்குதான் மேலணை உள்ளது. இதில் வடகிளையே ஞகொள்ளிடம் ஆறுங எனப்படுகிறது. 150கி.மீ. தூரம் ஓடி பரங்கிப்பேட்டைக்குத் தெற்கே 5கி.மீ. தொலைவில் கடலில் கலக்கிறது. இந்நதி கடலு}ர் மற்றும் நாகப்பட்டினம் இடையேயான எல்லையில் பாய்கிறது.
 மேலும் இங்கு வீராணம் ஏரி, வெலிங்டன் ஏரி, பெருமாள் ஏரி என மூன்று பெரிய ஏரிகளும் உள்ளன.
விவசாயம்
நெல், கரும்பு, சோளம், ராகி, வரகு, கம்பு, சிறுபயறு, உளுத்தம்பருப்பு, உள்ளிட்ட பல உணவுப்பொருட்கள் இங்கு விளைகிறது.
 இம்மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது. இங்கிருந்து பல நாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 இங்குள்ள பாலு}ரில் காய்கறி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இது 1905இல் அன்றைய மதராஸ் மாகாணத்தின் 2ஆவது ஞவிவசாய ஆராய்ச்சி நிலையமாகங தொடங்கப்பட்டது.
தொழில்வளம்
இங்கு நெய்வேலி அனல்மின் நிலையம், பழுப்பு நிலக்கரிச் சுரங்கம், சர்க்கரை ஆலைகள், மீன் பதப்படுத்துதல், மீன் எண்ணை உற்பத்தி, சிப்காட் தொழிற்பேட்டையின் தொழிலகங்கள் என பல தொழிற்சாலைகள் உள்ளன.

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி

கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், கும்பகோணம் டிகிரி பில்டர் காபி இன்னும் ஸ்பெஷல்..
சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றhல், ஒரிஜpனல் சுவை காபியை பருகலாம்.
நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். பி எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்
கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி. இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, டிகிரி என்பர். அப்பாலில் தயாரிப்பதால், கும்பகோணம் டிகிரி பில்டர் காபி என்ற பெயர் உண்டானது.
கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது... என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது.

ஒரு நதி சாக்கடையான வரலாறு

ஒரு நதி சாக்கடையான வரலாறு

நதியை சாக்கடையாக்கிய மோசமான பெருமை, நமக்கு உண்டு. கூவம் என்றதும் மூக்கை பிடிக்கும் அளவிற்கு வீசும் துர்நாற்றம் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், படகு போக்குவரத்துக்கும், மக்கள் மீன் பிடித்து உண்ணுவதோடு சுற்றுலா தலமாகவும் கூவம் இருந்தது என்பது வரலாறு. கூவத்தை சீரமைக்கிறேhம் என்று, அரசியல்வாதிகள் மாறி மாறி, மக்கள் பணத்தை கொள்ளையடித்தது தான் மிச்சம். கூவத்தை மீண்டும் உயிர்ப்பிக்க தேவை, நேர்மையான வலுவான தலைமை.

அணையில் பிறக்கும் கூவம்

கடந்த, 65 ஆண்டுகளுக்கு முன், வேலு}ர் மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம், கேசவரம் பகுதியில், 437 மீ.,நீளத்தில், 16 ஷட்டர்களுடன், கேசவரம் அணை கட்டப்பட்டது. பாலாற்றில் இருந்து கல்லாற்றுக்கு வரும் தண்ணீர், கல்லாற்றில் இருந்து கேசவரம் அணையை வந்தடைகிறது.அவ்வாறு வந்தடையும் நீர், கேசவரம் அணையில் இருந்து, ஒருபக்கம் கொற்றலை ஆறாகவும், மறு பக்கம் கூவம் ஆறாகவும், பிரிந்து ஓடுகிறது.
கேசவரம் அணையில் உள்ள,16 ஷட்டர்களும், 10 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. மேலும், அணையின் கட்டுமானம் சேதமடைந்துள்ளது.கேசவரம் அணையின் வறண்ட நிலையை பயன்படுத்தி, செங்கல் சூளை, மணல் திருட்டு என ஆரம்பிக்கும், கூவம் ஆறு, பேரம்பாக்கம் வழியாக செல்கிறது.கூவம் என்னும் கிராமத்தில் உள்ள, கூவம் ஏரியின் கலங்கலில் இருந்து வெளியேறும் நீர், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, சத்திரை வழியாகவும், பன்னு}ர், கீழச்சேரி வழியாக சென்று, மப்பேடு அருகில் கூவம் ஆற்றில் கலக்கிறது.

இதையடுத்து அதிகத்தூர், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம், பருத்திப்பட்டு, திருவேற்காடு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக, 72 கி.மீ., தூரம் பயணித்து, சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது.


மணல் திருட்டும் ஆக்கிரமிப்பும்

கூவம் ஆறு செல்லும் வழித்தடம், கேசவரம் அணையில் இருந்து, ஆவடி பருத்திபட்டு வரை மணல் திருட்டாலும், ஆக்கிரமிப்பாலும் வறண்டு காணப்படுகிறது
பூந்தமல்லி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில், அரண்வாயல் குப்பம் கிராமம் அருகே, பெரிய நிறுவனங்கள், கூவம் ஆற்றை பாதியளவுக்கு ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டி வருகின்றன
ஆவடி - பருத்திபட்டு வரை, கழிவுநீர் கலப்பு இல்லாமல் வரும் கூவம் ஆறு, ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காடு பகுதியில் உள்ள வீரராகவபுரத்தில், ஆவடி மற்றும் திருவேற்காடு நகராட்சியில் வசிக்கும் மக்களால் உபயோகப்படுத்தப்படும் மொத்த கழிவுநீரும் கலக்கிறது.
சென்னீர்குப்பம் பகுதியில், சாயப்பட்டறையின் கழிவுநீர் மொத்தமும் கூவம் ஆற்றில் கலக்கிறது. இதுபோல், சென்னையில், கூவம் செல்லும் வழித்தடத்தில், 40க்கும் மேற்பட்டஇடங்களில் கழிவுநீர் கலக்கிறது.

கூவத்தின் தற்போதைய நிலை

கூவம் ஆறு பிறக்கும் கேசவரம் அணையில் இருந்து, ஆவடி - பருத்திபட்டு வரை நீர் உள்ள பகுதிகளில் பறவைகள், மீன் இனங்கள் என, கூவம் ஆறு உயிர்ப்புடன் இருப்பதை காண முடிகிறது. இதனால், 72 கி.மீ., தூரத்தில், 45 கி.மீ., தூரமான ஆவடி வரை உயிர்ப்புடன் இருக்கும் கூவம் ஆறு, திருவேற்காட்டிலிருந்து சென்னை வரையிலான,27 கி.மீ., கூவம் செத்துவிட்டது.

கூவம் ஆற்றை உயிர்ப்பிக்க முடியுமா?

திருவேற்காட்டில் இருந்து, நேப்பியர் பாலம் வரை, கூவம் ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். இது அமைக்கும் செலவை, அந்தந்த நகராட்சி மற்றும் மாநகராட்சி மண்டலங்கள் மூலம் செய்யும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 30 - 80 லட்சம் ரூபாய் வரை மட்டுமே, பராமரிப்புடன் செலவாகும். இதனால், கூவம் ஆற்றிற்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே செல்லும். இந்த சுத்திகரிக்கப்பட்ட நீரை, உள்ளாட்சி அமைப்புகள் பூங்கா பராமரிப்பு, கட்டட பணி உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தும் பட்சத்தில், சுத்திகரிப்பு நிலையத்திற்கு செய்யப்பட்ட செலவும் குறையும்; கூவமும் சுத்தமாகும் கூவம் கரையோரம் வசிக்கும் ஆக்கிரமிப்பு குடிசைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் கூவம் கரையோரம் சாலை அமைக்க வேண்டும். அவ்வாறு சாலை அமைக்கும் பட்சத்தில் கூவம் ஆற்றில் குப்பை கொட்டினாலோ, கழிவுநீர் கலந்தாலோ, மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிய வரும். இதனால் கூவம் ஆற்றில், மறைமுகமாக குப்பை கொட்டும் செயல் தடுத்து நிறுத்தப்படும். சென்னையில் போக்குவரத்து நெரிசலும் குறையும் கூவம் ஆற்றில் படகு சவாரி, பூங்காக்கள், சுற்றுலாத் துறை மூலம் அமைக்கவேண்டும்.இந்த பணிகள் நடைபெறும் பட்சத்தில், கூவம் ஆறு, லண்டன் தேம்ஸ் நதிபோல், சென்னை தேம்ஸ் நதியாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

விவசாயம் செழித்தோங்கும்

கேசவரம் அணையில், 10 ஆண்டுகளாக, எந்தவித தடையுமின்றி மணல் திருட்டு நடக்கிறது. இதனால், கேசவரம் அணை உயர்ந்து தாழ்ந்து உள்ளது. அணையில் நீர் தேக்கி, விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தோம்; இப்போது, அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை. அணையில் நீர் தேக்கினால், இந்த பகுதியில் விவசாயம் செழித்தோங்கும்.

சமூக விரோத செயல்கள்

கேசவரம் அணையை பராமரிப்பதற்காக, முன்பு, இரண்டு ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதனால், அணை பாதுகாப்புடனும், பராமரிப்புடனும் இருந்தது. இப்போது, யார் வேண்டுமானாலும் அணைக்கு செல்லலாம். அணையில் சமூகவிரோத செயல்கள் அதிகளவில் நடக்கின்றன. இதை தடுக்க, அணையின் பழுதுகளை சரி செய்து, கண்காணிக்க ஆட்களை நியமிக்க வேண்டும்.

வாகன புகை வாழ்க்கைக்கு பகை

கோவை நகரில் காற்று மாசு அதிகரிப்பு... 

வாகன புகை வாழ்க்கைக்கு பகை 

குழந்தைகள், முதியோர் பெரும் பாதிப்பு


கோவையில் ஒருபுறம் நாளுக்கு நாள், வாகனங்களில் இருந்து கரும்புகை அளவு கூடிக் கொண்டே வருகிறது. மறுபுறம், வாகன புகை பரிசோதனை சான்றிதழ் பெறுதல் என்பது வெறும் கண்துடைப்பாக மாறிவருகிறது. இதனால், காற்று மாசு அதிகரித்து, குழந்தைகள், முதியோர் சுவாசப் பிரச்னைகளால் அவதிப்படுவது அதிகரித்துள்ளது.
கோவை நகரில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். பல லட்சம் மக்கள், தினமும் வந்து செல்கின்றனர். இத்தனை லட்சம் மக்களுக்கு, மெட்ரோ ரயில், மின்சார ரயில் போன்ற மக்கள் போக்குவரத்து இல்லாததால், தனிநபர் வாகனங்கள், ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன.
இவற்றைத் தவிர்த்து, மக்கள் பயன் பாட்டுக்கான பஸ்கள், டாக்சி, ஆட்டோக்கள் போன்ற வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே
இருக்கிறது.
அதேபோன்று, நகரின் வர்த்தகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சரக்கு வாகனங்களும், புற்றீசலாக பெருகிக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே, சென்னைக்கு அடுத்ததாக கோவையில் நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுகின்றன. அரசுக்கும், அதிகாரிகளுக்கும் வருவாயை வாரித் தந்து கொண்டிருக்கின்றன. இவர்களின் முக்கியக் கடமைகளில் ஒன்று, வாகனங்களில் வெளி வரும் புகையின் அளவைக் கண்காணித்து, கட்டுப்படுத்துவது.
ஆனால், அந்த கடமையை அவர்கள், காசுக்காக கண்டு கொள்ளாமலிருப்பதன் விளைவாக, நகரில் காற்றின் மாசு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதில், அரசு பஸ்கள் தான், முதலிடத்தில் இருக்கின்றன. கோவை நகரிலுள்ள 17 அரசு போக்குவரத்து கழக பணி மனைகளிலிருந்து 1,282 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாகனங்கள், மற்ற வாகன ஓட்டிகளை மிரட்டும் அளவுக்கு கரும்புகையை கக்கியபடியே செல்கின்றன.
தனியார் பேருந்துகளிலும், 20 சதவீத வாகனங்களில், அரசு பஸ் அளவிற்கு இல்லாவிட்டாலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட, பல மடங்கு அதிகமாகவே புகையை வெளித்தள்ளுகின்றன. இவற்றுக்கு அடுத்ததாக, லாரிகளும், ஆட்டோக்களும், சரக்கு ஆட்டோக்களும், வாடகை டாக்சிகளும் புகை கக்கும் போட்டியில் முந்திக் கொண்டிருக்கின்றன. நகரிலுள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான டூவீலர்களைக் கணக்கிட்டால், அவை கக்கும் புகையையும் சாதாரணமானவை என ஒதுக்க முடியவில்லை.
இப்படியாக, பல விதமான வாகனங்களும், அளவுக்கு அதிகமாக கரும்புகையைக் கக்கி, காற்றை வெகுவாக மாசுபடுத்தி வருகின்றன. காற்றில் கலக்கும் கார்பன் அளவைக் குறைக்கும் ஆற்றல் படைத்த மரங்களும், நகரில் தாறுமாறாக வெட்டப்பட்டுள்ளன. முரண்பட்ட இந்த வளர்ச்சியால், நகரில் வசிக்கும் மக்களுக்கு சுவாசம் சம்மந்தப்பட்ட நோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் தாக்கப்படுகின்றனர்.
தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், கோவை நகரில், ஆஸ்துமா பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஒரே காரணம், வாகனப் புகை தான். குறிப்பிட்ட சில பகுதிகளில், தொழிற்சாலை புகை பாதிப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை; ஆனால், நகரம் முழுவதும் ஆஸ்துமா பாதிப்புக்குள்ளான குழந்தைகள், அதிகளவில் சிகிச்சைக்கு வருவதைப் பார்க்கும்போது, வாகன புகையே பிரதான காரணமாகத் தெரிகிறது என்றார்.
மோட்டார் வாகன சட்டப்படி, அனைத்து வாகனங்களும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புகை பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் பெறவேண்டும். இந்த சான்றிதழ் இல்லாத கனரக வாகனங்களுக்கு 1,000 ரூபாயும், இலகுரக வாகனங்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்க முடியும். ஆனால், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், புகை சான்றிதழுக்கு போதிய முக்கியத்துவம் தருவதில்லை. எனவேதான், கரும்புகையை கக்கிச்செல்லும் வாகனங்கள் அதிகரித்து, மாசடைந்த நகராக கோவை மாறி வருகிறது.
இதுகுறித்து, புகை பரிசோதனை மையம் நடத்துபவர் ஒருவர் கூறுகையில்,  வாகனங்களின் பிஸ்டன் சுத்தம் செய்யாமலும், இன்ஜpன் ஆயில் மாற்றhமலும் இருப்பதே, கரும்புகை வரக் காரணமாகும். நகரிலுள்ள இத்தனை லட்சம் வாகனங்களுக்கு 27 புகை பரிசோதனை மையங்கள் மட்டுமே உள்ளன. இதிலிருந்தே, புகைபரிசோதனை சான்றிதழ்களுக்கு, ஆர்.டி.ஓ.,க்கள் தரும் முக்கியத்துவம் தெரியும் என்றhர். 
நகரில் வாகனங்கள் கக்கும் புகையைப் பார்த்தால், இது அப்பட்டமான உண்மையாகத் தெரிகிறது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கும் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்த விஷயத்திலும் காசை வாங்கிக்கொண்டு, காற்றில் விஷத்தைப் பரப்ப அனுமதிப்பது, வருங்கால சந்ததிக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும். இனியாவது, வாழ்க்கைக்கு பகையாகும் புகையைக் கட்டுப்படுத்த, இவர்கள் களம் இறங்குவார்கள் என்று நம்புவோம்.

Tour Special - வயநாடு

பார்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வயநாடு (கேரளா ) 

கேரளாவில் வற்றாத அழகு கொட்டிக் கிடக்கும் மாவட்டம் வயநாடு. இந்த மாவட்டத்தின் முக்கால்வாசி இடம் வனப்பகுதி என்பதால் இங்கு எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேல்தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 700 முதல் 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வயநாடு, தமிழக மற்றும் கர்நாடக மாநில சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் மைசூர் அருகே அமைந்துள்ளது இன்னொரு சிறப்பு. இயற்கை ஆட்சி செய்யும் வனப்பு மிக்க வயநாடுதான்
கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கண்ணு}ர் மாவட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு கடந்த 1980ம் ஆண்டு வயநாடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. கல்பெற்றh, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்கள் முக்கியமானவையாகும். இங்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் நிறைய உள்ளன.
பேகர் வனவிலங்கு சரணாலயம்:
மானந்தவாடி என்ற இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது பேகர் வனவிலங்கு சரணாலயம். இங்கு பலவகையான அரிய விலங்குகளைப் பார்க்கலாம். இதே போல மானந்தவாடியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள நாகர்ஹேhல் வனவிலங்கு சரணாலயப் பகுதியிலும் பல வகை விலங்குகளின் நடமாட்டத்தைக் காண முடியும். அரிய வகைத் தாவரங்களும் இங்கு உண்டு. இயற்கை விரும்பிகளுக்கு இவை மறக்க முடியாத இடங்களாகும்.
செம்ப்ரா உச்சி:
கல்பெற்றாவில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது செம்ப்ரா உச்சி என்ற செம்ப்ராமலை முகடு. கடல் மட்டத்தில் இருந்து 2100 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை உச்சிதான் வயநாட்டின் உயரமான மலை உச்சி ஆகும். மலை ஏற்றத்துக்கு சிறந்த இடம்.
கரலாட் லேக்:
கரலாட் ஏரி கல்பெற்றாவில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அழகிய சோலைகளால் அலங்கரிக்கப்பட்ட கரலாட் ஏரியில் படகுச் சவாரி நடத்தப்படுகிறது. இந்த ஏரியில் தூண்டில் போட்டு மீன்பிடித்தும் பொழுது போக்கலாம்.
சிப்பாரா அருவி:
வயநாட்டுக்கு அருவிகளும் அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றன. மேப்பாடிக்கு அருகே உள்ள சிப்பாரா அருவி காண்போரை பரவசப்படுத்துவதோடு ஆச்சரியப்படுத்தவும் வைக்கிறது. 100 அடி முதல் 300 அடி உயரத்தில் இருந்து வரிசைத் தொடராக கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள், கண்களைக் கொள்ளை கொள்ளும். அருவியின் தடாகத்தில் நீந்தி மகிழலாம். இதே போல மேப்பாடிக்கு அருகே வெள்ளரிமலா கிராமத்தில் அமைந்துள்ள சென்டினல் ராக் அருவியும் பிரபலமானது.
மீன்முட்டி அருவி:
சுமார் 300 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருக்கும் மீன்முட்டி அருவி, ஊட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அழகும், ஆர்ப்பரிப்பும் மீன்முட்டி அருவியின் தனிச்சிறப்பு. விண்முட்டி நிற்கும் மீன்முட்டி அருவியின் அழகு, நம்மை கண்கொட்ட விடாமல் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும்.
குருவா தீவு:
இயற்கை விரும்பிகளின் மிதக்கும் சொர்க்கபுரியாகத் திகழும் குருவா தீவு, கபினி ஆற்றையொட்டி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அழகான வனப்பகுதி. அரியவகை பறவைகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. ஆபூர்வ மூலிகைகளும் உள்ளன.
முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்:
சுல்தான் பத்தேரியில் இருந்து 15 கி.மீ தொலைவில் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் போன்றவை இங்கு உள்ளன. வனத்துறையினர் ஆற்றோரமாக யானைச் சவாரியையும் நடத்தி வருகின்றனர்.
இவை தவிர அம்புக்குத்தி மலையடிவாரத்தில் உள்ள முனியறா, வயநாடு ஹெரிடேஜ் மியூசியம், கொட்டமுண்டா கிளாஸ் டெம்பிள், கோரோம் மசூதி, திருநெல்லி கோவில், பழசிராஜh டாம்ப் உள்ளிட்ட பார்க்கத் தகுந்த பல இடங்கள் உள்ளன.
கேம்ப் பயர், மரவீடுகள்:
இது தவிர சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அடர்ந்த காட்டுக்குள் கேம்ப் பயர் நடத்தப்படுகிறது. காட்டுக்குள் கொட்டும் பனிக்கு இதமாக, நெருப்பு முன் அமர்ந்து குளிர் காய்ந்தவாறு அந்தப் பகுதியின் கதை சொல்லி ஒருவர் சொல்லும் சுவாரஸ்யமான கதையைக் கேட்டுக் கொண்டே, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்திற்குள் சென்று தூங்கி, காலையில் மேனியை இதமாகத் தொடும் காலை வெயிலுக்கு ஹhய் சொல்லி எழுவது வித்தியாசமான அனுபவம். காட்டுக்குள் காலாற நடந்து சென்று இயற்கையை ரசிக்கலாம். மரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள மரவீடுகளில் தங்கி இயற்கையுடன் ஒன்றிப் போவதும் புதுமை அனுபவமே. இவை வயநாட்டின் ஸ்பெஷல்.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:
வயநாட்டில் உணவைப் பொறுத்த வரை நாவிற்கு ருசியான நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. போக்குவரத்து வசதிகளை பொறுத்தவரை வயநாட்டுக்கு நல்ல ரோடு வசதிகள் உள்ளன. அருகில் உள்ள கோழிக்கோட்டில் ரயில் நிலையமும், விமான நிலையமும் உள்ளன.


Tour Special

பரவசப்படுத்தும் பரளிக்காடு

பரளிகாடு மிகவும் ரம்மியமான இயற்கையான நஉடி -கசநைனேடல ஸ்பாட். பரளிக்காட்டின் மிக முக்கியமான நிகழ்வு பரிசல் சவாரி தான் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான பில்லு}ர் அணைப்பகுதியில் அடர்ந்த காட்டை ஒட்டி நு}ற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பரளிக்காடு . இது பில்லு}ர் டேமுக்கு கொஞ்சம் முன்னால் ஊட்டிமலைக்கு கொஞ்சம் பின்னால இருக்கிற சின்ன கிராமம். புத்தம் புதிய சுற்றுலா தளம். யாருக்கும் அதிகமாக தெரியாது என்பதே இதன் சிறப்பு. கூட்டம் மிக குறைவாகவே இருக்கிறது.
சுற்றுலா தலம். செல்வதற்கு ஒரு வாரம் முன்பே முன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நாட்கள் முன்பு. பரிசல் பயணம் தான் பிரதானம். அங்கு மொத்தமே 10 பரிசல்கள் தான் இருக்கின்றன. ஒரு பரிசலுக்கு 4 பேர் வீதம் ஒரு நாளைக்கு 40 பேருக்கு மட்டுமே அனுமதி. மேலும் 20 பேருக்கு மேல் முன் பதிவு செய்துகொண்டால் அவர்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்கிறhர்கள். அதற்கும் அற்புதமான மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறhர்கள். பரளிக்காடு வனச் சுற்றுலா என்பது 2 இடங்களை உள்ளடக்கியது. ஒன்று பரளிக்காடு பரிசல்சவாரி. மற்றெhன்று அத்திக்கடவு ஆற்றுக்குளியல் (பழக்கம் உள்ளவர்களுக்கு ) மற்றும் அருகில் மலையேற்றம்.
கோவையிலிருந்து பரளிக்காடு 70 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை மற்றும் பில்லு}ர் அணை வழியாக செல்ல வேண்டும்.
பரிசல் சவாரிக்கு வNலிக்கப்படும் பரிசல் கட்டணம் என்பது மதிய உணவிற்கும் சேர்த்து தான்.
வழக்கமாக சனி ஞாயிறுகளில் மட்டுமே சுற்றுலா உண்டு. வார நாட்களில் 40 பேர் வரை முன்பதிவு செய்யும் நாட்களில் ஏற்பாடு செய்கிறhர்களாம். அதற்கு நிச்சயம் ஒரு வாரம் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.
வனஅதிகாரிகளிடம் 10 நாட்களுக்கு முன்பாகவே (முடிந்தவரை சனிக்கிழமை அல்லது சண்டே-பயணம் போகும் படியான திட்டமிட்டு)-முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி - அடிப்படையில்*
இரவில் தங்க புதியதாக 2 குடில்கள் அமைத்திருக்கிறhர்கள். ஒரு குடிலில் 5 பேர் வரை தங்கலாம். குளியலறை வசதியும் உண்டு. பெண்கள், குழந்தைகளுடன் தங்குவது பாதுக்காப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு என்கிறhர்கள்.

இயற்கை சீற்றங்களை தடுக்கும் அரண் - பிச்சாவரம்

கடலு}ர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வன சுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக் காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அரணாக இக்காடுகள் அமைந்துள்ளது. மூலிகை தன்மையுள்ள காற்றை சுவாசிப்பதால் பல்வேறு நோய்கள் குணமடைகிறது. காடுகளை பாதுகாக்க 1984 ஜூன் 16ல், 5 ஏக்கர் பரப்பில் 6 படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில் 6 காட்டேஜ்,  20 கட்டில், 2 டார்மென்டரியுடன் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் படகுகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதில் சுற்றுலா பயணிகள் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க குடை பிடித்தும், தொப்பிகள் அணிந்து ஆனந்தமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.
இங்குள்ள மாங்குரோவ் காடுகள் என்னும் சதுப்பு நில காட்டில் 4 ஆயிரம் வாய்க்கால்கள் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால்கள் வழியாக படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் காடுகளை ரசித்த வண்ணம் உள்ளனர். காடுகளுக்கு நடுவே சிறிய வாய்க்காலில் படகில் சென்று மாங்குரோவ் மரங்களை தொட்ட படி பயணம் செய்வது மனத்திற்கு மகிழ்ச்சியை தருகிறது.
தற்போது அக்னி வெயில் கொளுத்திவருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் அங்கு நடுத்தர மக்கள் சென்று வர முடியாது. இவற்றிற்கான செலவு அதிகம் என்பதால் நடுத்தர மக்கள் அங்கு செல்வதில்லை. இருப்பினும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு ஊட்டியாகவும், கொடைக்கானல் ஆகவும் இந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது.
காடுகளை படகு மூலம் ரசிப்பதற்காக சுற்றுலா துறை சார்பில் 38 துடுப்பு படகுகளும், 8 மோட்டார் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மோட்டார் படகில் 8 பேர் வரை பயணம் செய்யலாம். படகு சவாரி செய்ய குறைந்த கட்டணமே வசூல் செய்வதால் இங்கு அனைத்து தரப்பு மக்களும் எளிதில் வந்து செல்கின்றனர்.
பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சிதம்பரத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. கடலு}ரிலிருந்து பரங்கிப்பேட்டை வழியாகவும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் எளிதில் இந்த சுற்றுலா மையத்திற்கு செல்ல முடியும்.

இயற்கை எழில் கொஞ்சும் கொல்லி மலை

தகிக்கும் கோடை வெப்பத்தை தணிக்க மக்கள் படாதா பாடு படும் இந்த கோடையில் வழக்கமான ஊட்டி, கொடைக்கானல் போன்ற கூட்டம் அலை மோதும் இடங்களை தவிர்த்து தமிழகத்தில் வேறு மலைச் சுற்றுலா இடங்கள் எவை உள்ளன என்று தேடிய போது கிடைத்தவை தான் இந்த குளுகுளு இடங்கள்..

இயற்கை எழில் கொஞ்சும் கொல்லி மலை 
கொள்ளை கொள்ளும் கொல்லிமலை

இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் சிறப்பு பெற்றது கொல்லிமலை. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும், வரலாற்று சிறப்பும் உடையது. தமிழ்நாட்டில் இருக்கும் இந்த கொல்லிமலையானது இயற்கை வளம் மிக்க மலை. இது இந்தியாவின் தெற்கு பகுதியில், தமிழ்நாட்டின் நடுப்பகுதியில், நாமக்கல் திருச்சி மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். கொல்லி மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி மலையாக அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலை பெயருக்கேற்றhர்ப்போல் தொடர்ச்சியாக இல்லாமல் அங்கங்கே விட்டு இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலை அவ்வாறின்றி தொடர்ந்தும் அடர்ந்தும் காணப்படும். பற்பல நதிகள் இந்த கிழக்குத் தொடர்ச்சி மலையை ஊடறுத்து ஓடுவதால் தொடர்ச்சியாக இருக்க முடிவதில்லை போலும். கொல்லும் கொடிய நோய்கள் நிறைந்தும், அத்தகைய கொடிய நோய்களையும் கொல்லும் அற்புத மூலிகைகள் கொண்டும் அழகுற விளங்குகிறது கொல்லி மலை.
கொல்லி மலை தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. நாமக்கல் நகரில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழல் மற்றும் மலேரியா உள்ளிட்ட பல நோய் தாக்குதல் பரவலாக இருந்ததன் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானளாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிலோ மீட்டர். இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும்.
பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானு}று, ஐங்குறுநு}று முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன.
இந்த கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பெற்ற பெருமையும், பழமையும் கொண்டதாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கியவன் வல்வில் ஓரி. கடையேழு வள்ளல்களில் ஒருவன். அது என்ன ‘வல்வில்’டூ ஒரு வில்லாளி தான் எய்யும் ஒரே அம்பால் பலவற்றையும் துளைத்தும்போகும்படிச் செலுத்தும் வலிமை பெற்றிருந்தால் அவனை ‘வல்வில்’ என்று அழைப்பார்கள்.  ஒரே அம்பில் காட்டு யானை, புலி, புள்ளிமான், காட்டுப்பன்றி, உடும்பு போன்றவற்றை வீழ்த்திய வலிமை பெற்ற இவன், ஆட்சிபுரிந்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு அறப்பள்ளி என்று பெயர்.
இந்த அறப்பள்ளியில் ஈஸ்வரர் எழுந்தருளியதால் அங்கு அறப்பளீஸ்வரர் கோயில் தோன்றியது.
அப்படிப் பார்த்தால் ஏழு மராமரங்களை ஒரே பாணத்தால் துளைத்து, தான் வாலியைக் கொல்லும் வல்லமை உடையவன் தான் என்று அனுமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நிரூபித்த இராமனும் வல்வில் தான். ‘வல்வில் இராமன்’ என்று அழைத்திருக்கிறhர்கள்
கொல்லிமலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கோரக்கர் பல்லாயிரம் உயிர்மருந்துகளையும், சித்தர் குளிகைகளையும் தயாரித்து அவற்றினுடன் தான் ஞானத்தாலுணர்ந்த தேவரகசியங்களை ஓலைச்சுவடிகளில் எழுதி ஏழு பெட்டிகளை உருவாக்கி ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு வகைப்பொருளாக அடைத்து அவற்றையெல்லாம் “கோரக்கர் குண்டம்” என்னும் ரகசிய இடத்தில் புதைத்து வைத்தார்.
கொல்லி குளிர் அறைப்பள்ளி’ என்றும், “கள்ளால் கமழ் கொல்லி அறைப்பள்ளி’ என்றும் திருநாவுக்கரசர் இந்த கோயிலை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். திருஞான சம்பந்தர் தனது திருத்தல கோவையில் அறைப்பள்ளியை போற்றியுள்ளார்.
இக்கோயிலுக்குப் பக்கத்தில் “மீன்பள்ளி” ஆறு ஓடுகிறது. இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன் பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.
குழந்தைச் செல்வம் இல்லாதவர்களும் திருமணத் தடை உள்ளவர்களும் மற்றும் பல துன்பங்கள் நீங்கவும் இங்கு வந்து வேண்டிக் கொண்டவர்கள், தங்கள் குறை தீர்ந்ததும் இந்த ஆற்றில் உள்ள மீன்களுக்கு மூக்குக் குத்தி சிறிய அணிகலன் அணிவித்து ஆற்றில் விடும் நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது.
 ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. எனவே, இந்த கோயில் ஈஸ்வரனுக்கு, “அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர்” என்ற பெயர் வழங்கலானது.
இக்கோயிலுக்கு மேற்கில் “கொல்லிப்பாவை” என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானு}று ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம். கொல்லிமலையின் புகழுக்குக் காரணமான இப்பாவைப் பற்றிய ஒரு செய்தி…
இம்மலைப் பகுதியில் தவஞ் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.

‘கொல்லிப்பாவை’ பற்றி பல கதைகள் நிலவுகின்றன. அசுரர்கள் தேவர்களை எதிர்த்து போரிட வந்தபோது, அசுரர்களை தடுத்து நிறுத்த தெய்வ தச்சன் ஆகிய மயன் என்பவன், கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காமத்தை ஏற்படுத்தி மயக்கி கொல்லவல்ல அழகிய பாவையின் படிமத்தினை செய்து வைத்தான். தனது அழகினால் மயக்கி அசுரர்களை கொன்று வந்த அப்பாவை ‘கொல்லிப்பாவை‘ என பெயரிட்டு அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. அகநானு}று, குறுந்தொகை, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்களில் கொல்லிப்பாவை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளது.
இக் கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் “எட்டுக்கை அம்மன்” என்று கூறுகின்றனர். கொல்லிமலைமீது அருள்புரியும் ஸ்ரீஅறப்பள்ளீஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியில், பூந்தோட்டம் என்னும் இடத்திலிருந்து வடக்கே சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் கொல்லிப் பாவை கோவில் உள்ளது. பேருந்தில் பயணம் செய்பவர்கள் பூந்தோட்டம் நிறுத்தத்தில் இறங்கி, கரடுமுரடான பாதையில் நடக்க வேண்டும். தனியாரின் சிறிய வாகனத்தில் பயணம் செய்பவர்கள் குறைந்தபட்சம் இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனத்தில் பயணம் செய்து, அதற்குப்பின் இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.
பாதையைச் சுற்றி அடர்ந்த காட்டுப் பகுதி உள்ளதால் பகலில் செல்வது நல்லது. பூந்தோட்டம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் அரியூர் நாடு என்னும் இடம் வருகிறது. அங்கே சிறிய சிவன் கோவில் உள்ளது. இங்கு அருள்புரியும் இறைவனை அருள்மிகு சேலமுடையார் ஈஸ்வரன் என்கிறார்கள். இந்த ஈஸ்வரன் கோவிலுக்குச் செல்வதற்குமுன், கோவிலின் பின்புறமுள்ள ஆலமரத்தடியில் ஒரு மேடையில் இரட்டை விநாயகர் திறந்தவெளியில் எழுந்தருளியுள்ளனர். அவர்களை முதலில் வணங்க வேண்டும். அதன்பின் ஈஸ்வரன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே சுமார் இரண்டடி உயரத்தில் லிங்க உருவில் இறைவன் காட்சி தருகிறார். அவருக்கு அருகில் சுமார் இரண்டு அங்குல உயரமே உள்ள மிகச்சிறிய வடிவில் அம்பாள் காட்சி தருகிறாள். இந்த அம்பாளைத் தீபாராதனைத் தட்டில் எழுந்தருளச் செய்து நமக்கு காட்சி தரச் செய்கின்றனர். இந்தச் ‘எட்டுக்கை அம்மன்’ என்று அழைக்கப்படும் கொல்லிப்பாவை அம்மன் காவல் தெய்வமாக கொல்லிமலையைக் காத்து வருவதாகச் சொல் கிறார்கள்ஸ மனிதர்களைக் கொல்லும் பாவையின் திருவுருவங்கள் அங்கு பல இடங்களில் இருந்ததாலும்; மனிதர்களையும் பிற உயிரினங்களையும் இழுத்துக் கொள்ளும் மரங்கள் அந்தப் பகுதியில் இருந்ததாலும் அந்த மலைக்கு ‘கொல்லிமலை’ என்று பெயர் வந்ததாம்ஸ
மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.  இந்தச் சிறிய அம்பாள், கோவில் கட்டும்போது பூமியிலிருந்து வெளிப் பட்டதாகக் கூறுகின்றனர். இக்கோவிலின் வடக்குப் பக்கத்தில் திறந்தவெளியில் நவ கிரகங்கள் உள்ளன.
இங்கிருந்து சற்று தூரம் நடந்தால் ஓர் ஆலமரத்தடியில் சமணர் திருவுருவம் ஒன்றைக் காணலாம். அதற்குப்பின், ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தால் நாம் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் எட்டுக்கை அம்மன் என்கிற கொல்லிப் பாவைக் கோவிலை அடையலாம்.

இந்தக் கொல்லிப்பாவை அருள்பாலிக்கும் புனிதமான இடம் தென்னை ஓலையால் வேயப்பட்ட ஒரு குடிசைஸ இதன் வலப்பக்க மேடையில் விநாயகர் அருள்புரிகிறார்.
குடிசையிலிருக்கும் கொல்லிப்பாவை அம்மன் சுமார் மூன்றடி உயரம் உள்ளாள். எப்பொழுதும் சந்தனக் காப்பில்தான் காட்சி தருகிறாள். காலையில் சுமார் எட்டுமணி அளவில் அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது திரையிட்டு மூடிவிடுகிறார்கள். இந்தக் குடிசைக் கோவிலுக்குக் கதவு இல்லை. கோவில் பூசாரி கொல்லிப்பாவைக்கு அபிஷேகம் செய்து, சந்தனத்தில் காப்பிட்டடு அலங்காரம் செய்கிறார். அதற்குப்பின் தரிசனம் கிட்டுகிறது.
இந்தக் கொல்லிப்பாவையைப் பற்றி புராணம் கூறும் தகவல்:
இந்தக் கொல்லிமலையில் அரிய மூலிகைகள் மட்டுமல்ல் பதினெண் சித்தர்களால் தயார்செய்யப்பட்ட பல அரிய மருந்துகள், தைலம், ரசமணி, முப்பு சுண்ணம் போன்றவை குகைகளிலும் சமாதிகளிலும் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறதாம். இதற்குக் காவலாகக் கொல்லிப் பாவை, பெரியண்ணசாமி தெய்வங்களை சித்தர்கள் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
பெரியண்ணசாமி கோவில், கொல்லிப்பாவைக் கோவிலிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் உயரமான இடத்தில் உள்ளது. அங்கு வாழும் மலைவாசி மக்கள் உதவியுடன்தான் அங்கு செல்ல முடியும். ஏனெனில் அந்த வழியில் சில ஆட்கொல்லி மரங்கள் இருக்கின்றனவாம். அவற்றுக்கு அருகில் செல்லும் மனிதர்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்களை காந்தம்போல் இழுத்துக் கொள்ளுமாம். இதைப் பார்த்த யாராவது கோவில் பூசாரியிடம் போய்ச் சொன்னால், அவர் வந்து மந்திரம் ஜபித்து, புனித நீர் தௌpத்தால்தான் அதிலிருந்து விடுபட முடியுமாம். இப்படியொரு தகவலை கொல்லிப்பாவை கோவிலுக்கு வந்த ஒரு பெரியவர் சொல்லக் கேட்டுத் திகைத்தோம்ஸ
முனிவர்களும் சித்தர்களும் தவம் செய்வதற்கும் தனித்து வாழ்வதற்கும் தகுதியான இடமாகக் கொல்லிமலை கருதப் படுகிறது.
பலா, கொய்யா, ஆரஞ்சு, அன்னாசி, செவ்வாழை உள்ளிட்ட பலவகையான பழங்களோடு தேனும் கிடைப்பதால் சித்தர்களும் முனிவர்களும் அங்கு பர்ண சாலை அமைத்தும், குகைக்குள்ளும் தங்கி இருந்திருக்கிறார்கள். அந்த வேளையில் அசுரர்கள் கூட்டம் அங்கு வந்து தவத்திற்கு இடையூறு செய்யவே, முனிவர்கள் அந்த அசுரர் கள் வரும்வழியில் அழகிய பெண் (பாவை) உருவத்தினைச் செய்து வைத்தார்கள். விஸ்வகர்மாவை அழைத்து அந்தப் பாவைக்குப் பல சக்திகளை ஊட்டும்படி கூற, அந்தப் பாவைச் சிலைக்கு அசுரர்களின் வாடை பட்டவுடன் நகைக்கும் திறனையும், காண்போரின் உள்ளத்தைக் கவர்ந்து தன்னருகே ஈர்க்கும் சக்தியும் அளித்தார் விஸ்வகர்மா. அந்தப் பாவையின் அழகில் மயங்கிச் சென்ற அசுரர்களைக் கொன்று இருக்குமிடம் தெரியாமல் பஸ்பமாக்கிவிடுமாம். இந்த அதிசயப் பாவைச் சிலைகள் அன்று பல இடங்களில் அந்த மலைப் பகுதியில் இருந்த தாகவும்; அசுரர்கள் தொல்லைகள் நீங்கியபின் அந்தப் பாவைகள் அகற்றப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இப்பொழுது இங்கு அருள்பாலிக்கும் கொல்லிப்பாவை காவல் தெய்வமாக அங்கு வாழும் மக்களுக்கு நன்மை செய்வதற்காக சித்தர்களால் உருவாக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.

அபிஷேகம் முடிந்து, சந்தனக்காப்பு இட்ட பின், இங்குள்ள பூசாரியிடம் குறி கேட்பதற்காகச் சிலர் அங்கு காத்திருக்கிறார்கள். பூசாரி, கொல்லிப்பாவையைச் சுற்றிச்சுற்றி வந்து ஆவேசமாகக் குதிக்கிறார். பிறகு சூடத்தினைக் கொளுத்திக் காட்டுகிறார். பின்னர், மூன்றங்குல உயரமுள்ள கூர்மை யான ஆணிகள் கொண்ட இரும்பு பாதக்குறடுகள்மீது ஏறி நின்று, குறி கேட்பவர்களுக்குப் பதில் சொல்கிறார். பிறகு ஆவேசம் தணிந்து அரைமணி நேரம் கழித்து அனைவருக்கும் திருநீறு வழங்குகிறார்.
கொல்லிமலையில் பல அரிய மூலிகைகள் உள்ளதால், சித்த மருத்துவர்கள் இந்த மலைக்கு குறிப்பிட்ட நாளில் வருவார்களாம். அவர்கள் முதலில் இந்தப் பாவையிடம் அனுமதிபெற்று மூலிகைகளைப் பறித்து, அதைப் பாவை சந்நிதியில் வைத்துப் பூiஜசெய்து எடுத்துச் செல்கின்றனர். அப்போதுதான் மூலிகைகளின் முழுசக்தியும் கிடைக்கும் என்கிறார்கள். இந்தக் கொல்லிமலையில் காப்பிக்கொட்டை, கடுக்காய், ஜhதிக்காய், கடுகு, சீரகம், வெந்தயம், பூண்டு, தினை, கேழ்வரகு சாமை, சோளம், நெல், கிழங்கு போன்றவற்றையும் பயிரிடுகிறார்கள். நாற்பது சதுர மைல் பரப்பைக் கொண்ட இம்மலையின் மேல் நான்கு மலைகள் இருப்ப தால் இதற்கு “சதுரகிரி’ என்ற பெயரும் உண்டு. இந்த மலை சங்க காலத் தொடர்புடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும்.


பலா, அன்னாசி, கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை மரங்கள் அடர்ந்து, பசுமையாகக் காட்சியளிக்கும் இம்மலைமீது ‘அறப்பளீசுவரர்‘ ஆலயம் உள்ளது.

இம்மலைமீது பல ஊர்கள் உள்ளன் இங்குள்ள பலவூர்களிலும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மிளகு மலிவாகக் கிடைக்கிறது.
ஊர் – பெரிய கோயிலு}ர் என்றும்; கோயிற் பகுதி – அறப்பளீசுரர் கோயில் என்றும் வழங்குகிறது.
Aசயியடநநளறயச கூநஅpடந, முடிடடi ழடைடள
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது.
ஆற்றங்கரை அருகிலுள்ள இத்திருக்கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர். கிழக்கு பார்த்த (ராஜகோபுரம் இல்லாத) நுழைவாயில். கோவிலுக்குள் சென்றதும் கொடி மரம், பலி பீடம். அதனைத் தொடர்ந்து நந்தியெம்பெருமான் சிவ பெருமானைப் பார்த்த வண்ணம் உள்ளார். இந்த நந்திக்கு மூன்று கால்கள் மட்டுமே உண்டு. பின்புற வலக்கால் இல்லை. இது பற்றியும் புராணக் கதை உண்டு.
இந்த நந்தி இக்கோவிலுக்கு அருகில் உள்ள புளியஞ் சோலையில் பயிரிடப்பட்டிருந்த கடலைச்செடியின் பூக்களின் மணம் கவரவே, கடலைக் காய்களைத் தின்பதற்கு இரவில் அங்கு சென்றது. இதனை அறிந்த காவலர்கள் நந்தியை பயங்கர ஆயுதத்தால் தாக்க,நந்தியின் ஒரு கால் வெட்டுப்பட்டது. அந்த நிலையில் அப்படியே கோவிலுக்குவந்து அமர்ந்தது. அந்தத் தோற்றத்துடன் இன்றும் காட்சி தருகிறது நந்தி.
விவரம் அறிந்த விவசாயிகள் தங்கள் செயலுக்கு வருந்தியதுடன், தினமும் நந்திக்குப் பிடித்த கடலைக்காய்களை அதற்குச் சமர்ப்பித்தார்கள்.
நந்தியெம்பெருமானைத் தரிசித்து விட்டு உள்ளே மகா மண்டபத்திற்குள் நுழையும்போது வாசல் பகுதியின் இரு பக்கங்களிலும் துவார பாலகர்கள்போல் சித்தர்கள் இருவர் காட்சி தருகிறார்கள்.

ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
அஷ்டலட்சுமி ஸ்ரீசக்ரம்
அறம்வளர்த்தநாயகி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். செல்வவளம் தரும் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. சித்தர்கள் மேற்கொண்ட யோக முறைகளை அம்பாள் சன்னதி சுற்றுச்சுவரில் சிற்பங்களாக வடித்துள்ளனர்.
அம்பாள் சந்நிதி – நின்ற திருக்கோலம். மேற்சுவரில் மகா மேருவும் சுற்றிலும் அஷ்டலட்சுமி உருவங்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேலே பார்த்துத் தரிசிக்க வேண்டும். இத்தனை சிறப்பு மிக்க அறப்பளீஸ்வரர் கோயில் கொல்லிமலையின் வளப்பூர் நாடு என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அறப்பளீஸ்வரர், தாயம்மை எனும் அறம் வளர்த்த நாயகியுடன் எழுந்தருளியுள்ளார்.

இவர்களுடன் வினை தீர்க்கும் விநாயகரும், முருகனும் சன்னதி கொண்டுள்ளனர்.

ஸ்ரீசக்கரத்தைத் தரிசித்தபின் மகா மண்டபத்தின் தெற்கு வாசல் வழியாக வெளியே வந்தால் வள்ளி- தெய்வானையுடன் ஆறுமுகனார் மயில்மீது அமர்ந்து தனிச் சந்நிதியில் வடக்கு நோக்கி அருள்புரிகிறார். இவரது பார்வை அம்பாளை நோக்கி உள்ளது தனிச் சிறப் பாகும். கன்னி மூலையில் ஸ்ரீஒளஷத கணபதி எனப்படும் வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
தஞ்சை பெரிய கோயிலை தந்த, ராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமாகிய மாதேவி, இந்த கோயிலுக்கு வந்து தரிசித்தும், விலையுயர்ந்த அணிகலன்களை அணிவித்தும் சென்றுள்ளது போன்ற ஏராளமான கல்வெட்டுக்கள் கோயிலில் உள்ளன.
குடும்பப்பிரச்னையால் பெற்றோரைப் பிரிந்தவர்கள், தாய், மகன் இடையே மனக்கசப்பு உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள மீண்டும் சேர்வர் என்பது நம்பிக்கை. நீதி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சித்தர்கள் பிரதிஷ்டை செய்ததால் இங்குள்ள லிங்கம், ‘ஆருஷ லிங்கம்‘ என்றழைக்கப்படுகிறது. சுவாமி சன்னதி விமானத்தில் சித்தர்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
சுவாமிக்கு திருவரப்பள்ளியுடையார் என்றும் பெயருண்டு. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இவருக்கு விசேஷ பூiஜ உண்டு. திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலம் இது. கவிச்சக்கரவர்த்தி கம்பரும் பாடியுள்ளார். சுவாமி அறத்தின் வடிவமாக உள்ளதால், பிறரால் அநீதி இழைக்கப்பட்டவர்கள், நீதி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
காசி தரிசனம்:
கோயில் பிரகாரத்தில் காசிவிஸ்வநாதருக்கும், விசாலாட்சிக்கும் சன்னதி உள்ளது. இந்த சன்னதியை காசியில் உள்ள அமைப்பிலேயே அமைத்துள்ளனர். இங்குள்ள ஆகாயகங்கை, பஞ்சநதி தீர்த்தங்கள் புண்ணியம் தருபவை என்பதால், அதில் நீராடி விஸ்வநாதரையும், தனிச்சன்னதியிலுள்ள பைரவரையும் வழிபட பிறவாநிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் nஜஷ்டாதேவி சிலை உள்ளது.
மகாலட்சுமி சன்னதியில் ஆஞ்சநேயர்:

பெருமாள் கோயில்களில் சுவாமி சன்னதியில் அவரது பக்தரான ஆஞ்சநேயர் இருப்பார். ஆனால், இங்குள்ள மகாலட்சுமி சன்னதியில் ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். சரஸ்வதிக்கும் சன்னதி உண்டு. இவள் அட்சரமாலை, ஏடு, வீணையுடன் நின்றிருக்கிறாள்.
உயிர்களின் வாழ்க்கை மகத்துவம் பெற, இறை வழிபாடு மேற்கொண்ட சித்தர்கள், தவம் செய்ய தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். தர்மத்தை (அறம்) பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு, ‘அறப்பளீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மறைந்துவிட்டது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது. அங்கு தோண்டிய போது லிங்கம் இருந்ததைக் கண்ட விவசாயி ஊர் மக்களிடம் தெரிவித்தார். மக்கள் மலையில் கிடைத்த இலை, தழைகளால் பச்சைப்பந்தல் அமைத்து சிவனை பூஜpத்தனர். பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.

சித்தர் பூமி: பசுமையான மலையின் உச்சியில், அற்புதமாக அமைந்த கோயில் இத்தலத்தில் தற்போதும் பல சித்தர்கள் சிவனை பூஜpப்பதாகச் சொல்கிறார்கள். சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த கோயிலுக்கு சென்று வணங்கி, அருவியில் குளித்து உடலும் உள்ளமும் சிலிர்க்க இறைவனின் அருளையும், இயற்கையின் வனப்பையும் ஒருங்கே அனுபவிக்கலாம்.
கோயிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜPவநதிகள் ஒன்றாக கலந்து வந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன. கொல்லிமலையின் ஆயிரமாயிரம் அபூர்வ மருத்துவ குணங்களை எல்லாம் அள்ளி வந்து கொட்டும் நீர் அருவியாகி பின் ஆறாக ஓடுகிறது. இந்த ஆற்றில் ஏராளமான மீன்கள் உள்ளன.
அறப்பளீஸ்வரர் மீன் வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கோயிலுக்கு செல்வதற்கு முன்னரே பக்தர்கள் ஆற்றில் உள்ள மீன்களுக்கு சாதம், பலவகை தின்பண்டங்களை அளித்து வழிபாடு செய்கின்றனர். அதன்பின்பே அவர்கள் கோயிலுக்கு சென்று வணங்குகின்றனர்.
மழையில்லாத காலங்களிலும் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். ஆடிமாதம் 18ம் பெருக்கு இந்த கோயிலின் விசேஷமாகும். ஆண்டு தோறும் ஆடி 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த விழா சிறப்பாக நடந்து வருகிறது.
பக்தர்களோடு பழங்குடியின மக்களும், தங்களின் பாரம்பரிய சிறப்புடன் விழாவை கொண்டாடுகின்றனர். அவர்கள் ஆற்றில் உள்ள பெரிய மீன்களை பிடித்து அதற்கு மூக்குத்தி அணிவித்து வழிபட்டு பின்னர் அந்த மீனை மீண்டும் ஆற்றில் விடுகின்றனர். இந்த புனித தன்மை பெற்ற ஆறு, கொல்லிமலையில் இருந்து இறங்கி, துறையூர், முசிறி வழியாக சென்று காவிரியில் ஐக்கியமாகிறது. கொல்லி மலையில் உள்ள ஏரியில் தேரொன்று மூழ்கியிருப்பதாகச் செவிவழிச் செய்தியும் உண்டு.
கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக – சுமார் ஆயிரம் படிகள் இறங்கிச் சென்றால், ஆகாய கங்கை என்னும் நீர் வீழ்ச்சியில் நீராடலாம். 600 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது.

மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம்.
பூமத்திய ரேகைக் காடுகள் அழியாது இருக்கும் மிகச் சில இடங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.

கொல்லிமலையின் சிறப்பான ‘முடவாட்டு கால்‘ சூப் குடித்ததும் வலி குறைந்தது போல உணர்வு ஏற்பட்டதாம். இரண்டு நாட்களுக்காவது கால் வலி நீடித்து மகன் அவதிப்பட்டார்.

‘முடவாட்டு கால்‘ என்பது கொல்லிமலை பாறைகளுக்கு இடையில் விளையும் ஒரு கிழங்கு வகை ஆகும். பார்ப்பதற்கு ஆட்டின் கால்களை போலவே இருக்கும் இந்த கிழங்கை நீரிலிட்டு வேக வைத்து, மிளகு கலந்து குடித்தால் ஆட்டு கால் சூப் குடிப்பது போல அதே மணத்துடன் இருக்குமாம். மூட்டு சம்பந்தமான உபாதைகளுக்கு இது மிகவும் சிறந்த மூலிகை மருந்தாக கூறப்படுகிறது.
செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நு}லகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) ‘வல்வில் ஓரி’ மன்னனின் சிலை குதிரை மீது 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் ‘வல்வில் ஓரி விழா’ நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையினரின் பண்ணையும், வனத்துறையினரின் மூலிகைப் பண்ணையும் இம்மலைப் பகுதியில் உள்ளன. கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை, மகிழ்விக்கும் வகையில், செம்மேடு அருகே வாசலு}ர்பட்டி படகு இல்லம், வியூ பாயின்ட் போன்றவைகளை, மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. மேலும், மலை முழுவதும் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் புத்துணர்ச்சி பெறும் வகையில், மூலிகை கிழங்கு, ‘சூப்’ விற்பனையும் சூடுபிடித்து காணப்படுகிறது.
உறையூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் திரு. அருணாசல முதலியார் என்பவர், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார்.
கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் “அறப்பளீசுர சதகம்” என்னும் அருமையான நு}லைப் பாடியுள்ளார். அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே’ என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு.
இம் மலைக்கோயிலில் (அறை ழூ மலை; பள்ளி ழூ கோயில்) 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 சோழர் காலத்தியவை. கொல்லிப்பாவை கோவில், சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகை வனம், இப்போதும் ஆங்காங்கே கண்ணில் படும் சித்தர்கள், 180 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்டமாய் விழும் அருவி என புதிரான ஒரு பிரதேசமாகவே தெரிகிறது கொல்லிமலை. கொல்லிமலை 17 மைல் பரப்பளவிற்கு விரிந்து படர்ந்த அடர் மூலிகை காடுகளுடன் தனித்து ஒரு அமானுஷ்யமாக விளங்குகிறது.

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்து புலவர்களால் பாடப்பெற்ற சிறப்புடைய கொல்லிமலை கல்பகாலம் தொட்டு ஏராளமான சித்தர்களும், முனிவர்களும் தொடர்ந்து வாசம் புரிந்து வந்த கொல்லிமலையின் மூலிகை வளம் குறிப்பிடப்பட வேண்டியது. கருநெல்லி, கருநொச்சி, ஜோதிப்புல் உள்ளிட்ட அரிய மூலிகைகள் இங்கு கிடைக்கிறது.


ஜோதி விருட்சம் இரவில் ஜகஜ்ஜோதியாக ஒளிரும் என்று கூறினார்கள்.

ஜோதிப்புல்லின் இலையை விளக்கில் இட்டு எரித்தால் நெடுநேரம் எரியுமாம். திகைப்பூண்டு என்ற செடியை மிதித்து விட்டால் அந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருப்பார்களாம். அவர்கள் நினைவு மறந்துவிடுமாம். பூனைக்காஞ்சிரம் செடி தோல் மீது பட்டால் உடல் முழுவதும் அரிப்பெடுக்குமாம்.


நில ஆவாரை, நாட்டு நிலாவரை, ஆலகாலம், கமதாயம், தாளினி, ஆவரை, ஆவாகை, குயத்தினலகை என பல பெயர்களில் அழைக்கின்றனர். இந்த நிலவாகையானது
இந்தியாவின் மூலிகை ஏற்றுமதியில் கணிசமான பங்கு வகிக்கிறது. இதனுடைய இலை அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

இன்னும் பல மூலிகைகளைப் பற்றி ஆர்வமாக கேட்டுத்தெரிந்து கொண்டோம். கொல்லிமலை அடிவாரத்திலேயே மூங்கில் தோப்பு உள்ளது.

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்குமாம். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. அங்குள்ள மக்கள் அதை சமைத்து சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள். 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும்.

மரங்கள் இலைகள் எல்லாம் உதிர்ந்து கணுக்களில் பூக்களையும் இளம் பிச்சு காய்களையும் சுமந்து நிற்கின்றன. இது போன்ற மூங்கில் பூக்களுடன் அந்த பகுதியே வெளிர்மஞ்சள் நிறமாக, மாலை நேரத்தில் மிகவும் அழகாக இருந்தது. இதில் பெருவாரை, சிறுவாரை என இரண்டு வகையான மூங்கில்கள் உள்ளன.
செங்குத்தான மலைப்பாதை – 72 கொண்டை ஊசி வளைவுகளைக் (hயசை pin நெனே) கொண்டது.
இம்மலைப் பாதை, மழைக்காலத்திற்கு ஏற்றதன்று.

வாகனம் மலையில் ஏற ஆரம்பிக்க ஐந்து நிமிடங்களுக்கொரு கொண்டை ஊசி வளைவு. நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மொத்தமும் பரநது விரிந்து அருமையாக இயற்கை சூழலில் காட்சியளிக்கிறது. மலையில் வாகனம் பயணிக்கும்போதே நம்மை குளிர் போர்த்தத் தொடங்கி விடுகிறது. கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 1219 மீட்டர் உயரத்தில் உள்ளது. வழியில் எங்கும் ஊர்கள் கிடையாது. மலை அடிவாரத்தில் தொடங்கினால் கொல்லிமலைக்கு 3 கி.மீ. தொலைவில் வரும் சோளக்காடு என்ற ஊர் வருகிறது. அது சிறிய ஊர் என்றாலும் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடக்கிறது.



சோளக்காட்டினை அடுத்து வரும் வளப்பூர் என்ற பகுதிதான் கொல்லிமலையின் நடுவாந்திரமான பகுதி என்பதால் இங்கு அரசு தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் வருபவர்கள் நாமக்கல் அல்லது சேலத்திலிருந்து பயணம் செய்தால் வளப்பூர் வந்து சேரலாம். சீக்குப்பாறை, தற்கொலை முனை, அரசு மூலிகைப் பண்ணை, அறப்பளிஸ்வரர் ஆலயம், பஞ்சநதி எனும் அய்யாறு அருவி, கொல்லிப்பாவை கோயில், சித்தர் குகைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் உள்ளது. நம்மிடம் வாகன வசதி இருந்தால் மட்டுமே எல்லா இடத்தையும் சுற்றிப்பார்க்க முடியும். இங்கு வாகன வசதி எதுவும் கிடையாது. கொல்லிப்பாவை கோயில் இருக்கும் இடம் உண்மையிலேயே அச்சம் தருவதாக இருக்கிறது. அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் இந்த சிறிய கோவிலுக்கு பார்வையாளர் அதிகம்தான். யாருடனும் பேசாமல் சடாமுடியுடன் சுற்றி வரும் சிலரை இங்கு பார்க்க முடிகிறது.


சீக்குப்பாறை மற்றும் தற்கொலை முனை இரண்டும் அருமையான ‘நோக்கு முனை‘ மலையின் பெரும்பான்மை பகுதியின் இயற்கை அழகு நம்மை சில்லென்ற காற்றுடன் ஆனந்தப்படுத்துகிறது.
நாகரிகம் முழுமையும் சேராத மலைவாழ் மக்களிடம், இன்றைய நவநாகரீக மக்களிடம் பல்கிப்பெருகிப் பல பெண்களின் வாழ்வைச் சிரழிக்கும் வரதட்சணைக் கொடுமை முற்றிலும் இல்லாதிருப்பது அம்மக்களின் மண் மணம் மாறாத மலைவாழ் நாகரிகத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்தமலருக்கு த்ண்டர் பிளவர் – அதாவது இடி மலர் என்று பெயராம். இடி இடிக்கும் போது சடாரென்று மலர்ந்து விரியும் அற்புத அபூர்வ மலர். இந்த மலரின் அழகில் லயித்துப் போகாதவர் எவரும் இலர்.
கொல்லிமலை அடிவாரத்திலுள்ள குன்றில் குடியிருக்கும் பழனியப்பர் கோயில் முருகப்பெருமான் தன்னை வணங்கும் பக்தர்களின் பிறப்பை வேட்டையாடி முக்தி தருபவராக உள்ளார்.
படைப்புக்குரிய மூலமான “ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார்.

மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் மூவரையும் தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன், “பிரம்ம சாஸ்தா’ என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள கூவைமலை என்னும் குன்றில் தங்கினார். “கூவை’ என்றால் “பருந்து’. கொல்லிமலையின் மேலிருந்து கூவை மலையைப் பார்த்தால் கழுகு சிறகை விரித்திருப்பது போன்ற தோற்றம்இருக்கும். எனவே இப்பெயர் ஏற்பட்டது.
அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜpத்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால்ஆண் வடிவமாகவும், இடது புறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி அளிக்கிறார். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த மூலவரை பார்த்தே, போகர், பழநியில் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார் என்கிறார்கள்.
நோய் தீர்க்கும் தீர்த்தம்: மலையடிவாரத்தில் பாறைகளுக்கு இடையே யானை வடிவிலான வற்றாத சுனை காணப்படுகிறது. இதை “யானைப்பாழி தீர்த்தம்’ என்கின்றனர். இந்த சுனையில் ஆண்டு முழுவதும் இரும்புச் சத்துடன் கூடிய தண்ணீர் ஊறுகிறது.

ஆகாய கங்கை அருவி
கொல்லி மலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த நீர்வீழ்ச்சியை அடைய சுமார் 760 படிகட்டுகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும். படிகள் இறங்கி, ஏறுவது கடினமாக இருக்கும்
வியூ பாயிண்ட்
சீக்குப்பாறை மற்றும் சேலு}ர் நாடு ஆகிய இடங்களில் வியூ பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நு}லகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) வல்வில் ஓரி மன்னனின் சிலை குதிரை மீதுள்ள 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஙவல்வில் ஓரி விழாங நடத்தப்படுகிறது. வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது.
வாசலு}ர்பட்டி படகுத் துறை
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலு}ர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும். அன்னாசி பழ ஆராய்ச்சி பண்ணை ஒன்றும் இங்கு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
கொல்லி மலையில் அதிகளவில் அபூர்வ மூலிகைகள் கிடைக்கின்றன. சித்த வைத்தியத்திற்கு இந்த மூலிகைகள் பெரிதும் உதவுகின்றன. இம்மலையில் சித்தர்கள் பலர் வாழ்ந்து, நோய் தீர்க்கும் மருந்துகளை கண்டறிந்து கொடுத்துள்ளனர். கொல்லை மலையில் பல சரக்குகளை விற்கும் சந்தை வாரந்தோறும் நடக்கிறது.

--


கொல்லிமலைக்குச் செல்ல முக்கியமாக இரண்டு பாதைகள் உள்ளன. ஓன்று நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக கோம்பை காடு என்னும் ஊர் வழியாக செல்ல வேண்டும். கோம்பையிலிருந்து 12 மைல் தூரம் சென்று அறப்பளீஸ்வர சுவாமி கோயிலை அடையலாம்.
மற்றௌன்று கொப்பம்பட்டி வைரிசெட்டிப்பாளையம் வழியாக புளியஞ்சோலை சென்று அங்கிருந்து 5 மைல் தூரம் சென்றபின் மலையேறும் தரைமட்டத்தில் இருந்து 2 மைல் சென்று அறப்பளீஸ்வர சுவாமி கோயிலை அடையலாம்.
இம்மலை சுமார் 40 சதுர மைல் (280 சதுர கிமீ) நிலப்பரப்பும், 5000 க்கும் மேல் உள்ள ஜனத்தொகையையும், 85 கிராமங்களையும் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.
இம்மலைமீது பல ஊர்கள் உள்ளன. இங்குள்ள பலவூர்களிலும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த மலையிலே வாழும் பூர்வகுடிகள் மலைவாழ் மக்கள் என்றும், மலைக்கௌண்டர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர்.
இந்தியாவிலேயே கரடிகள் இந்த பகுதியில் மிக அதிகம். அந்தக் கொல்லி மலையில் மரங்களில் பாம்புகள் தலை கீழாகத் தொங்கிய படி இருக்கும் காட்சியை காணலாம், பலாப்பழம், அன்னாசி, பேரிக்காய், கொய்யா, மாம்பழம், காப்பி, அதிகம் விளைகிறது, மான்களும், மயில்களும் அங்கே சுற்றித் திரியும்.
கொல்லிமலையில் இருந்து சுவேதா நதியும், கோம்பை ஆறு, அய்யாறு, கூட்டாறு, கருவோட்டாறு, கல்லக்குழியில் பஞ்ச நதி போண்ற ஆறுகள் உற்பத்தியாகி நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஏரிகளை நிரப்பி காவிரி ஆற்றில் கலக்கின்றது. கொல்லிமலையில் நீர் ஊற்று நிறைந்த இடங்கள் அதிகம் காணப்படுகின்றன. இங்குள்ள குன்றுகளில் தேன் கூடுகளைக் காணலாம்.
இம்மலைக் காடுகளில் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. நு}ற்றாண்டுகளுக்கு முன் இங்கு கொல்லிவாய்ப் பறவைகள் அதிகம் வசித்தால் இது கொல்லிமலை என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். நான்கு புறமும் சதுர வடிவில் மலைகளால் சூழப்பட்ட பகுதியாக உள்ளதால் இது சதுரகிரி எனவும் அழைக்கப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க அறப்பளீஸ்வரர் கோயிலின் அருகில் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி உள்ளது. நீர் வீழ்ச்சிக்குச் செல்ல 720 படிகட்டுகள் உள்ளன. இதை தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுகள் அமைத்துள்ளது. 160 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளித்தால் பல்வேறு நோய்கள் தீருவதுடன் உடல் ஆரோக்கியம் அடைகிறது. நீர்வீழ்ச்சியில் இருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதிறை அடைகிறது.
கோயிலுக்கு முன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நீரோடை உள்ளது. அந்த காலத்தில் நீரோடையில் ஏராளமான மீன்கள் துள்ளி குதித்து விளையாடியதாம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி மீனை பிடித்து அதன் மூக்கில் தங்க கம்பியை பொருத்துவார்களாம். அப்படி மீனுக்கு முள் குத்தி விடுபவர்களுக்கு அந்த ஆண்டே குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது.
மலைவாசிகள் அறப்பளீஸ்வரரை குல தெய்வமாக வணங்குகிறார்கள். மைசூர் சுவாமிகள் என்று அழைக்கப்படும் நாதநந்த யோகியின் சமாதி கோயிலுக்கு மேற்கில் இருக்கிறது. கோயிலுக்கு வடக்கில் பஞ்ச நதி ஆறு ஓடுகிறது. காடுகளும் சோலைகளும் நிறைந்த அப்பகுதியில் இயற்கையின் காட்சி கண் கொள்ளாதது. கோயிலுக்கு நேர் கிழக்கில் ½ மைல் கீழே பயங்கரமான பாதை வழியில் இறங்கிப் போனால் 160 அடி உயரத்தில் இருந்து ஆகாய கங்கை அருவி விழுவதைப் பார்க்கலாம்.
அந்த அருவி நீர் பாயும் ஓடை வழியாகச் சென்றால் ஒரு சிறு செங்குத்தான குன்றும் அதனுள் குகையையும் காணலாம். இது கோரக்கர் குகை எனப்படுகிறது. குகைப் பக்கத்தில் தென்புறம் ஒரு அகழி இருக்கிறது. இது கோரக்கர் குண்டம் என அழைக்கப்படுகிறது. இங்கு கோரக்கர் என்னும் சித்தர் தன் மாணவர்களுடன் கூடி தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த குகையைச் சுற்றிப் பல அரிய மூலிகைகளைக் காணலாம்.
அறப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து வட பக்கம் 3 மைல் தூரத்தில் சோரம் அடையான் கோயில் உள்ளது. இது மலைவாசிகளால் வணங்கப்பட்ட முந்தைய தெய்வம் என கருதப்படுகிறது. இந்த கோயிலில் இருந்து மேற்குப்புறம் 1 மைல் தூரத்தில்தான் கொல்லிப்பாவை என்னும் சிலை உள்ளது.
இங்கிருந்து கிழக்கு நோக்கி 2 மைல் சென்றால் அங்கு ஒரு குன்றின் மீது பெரியண்ண சுவாமி கோயில் இருக்கிறது. தரை மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் பழைய காலத்து குயவன் மண் ஓடுகளால் கோயிலும், மண்ணினால் செய்யப்பட்ட குதிரை சிலை வாகனத்தில் அமர்ந்து கையில் திரிசூலம் ஏந்தி வேட்டைக்குச் செல்லும் பாணியில் பெரியண்ண சுவாமி சிலையும் காட்சியளிக்கிறது.
இங்கு பல சித்தர்கள் வாழ்ந்தார்கள். இன்றும் இங்கு சித்தர்களைக் காணலாம். அவ்வையார் முதல் 18 சித்தர்களும் இம்மலையில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இதற்கு ஆதாரமாக குகைகளும் காணப்படுகிறது. சித்தர்கள் இங்குள்ள மூலிகைகளின் பயன்களை அறிந்து அவற்றை மக்கள் பயன்படுத்தும் விதத்தில் ஓலைச் சுவடியில் எழுதி வைத்துள்ளனர். நவபாஷாண சிலைகள், மூப்பு பலவித விலை மதிப்புள்ள கற்கள் இம்மலையில் இன்றும் காணப்படுகிறது. இம்மலையில் உள்ள மூலிகைகள் தவிர பதிணென்கீழ் சித்தர்களால் தயார் செய்யப்பட்ட பல அரிய மருந்துகள், தைலம், ரசமணி, மூப்பு, சுண்ணம் இவைகள் கல்லறைகளில் புதை பொருளாக வைக்கப்பட்டிருப்பதாக காலங்கி நாதர் மலைவளம் என்னும் நு}லில் குறிப்பிட்டுள்ளார்.
கொல்லிமலை ஒரு காலத்தில் மூலிகைகளின் செர்க பூமியாகத் திகழ்ந்தது. மருத்துவ குணம் வாய்ந்த அரிய வகை மூலிகைகள் அடர்ந்த காட்டுப் பகுதியிலும் நீர் கசிந்து கொண்டு இருக்கும் இடங்களிலும் காணப்படுகிறது. இம்மூலிகைகள் தானே வளர்ந்து பின்னர் அழிந்து வளரும் தன்மை கொண்டது. இந்த மூலிகைகளை மாந்திரீக தன்மை வாய்ந்ததாக கருதி மலைவாழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளான வேலால் தாக்கப்பட்ட புண்ணை ஆற்றும் சாவல்யகரணி, துண்டிக்கப்பட்ட பாகங்களை ஒன்று சேர்க்கும் சந்தாண கரணி, ஜோதி விருட்சகம், சாயா விருட்சகம், அழுகுண்ணி, தொழுகண்ணி போண்ற மூலிகைகள் இங்கு மட்டுமே காணப்படும் அரிய மூலிகைகளாகும். இம்மலையில் மூலிகையைத் தேடி வரும் யாவரும் கொல்லிப்பாவையை வணங்கியே செல்ல வேண்டும் என சொல்லப்படுகிறது.
இம்மூலிகைகளுக்கும் அரிய மருந்துகளுக்கும் காவலாக கொல்லிப்பாவை பெரியண்ண சுவாமி என்னும் தெய்வங்களை அமைத்து வைத்திருப்பதாக சித்தர் நு}லால் அறிகிறோம்.
வரலாற்றுக் குறிப்புகள் : பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானு}று, ஐங்குறுநு}று முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கொல்லிப்பாவையின் வரலாறு சங்க நு}ல்களில் வேறு விதமாகக் காணப்படுகிறது.
இம்மலையும் இதைச் சார்ந்த கிராமத்தையும் சுமார் கிபி 200-ல், ஓரி என்ற அரசன் ஆட்சி புரிந்ததாக வரலாறுகளில் காணப்படுகிறது. இவனது மகள் தான் கொல்லிப்பாவை. இவள் அழகில் சிறந்தவள். புறனானு}ற்றில் இவளைப் பற்றி பல பாடல்களில் சிறப்பாக கூறப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு கொண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி கொல்லிமலையை முன்பு ஆட்சி செய்தான். சேரனின் ஆட்சி பிடியில் இருந்து விடுபட்டு கொல்லிமலையை வல்வில் ஓரியும், முசிறியை ஆண்ட கழுவுள், தகடூரை ஆண்ட அதியமான் ஆகிய மூன்று பேரும் தனி ஆட்சி செய்தனர்.
ஓரி என்பதற்கு தேனின் முதிர்ந்த நிறம் என்று பெயர். இந்த நிறமுடைய குதிரையை இவன் பெற்று இருந்ததால் இவனுக்கு ஓரி என்ற சிறப்புப் பெயர் கிடைத்தது. இவனுடைய இயற்பெயர் ஆதன். வில் எய்வதில் சிறந்தவன் ஆக விளங்கியதால் வல்வில் ஓரி என்று அழைக்கப்பட்டான். ஒரே அம்பில் யானை, புலியின் வாய், மானின் உடல், காட்டுப் பன்றி, உடும்பின் தலை ஆகியவற்றை துளையிட்டு, 5 விலங்கினங்களைக் கொன்றான் என்ற சிறப்பே வல்வில் ஓரி என்ற பெயர் நிலைக்க காரணமாயிற்று. வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன.
இவன் நாமக்கல் ராசமாபுரமாகிய ராசிபுரம், கொல்லிமலை ஆகிய பகுதிகளை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். ராசிபுரம் சிவன் கோயிலும், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலும் வல்வில் ஓரி ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டவையாகும். இங்கு வல்வில் ஓரிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இச்சிலைக்கு விழா எடுக்கப்படுகிறது. மறவர் குடியைச் சேர்ந்தவன் ஓரி என வரலாற்றுச் சான்றுகள் கூறுகிறது.
பெருஞ்சேரல் இரும்பொறை, மலையான் திருமுடிக்காரி படையுடன் வந்து வல்வில் ஓரியுடன் போரிட்டான். நீர் கூர் மீமிசை என்ற இடத்தில் நடந்த போரில் படை வலிமை குறைந்த வல்வில் ஓரி தோற்றதுடன் இறந்தும் போனான். பெருஞ்சேரல் ஓரியை வென்றதன் அடையாளமாக கொல்லிப் பொறையன் என்ற காசை வெளியிட்டான். வல்வில் ஓரியை போரில் தோற்கடித்து இறக்கச் செய்தபின் பெருஞ்சேரல் கொல்லிமலையின் உள்ளே தன் படையுடன் நுழைந்தான். ஆனால் கொல்லிமலை மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு அவனை ஊருக்குள் விடாமல் தடுத்தனர். இதனால் தன் படைத்தலைவன் பிட்டன் கொற்றனிடம் கொல்லிமலையை ஆட்சி செய்ய ஒப்படைத்ததாக அகநானு}ற்றில் கூறப்பட்டுள்ளது.
வல்வில் ஓரியின் சாவுக்கு, அவன் உறவினனாகிய அதியமான் நெடுமானஞ்சி, சோழன் கிள்ளி வளவனுடைய உதவியைக் கொண்டு திருக்கோவலு}ர் மீது படையெடுத்துச் சென்று அந்த ஊரையும் அழித்தான்; மலையமானுடைய முள்ளூர் மலைக் கோட்டையையும் தரைமட்டமாக்கினான், என்று பொன்னியின் செல்வனில் கூறப்பட்டுள்ளது.
கொல்லிமலையில் 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 கல்வெட்டுக்கள் சோழ மன்னர்களின் கால கட்டத்தைச் சார்ந்தவையாகும்.
இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள ஙமதுவனம்ங எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்.
சுற்றுலாத் தலங்கள்
1. ஆகாச கங்கை நீர் வீழ்ச்சி அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக 720 படிகள் இறங்கிச் சென்றால், இந்த நீர் வீழ்ச்சியில் நீராடலாம். 160 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம். 160 அடி உயரமுடைய இந்நீர் வீழ்ச்சியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.
2. கொல்லிப் பாவைக் கோவில் கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது. அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு மேற்கில் ஞகொல்லிப்பாவைஞ என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானு}று ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.
கொல்லிப்பாவை என்பது கொல்லிமலை மேல் சித்தர்களால் செய்து வைக்கப்பட்ட பதுமை. கொல்லிமலை தவம் செய்வதற்கும் தனித்து வாழ்வதற்கும் தகுதியான இடம். தேன், பலா, கொய்யா முதலிய பழவகைகள் நிறைந்த இடம் எனவே சித்தர்கள், முனிவர்கள் அங்கு தங்கினர். இதைத் தெரிந்து கொண்ட அசுரர்கள் அங்கு வந்து கூடினர். இவ்வாறு அசுரர்கள் வந்து கூடியதால் முனிவர்களின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
அப்பொழுது தேவரும், முனிவரும் அப்பகைவரை அடக்கவோ, எதிர்க்கவோ முடியாததால் அசுரர்கள் வரும் வழியில் அவர்கள் கண்டு மயங்கும் வண்ணம் அழகமைந்த பெண் வடிவம் செய்து வைக்க நிச்சயத்து விஸ்வகர்மாவை அழைத்து தமக்கு உற்ற துன்பத்ததைக் கூற அவரும் அம்மலைமேல் அசுரர் வரும் வழியில் கல்லால் பாவை ஒன்றை செய்து, அதற்கு பல சக்திகளை ஊட்டி, அசுரர் வாடை பட்டவுடன் நகைக்கும் திறமும், காண்போரின் விழியும், உள்ளமும் கவர்ந்து அவருக்கு பெரும் காமவேட்கை வருவித்து, இறுதியில் கொல்லத்தக்க மோகினி வடிவம் அமைத்து அங்கே பிரதிஷ்டை செய்தார்.
இப்பாவையின் உடல் உறுப்புகள் அசையும் தன்மையானவை. இப்பாவையை நோக்கினோர் அச்சக்தி இயங்குவதையும், நகைப்பதையும் கண்டு பெண் என மயங்கி காமநோய் கொண்டு அருகே செல்லும் போது அது தன் மாய சக்தியால் அவரைக் கொன்றுவிடும். இப்பாவை காற்று, இடி, மழை, பூகம்பம் இவற்றால் அழியாது என நற்றினை என்னும் நு}லில் பரணர் என்னும் புலவரால் பாடப்பெற்றுள்ளது.
இக்கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் ஞஎட்டுக்கை அம்மன்ஞ என்று கூறுகின்றனர்.
3. அறப்பளீஸ்வரர் கோவில் சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஊர் பெரிய கோயிலு}ர் என்றும்; கோயிற் பகுதி அறப்பளீசுரர் கோயில் என்றும் வழங்குகிறது. அறை ஸ்ரீ சிறிய மலை. பள்ளி ஸ்ரீ கோயில். மலைமேல் உள்ள கோயில் ஸ்ரீ அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் ஙஅறப்பளி மகாதேவன்ங, ஙஅறப்பளி உடையார்ங என்ற பெயர்களாளும் அழைக்கப்படுகிறார்.
12ம் நு}ற்றhண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ஙமீன் கோயில்ங என்றும் அழைக்கப்படுகிறது. பக்தர்கள் கொல்லி மலை நீர்விழுச்சியில் நீராடி அரபளீஸ்வரரை தரிசனம் செய்வார்கள்.
இக்கோயிலுக்குப் பக்கத்தில் ஞமீன்பள்ளிஞ ஆறு ஓடுகிறது; இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.
கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் ஞஅறப்பளீசுர சதகம்ஞ என்னும் அருமையான நு}லைப் பாடியுள்ளார். அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஙசதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனேங என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு.
இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
உறையூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் திரு. அருணாசல முதலியார் என்பவர், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து இக்கோயிலில் கும்பாபிசேகம் செய்வித்துள்ளார்.
4. முருகன் கோவில்  அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஸ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.
5. படகு சவாரி  தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலு}ர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்
6. வியூ பாயிண்ட்  இந்த இடம் ஊட்டி தொட்டபெட்டா அளவிற்கு இல்லையெனினும் பார்க்க வேண்டிய இடமாகும்.
7. வல்வில் ஓரி பண்டிகை செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்;) காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நு}லகம், தொலைபேசி நிலையம் முதலியன உள்ளது. ஙவல்வில் ஓரிங மன்னனின் சிலை குதிரை மீதுள்ள 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஙவல்வில் ஓரி விழாங நடத்தப்படுகிறது. மலைவாழ் மக்கள் ஆடிப் பெருக்கு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
கொல்லி மலையில் இந்தியாவிலேயே பெரிய மூலிகைப் பண்ணை அரசாங்கத்தால் (வனத்துறையினர்) நிர்வகிக்கப்படுகிறது. தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையினரின் பண்ணையும் இம்மலைப் பகுதியில் உள்ளன.
8. வார சந்தை கொல்லிமலை என்றாலே சுற்றுலா பயணிகளுக்கு நினைவுக்கு வருவது அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. அதற்கு அடுத்தாற்போல் நினைவுக்கு வருவது அங்கு விளையும் பலா மற்றும் அன்னாசி பழங்கள் ஆகும்.
மலையில் உள்ள மண்வளம் மற்றும் நீர் வளத்தால் இங்கு விளையும் அன்னாசி பழம் மிகுந்த சுவையுடையதாக உள்ளது. அந்த பழத்துக்கு ஏற்றார் போல் சந்தையில் விலை கிடைத்து வருகிறது. இதனால் கொல்லிமலையில் உள்ள சோளக்காடு வாரச்சந்தையில் அன்னாசிபழம் அதிகமாக கிடைக்கிறது.
கொல்லிமலையில் அரியூர் நாடு மற்றும் குண்டூர் நாடு ஆகிய பகுதிகளில் தான் அன்னாசி அதிகம் விளைந்து வருகிறது. இங்குள்ள குழிவளவு, தேவகாய், மூடுபாலி, தேனு}ல், துவரபள்ளம், வெள்ளகுழி, நத்துகுழி போன்ற கிராமங்களில் விளையும் அன்னாசி பழங்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த மலையில் அதிக முட்கள்களுடன் காணப்படும் நாட்டு ரக அன்னாசியும், முட்கள் இல்லாமல் காணப்படும் கியூ ரக அன்னாசிகளும் விளைந்து வருகிறது. இதில் கியூ ரக அன்னாசி பழங்கள் ஜுஸ் தயார் செய்வதற்காக தொழிற்சாலைகளுக்கும், மற்ற பழங்கள் வெளி மாவட்ட விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது.
கடந்த 2008ம் ஆண்டு ஒரு செமையின் (ஒரு சாக்கில் 25 பழங்கள்) விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனையானது. 2009 ம் ஆண்டு 150 ரூபாய் வரைதான் விற்பனையானது. இந்த நிலையில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து விற்பனைக்கு கொண்டு செல்ல வியாபாரிகள் சந்தையில் குவிந்து விவசாயிகளிடம் பேரம் பேசி அன்னாசி பழங்களை வாங்கி செல்கின்றனர்.
இதில் சிறு ரக அன்னாசி, நாட்டு ரகம், கியூ அன்னாசி என்று ரகங்கள் பிரித்து விற்பனை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. சோளக்காடு வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
9. தாவரவியல் பூங்கா  தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானலில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதை போல கொல்லிமலை வாசலு}ர்பட்டியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த தாவரவியல் பூங்காவில் 87 வகையான மூலிகைகள் இடம் பெற்றுள்ளது. பூங்காவின் நடுவில் குறுக்கும், நெடுக்குமாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிறுவர்கள் விளையாட்டு தளம், மூலிகைப் பண்ணை, ரோஜh தோட்டம், கண்ணாடி இல்லம் மற்றும் இயற்கை புல் தரைகள், மூங்கில் காடுகளின் தோற்றம் போன்றவை கண்ணை கவரும் வகையில் உள்ளது.
மேலும் 3 விதமாக பசுமை குடில்கள் சுற்றுலா பயணிகள் தங்கி ஓய்வெடுக்க ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. புலி குகை இல்லம், மூங்கில் படகு போன்ற அமைப்பில் ஒரு குடில், ஜப்பானிய முறையில் ஒரு இல்லம் தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலையில் காட்சி கோபுரம் (வியு பாயிண்ட்) அமைக்கப்பட்டுள்ளதை போல வாசலு}ர்பட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் பூங்காவை இணைக்கும் வகையில் மிக உயரமான அளவில் ரூ. 6 லட்சம் மதிப்பில் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.
காட்சி கோபுரம் அருகில் இயற்கை காட்சியை ரசிக்கும் வகையில் 2 மீட்டர் அகலத்தில் குறுக்கே நடைபாதையில் சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இந்த தாவரவியல் பூங்கா காட்சி கோபுரம் அருகே உள்ள இயற்கை காட்டில் மான்கள் சுற்றிவரும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது.
கொல்லிமலையில் முதுமக்கள் வாழ்ந்த தாழி கண்டுபிடிப்பு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வாசலு}ர்பட்டியில் சின்ன சோளக்கண்ணி என்னும் கிராமத்திற்கு செல்லும் வழியில் முதுமக்கள் வாழ்ந்த தாழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் வாழ்ந்து வயது ஆனதும் இந்த தாழியில் அவர்களை வைத்து தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்பட்டதாகவும், அதை அவர்கள் சாப்பிட்டு அதிலேயே அவர்களது உயிர் பிரியும் வகையிலும் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த தாழிகள் சுமார் 2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வைக்கப்பட்டுள்ள தாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் சுரங்க பாதை ஒன்றும் காணப்படுகிறது. அது தரையில் சுமார் 5 அடி ஆழத்திலும் 5 அடி அகலத்திலும் இருப்பதாக தெரிகிறது.
இதே போல் கொல்லிமலை பைல் நாட்டில் கீழ் கழுவூர் என்னும் இடத்தில் தாழி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவைகளை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மூங்கில் நெல் அறுவடை கொல்லிமலை அடிவாரத்தில் 40 வருடத்திற்கு பிறகு மூங்கில் தோப்பில் இருந்து இயற்கையாக கிடைக்கும் நெல் சீசன் தற்போது தொடங்கி உள்ளது.
கொல்லிமலை அடிவாரத்தில் காரவள்ளியில் வனத்துறையின் சோதனை சாவடி உள்ளது. அந்த பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் மூங்கில் தோப்புகள் காணப்படுகிறது.
அந்த தோப்புகளில் அதிக அளவு உயரம் கொண்ட மூங்கில் மரங்கள் காணப்படுகிறது. தற்போது அந்த மரங்களில் பால் பிடித்து, பூ வைத்து உள்ள நிலையில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து அதன் எடை தாங்காமல் வளைந்து காணப்படுகிறது.
40 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அந்த பூ சீசன் தோன்று வதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பூவில் இருந்து இயற்கையான நெல் கிடைக்கிறது. அதாவது உரம் போடாமலேயே இயற்கையில் விளையும் தன்மை கொண்ட தாகும்.
அவ்வாறு விளையும் நெல் தற்போது அந்த பகுதியில் கொட்டி வருகிறது. இதனை அப்பகுதி விவசாயிகள் சமைத்து சாப்பிடவும் செய்கின்றனர். இது தவிர வனபகுதிக்குள் திரிந்து கொண்டு இருக்கும் காட்டுக் கோழி, குரங்கு, பன்றி போன்ற வைகள் மூங்கில் மரங்களின் கீழே கிடக்கும் நெல்களை சாப்பிடுகிறது. இன்னும் 1 மாதம் வரையில் அந்த இயற்கையான நெல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த மூங்கில்களின் ஆயுட் காலம் முடிவடைந்து விடுகிறது.
அந்த மரங்களை இதர உபயோகங்களுக்காக வெட்டி விடுகின்றனர். தற்போது அந்த மூங்கில் மரங்களை கொல்லிமலைக்கு செல்லும் சாலையின் இருபுறங் களிலும் காணும் போது அவைகள் நம்மை வரவேற்பதாக காணப்படுகிறது. இவை பெரு வார மூங்கில் ரக வகையைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...