மறந்து போன மருத்துவ உணவுகள்
இன்றைக்கு சில அடி தூரம் நடந்தாலே, பலருக்கும் முட்டி வலிக்கிறது; மூச்சு வாங்குகிறது. ஆனால், எந்த வாகன வசதியுமே இல்லாத அந்தக் காலத்தில் பல மைல் தூரத்தை நடந்தே கடந்து சென்றவர்கள் நம்முடைய முன்னோர். ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்ததுதான் அதற்கான காரணம். மறந்துபோன மருத்துவ உணவுகளில் சில இங்கே...ஆவாரம்பூ கஷாயம்
தேவையானவை: ஆவாரம்பூ - 100 கிராம், சுக்கு - ஒரு துண்டு, ஏலக்காய் - 20, உலர்ந்த வல்லாரை இலை - 100 கிராம், சோம்பு - ஒரு டீஸ்பூன்.
மருத்துவப் பயன்: சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
சாமை, தினை அரிசி அடை
தேவையானவை: சாமை, தினை அரிசி - தலா 100 கிராம், சின்ன வெங்காயம் - 50 கிராம், தக்காளி - 1, மிளகு - 20, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 6 பல், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.
மருத்துவப் பயன்: உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பு தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, டூவீலரில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் இதைச் சாப்பிட, வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி குறையும்.
கற்றாழை அல்வா
தேவையானவை: சோற்றுக் கற்றாழை - கால் கிலோ, முந்திரி, பாதாம் பருப்பு - தலா 100 கிராம், சுக்கு - 20 கிராம், ஏலக்காய் - 25 கிராம், நாட்டு வெல்லம் - அரை கிலோ, நெய், தேன் - தலா 2 டீஸ்பூன்.
மருத்துவப் பயன்: வெள்ளைப்படுதல், கருப்பைப் புண், பால்வினை நோய்களைக் குணப்படுத்தும். எலும்புருக்கி நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும். பார்வைக் கோளாறுகளைச் சரிசெய்யும். குடல் கிருமிகளை அகற்றும். மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு வலிமை தரும்.
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு
தேவையானவை: பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, கறுப்பு உளுந்து - தலா கால் கிலோ, பச்சரிசி - ஒரு கிலோ, ஏலக்காய், சீரகம், மிளகு - தலா 25 கிராம், முருங்கைக் கீரை - ஒரு கட்டு.
மருத்துவப் பயன்: மூட்டு வலி, கழுத்து வலி குணமாகும். இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை சரியாகும். மாதவிடாய்ப் பிரச்னையைத் தீர்க்கும். இளைத்த உடலைத் தேற்றும்.
No comments:
Post a Comment