அழிவை சந்தித்த நீர் ஆதாரங்கள்…
பாண்டியர்கள் காலத்தை நீர் நிலைகளின் பொற்காலம் எனலாம். வைகை, தாமிரபரணி, பழையாறு, காவிரி இங்கெல்லாம் ஏராளமான அணைகளைப் பாண்டிய மன்னர்கள் கட்டினார்கள். அதற்கான வரலாறுகள் தான் இன்று இருக்கின்றன. ஆனால், அதற்கு சான்றhன நீர் ஆதாரங்கள் பல அழிவைத்தான் சந்தித்திருக்கின்றன. அப்படி அழிவை சந்தித்த நீர் ஆதாரங்களை பற்றி இன்றைய அரங்கில் விவாதிப்போமா…
தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏரி, குளங்கள் இருந்த இடங்கள் அதிகாரிகளின் துணையுடன் தனியாரால் களவாடப்பட்டுள்ளன. தனியார் தவிர அரசு பயன்பாட்டுக்காகவே ஏராளமான நீர்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மாநிலமெங்கும் நு}ற்றுக்கணக்கான நீர்நிலைகள் தூர்க்கப்பட்டு அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கான சில உதாரணங்கள் மட்டும் இதோ
உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டடிடம்.
சென்னை நேரு ஸ்டேடியம்
கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு பேருந்து நிலையம்
வள்ளுவர் கோட்டம்
பனகல் மாளிகை
வேளச்சேரி ரயில் நிலையம்
முகப்பேர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு
பறக்கும் ரயில் திட்ட பாதை
சேலம் பேருந்து நிலையம்
விழுப்புரம் பேருந்து நிலையம் என பல உதாரணங்கள் உண்டு.
நதிகள் ஸ்ரீ நாகரிகங்களின் தாய் என்பார்கள். நதிகளை மையமாக வைத்தே நாகரிகங்கள் தோன்றின. மனித வாழ்க்கைக்கு நதியின் நீர் அத்தியாவசியத் தேவை. நதிக்கரைகளில்தான் மனித இனத்தின் வாழ்க்கை ஆதாரங்கள் அதிகம் கிட்டின. பயிர் வளர்த்தும், அறுவடை செய்தும் மனிதன், தனக்கான உணவுக்கு வழிசெய்து கொண்டதற்கு முதற்காரணமாக அமைந்தவையும் நதிகளே.. இப்படி நதிகளை ஒட்டியே வளர்ந்த மனிதன், தன் இனத்தின் வரலாற்றையும் கலாசாரத்தையும் நதிகளின் நினைவுகளுடனேயே பதிவு செய்திருக்கிறhன்.
இன்றைய மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் பாண்டியர்கள் கட்டிய அணைகளும் ஏராளம். நாஞ்சில் நாட்டில் (கன்னியாகுமரி மாவட்டம்) பழையாற்றின் குறுக்கே இவர்கள் கட்டிய பாண்டியன் அணைக்கட்டுகளைப் பார்த்து ஆங்கிலேய பொறியாளர்கள் வியந்துப்போனார்கள். அவற்றை மக்கள் இன்றளவும் பயன்படுத்துகிறhர்கள். பாண்டியன் அணையை 1750-ல் முதலாவது திருவிதாங்கூர் மன்னரான மார்தாண்டவர்ம ராஜh புதுப்பித்தார். அதுதான் புத்தன் அணை என அழைக்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறhர் நாகர்கோவிலைச் சேர்ந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள். புத்தன் அணை என்றhல் மலையாளத்தில் புதிய அணை என்று அர்த்தம்.
நம் நாட்டில் நதிகளை தெய்வங்களாகப் பார்ப்பார்கள். அவ்வாறே மதித்து வழிபாடும் செய்வார்கள். அவ்வகையில் கங்கையும் காவிரியும் மிகப் புனிதமான நதிகள் என்று போற்றப்படுவதை நாம் அறிவோம். தமிழக நதிகள் குறித்துப் பாடும் போது, காவிரி தென்பெண்ணை பாலாறு, தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி என்பார்கள். தமிழகத்தின் தென்கோடி முனையில் இருக்கும் கடைசி பெரிய ஆறு பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு. இந்த நதி வற்றhத ஜPவ நதி எனப் பெயா] பெற்றது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலையில் பிறந்து, அந்த மாவட்டத்திலேயே வங்கக் கடலில் கலக்கிறது என்று பெருமையாகச் சொல்வார்கள].
அம்பாசமுத்திரம் நகரத்தின் கரையோரத்தில் பெருகி வழிந்தோடுகிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆறு மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடங்கி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடுகிறது.
இந்த நதி இப்பெயரை பெற காரணமாக இருந்தது தாமிரம் என்ற உலோகம் இங்கு அதிகமாக காணப்படுவதே. மேலும் இயற்கை மூலிகைகள் பலவற்றை கொண்டுள்ள பொதிகை மலைகளை கடந்து வருவதால், இந்த ஆற்றுத் தண்ணீருக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
மிகவும் தித்திப்பாக இருக்கும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை ஒரு முறையாவது கண்டிப்பாக பருகினால் அதன் அருமை புரியும். தாமிரம் உலோகம் கலந்திருப்பதால் இந்நீர் சிவந்த நிறத்தில் காணப்படும்.
அப்படிப்பட்ட பெருமைக்குரிய தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது அதிகரித்து வருகிறது. கூடவே ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது.
இப்படி மதுரையிலும் கன்னியாகுமரியிலும் நம் முன்னோர்கள் அமைத்த நீர் நிலைகளின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், அதே மதுரையிலும் கன்னியாகுமரியிலும் நாம் என்ன செய்தோம்?
ஒருகாலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் 959 குளங்களும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 2,593 குளங்களும் இருந்தன. இவற்றில் சுமார் 3,500 குளங்கள் இன்று அழிந்துவிட்டன. இதனால், குமரி மாவட்டத்தின் விவசாயமும் அழிந்துவருகிறது. 1982-ம் ஆண்டு 46,000 ஏக்கராக இருந்த குமரியின் நெல் சாகுபடி, தற்போது 18 ஆயிரம் ஏக்கராக சுருங்கிவிட்டது. நாகர்கோவிலில் மட்டும் கண் முன்னாலேயே ஐந்து குளங்களை மூடிவிட்டார்கள் என்று வேதனைப்படுகிறhர் நாகர்கோவில் ஆய்வாளர் அ.கா.பெருமாள்.
நாகர்கோவிலின் செம்மாங்குளம் அண்ணா பேருந்து நிலையமாகிவிட்டது. கள்ளர்குளம் அண்ணா விளையாட்டு மைதானமாகிவிட்டது. இந்தக் குளத்தில்தான் முன்பு இடலாபுரத்தில் இருந்த கிளை சிறைச்சாலையின் கைதிகளை அழைத்து வந்து குளிக்க வைத்தார்கள். எழுத்தாளர் சுந்தரராமசாமி தனது ‘ஒரு புளிய மரத்தின் கதை’யில் இந்தக் குளத்தின் நாற்றம் தாங்க முடியாமல் மூடிவிட்டதாக கற்பனையாக ஒரு காலத்தில் எழுதினார். பிற்காலத்தில் அது உண்மையாகவே ஆகிவிட்டது. வடசேரி குளம் கிறிஸ்டோஃபர் பேருந்து நிலையமாகிவிட்டது. நாகராஜh குளம் நாகராஜh நகராட்சி திடலாகிவிட்டது. பெதஸ்தா குளம் வணிகக் கட்டிடங்களாகி விட்டது.
இவை மட்டுமின்றி இன்னும் அழியக் காத்திருக்கின்றன குளங்கள். நாகர்கோவில் – பூதப்பாண்டி சாலையில் புத்தேரி பெரிய குளம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆகாயத் தாமரைகளாலும் புதர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 1000 ஏக்கருக்கு மேல் பாசன வசதி தரும் குளம் இது. குளத்தை ஆக்கிரமித்து நில வணிக முயற்சிகளும் தொடங்கியிருக்கின்றன. இதே நிலைதான் தாமரைக் குளத்திற்கும்.
மதுரையில், மட்டும் பார்த்தீர்களென்றhல்,
மதுரை கண்மாய்களின் கதையைக் கேட்டால் கண்ணீர் வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் அங்கு 30 கண்மாய்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 7 மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. சிலையனேரிக் கண்மாய், ஆணையூர் கண்மாய், ஆ.கோச குளம் கண்மாய்களில் வீடுகள் கட்டி குடியிருக்கிறhர்கள். தத்தனேரி கண்மாயும் செல்லு}ர் கண்மாயும் தென்னக ரயில்வேயால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பீ.பீ.குளம், சொரிக்குளங்களை வருமான வரித்துறை, சுங்கத்துறை, அஞ்சல் துறை, வருங்கால வைப்பு நிதி, வணிக வரித் துறை ஆகிய துறைகள் பங்கிட்டுக்கொண்டன. தல்லாகுளத்துக்குள] தான் மதுரை மாநகராட்சி அலுவலகமும் சட்டக் கல்லு}ரியும் உலகத் தமிழ்ச் சங்கமும் அமைந்திருக்கின்றன. வண்டியூர் கண்மாய் மாட்டுத்தாவணி பேருந்து நிலையமாகிவிட்டது. செங்குளம் மாவட்ட நீதிமன்றமாகிவிட்டது. உலகனேரி உயர் நீதிமன்றமாகிவிட்டது. புதுக்குளம் செய்தியாளர் நகராகிவிட்டது. புதூர் கண்மாய் மாவட்ட அலுவலர் குடியிருப்பாகிவிட்டது. வில்லாபுரம் கண்மாய் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளாகிவிட்டன. அவனியாபுரம் கண்மாய் குப்பைக்கிடங்கு ஆகிவிட்டது. முடக்கத்தான் கண்மாய், அனுப்பானடி சின்னக் கண்மாய், சிந்தாமணி கண்மாய், துணியாத்திக் கண்மாய், ஜலந்தன் கண்மாய், அயன் பாப்பாக்குடி கண்மாய், நாராயணபுரம் கண்மாய், ஆத்திக்குளம் இவை எல்லாம் கழிவு நீர் காப்பகங்களாகி விட்டன.
இந்தாண்டு பருவமழை கைகொடுத்தும்கூட, மதுரை விரிவாக்கப் பகுதி கண்மாய்கள் வறண்ட நிலையில் தான் உள்ளன. கண்மாய்களை முறையாக தூர்வாரி பராமரிக்காததும், கண்மாய்களில் மண்டிய கருவேலமரங்களை அகற்றhததும், நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பாளர்களால் மாயமானதாலும் தான் இந்நிலை. இனியாவது கண்மாய்களிலுள்ள கருவேலமரங்களை அகற்றி, தூர்வாரி, வரத்து கால்வாய்களை மீட்டு தண்ணீர் நிரம்ப அதிகாரிகள் முன்வர வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் 39 ஆயிரத்து 202 ஏரிகள் உள்ளன என்றும், அவற் றில் 13 ஆயிரத்து 699 ஏரிகள் தங்கள் பராமரிப்பில் உள்ளன என்றும் பொதுப் பணித் துறையினர் கூறியுள்ளனர். எனினும் அவற்றில் 3 ஆயிரத்து 701 ஏரிகள் மட்டுமே முழுமையாக பாது காக்கப்பட்டுள்ளன என பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. அதாவது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் முழுமையாக பாதுகாக்கப்படவில்லை என்றும், ஏரியின் எல்லைகளை சர்வே செய்வது, எல்லைக் கற்கள் நடுவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய மழை வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடர் என கூற முடியாது. இவையாவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. நடந்தவையெல்லாம் நடந்த வையாகவே இருக்கட்டும். இனியாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
1900-ம் ஆண்டு களின் ஆங்கிலேயே ஆட்சிக்கால சர்வே மற்றும் செட்டில்மெண்ட் பதிவேடுகளின்படி அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களையும் ஒருங்கிணைந்த நீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் இந்த மாவட்டங்களில் உள்ள சுமார் 3,600 ஏரிகளை பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் வேளாண்மைத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மூலம் மட்டுமே 1960-ம் ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டில் சுமார் 23 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அதுவே 2011-ம் ஆண்டு வாக்கில் சுமார் 13 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்கால உணவுப் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குரியதாகி விடும்.
மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து திருச்சி செல்லும் சாலை. உத்தங்குடி பகுதியிலிருந்த உலகனேரியைப்பற்றி இன்றைக்கு பார்ப்போம்.
உலகனேரியை நீங்கள் காண முடியாது. இருந்தால் தானே காண முடியும்? முன்பொரு காலத்தில் நதியாய் ஓடிய வைகையிலிருந்து பிரிந்து ஆனைமலைக்கு முன் ஏரியாய் விரிந்து நின்ற உலகனேரியை, மக்கள் எல்லோரும் வாழவைத்த தெய்வமாக துதித்தார்கள். ஆனால், 15 வருடங்களுக்கு முன், மக்களுக்கு நியாயம் வழங்கும் மன்றம் கட்ட வேண்டுமென்று எப்போது அடிக்கல் நாட்டினார்களோ, அப்போதிருந்தே உலகனேரிக்கான அநியாயம் அரங்கேறத் தொடங்கியது. உலகனேரியை உயிருடன் புதைத்துவிட்டார்கள். இப்போதாவது உலகனேரியை பற்றி தெரிகிறதா? ஓங்கி உயர்ந்து பரந்து காட்சி தரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கட்டடத்துக்கு அடியில் புதைக்கப் பட்டுள்ள உலகனேரி பற்றிதான் இப்போது பேசிவிருக்கிறேhம்.
இப்போது உலகனேரியின் மேலிருக்கும் இந்த புனிதமான கட்டடத்திலிருந்துதான் நீர், நிலம், காற்றை, வனத்தை, மலையை, சுற்றுச்சூழலைக் காக்கவேண்டும் என்று பலர் முறையிடுகிறhர்கள். உலகனேரியும் அதன் கிளை நீர் ஆதாரங்களும] இன்று இந்த மதுரை மாநகரில் இருந்த இடம் தெரியாமல், தடமில்லாமல் அழிக்கப்பட்டுள்ளது. அரசும் தனியாரும் பல அடுக்குமாடி கட்டடங்களையும் அலுவலகங்களையும் உலகனேரி மற்றும் அதன் கிளை நீர் ஆதாரங்களின் மேல் தான் எழுப்பியுள்ளனர். இந்த நீர் ஆதாரங்கள் என்ன பாவம் செய்தன. உங்கள் தாகத்தைத் தீர்க்கவும், பசியைப் போக்கவும், உங்களைச் சுகாதாரமாக வைத்திருக்கவும் தானே பல ஊர், தேசங்களைத் தாண்டி இந்த ஆலவாய் நகருக்கு நம்பி வநதன. நம்பி வந்தவர்களை கருவறுத்து விட்டீர்களே?
100 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீர் மேலாண்மையில் மதுரை நகரம் உலகுக்கே வழிகாட்டியாக இருந்தது. பாண்டியர் களுக்குப் பின் வந்த நாயக்க மன்னர்கள் மதுரையை நிரந்தரத் தண்ணீர் பந்தல் போல வைத்திருந்தனர். முல்லையாறு, பெரியாறு, கூடவே வைகையாறும் சேர்ந்து முத்தமிழ்போல ஓடிய பூமி இது. மதுரையின் வடக்கில் வைகை நதியாகவும், தெற்கே கிருதுமால் நதியாகவும் நகரைச் சுற்றி பெரிய குளங்களாகவும் ஊருணிகளாகவும் கண்மாய், ஏரிகளாகவும் பரவிக்கிடந்தன. அப்படிப்பட்ட பல நீர்நிலைகளில் முக்கியமான ஏரியாக 10 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் செழித்து வளர, பாசனத்துக்குப் பயன்பட்டது உலகனேரி. 200 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த உலகனேரி கண்மாய் மேல் மண்ணை அள்ளிப்போட்டு, 120 ஏக்கர் பரப்பளவில் உயர் நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 ஏக்கரில் நீதிமன்ற கட்டடம், வழக்கறிஞர் அலுவலகம், உணவகங்கள், நீதிபதிகளின் இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வளாகமெங்கும் பலவகையான மரங்களையும் செடிகளையும் வைத்து பசுமைப் பூங்காவாக மாற்றி இருந்தாலும் உலகனேரிக்கு ஏற்பட்ட அநீதியை மறைக்க முடியாது. எங்கே உலகனேரி மறுபடியும் அதன் வழித்தடத்தில் வந்தாலும் வந்துவிடுமோ என்று பயந்து, நீதிமன்ற முகப்பிலிருந்து நான்கு வழிச்சாலையை தொடும் பின்பக்கம் வரை சிமென்ட் கால்வாய் ஒன்றைக் கட்டி வைத்திருக்கிறீர்கள்.
யானைப் பசிக்கு சோளப்பொரியா? சமீபத்தில் சென்னையைப்போல் மழை வெள்ளம் ஏற்பட்டால் இந்த செட்டப் எல்லாம் எந்த மூலைக்கு?
துதிக்கையை ஊன்றிப் படுத்திருக்கும் ஒத்தக்கடை ஆனைமலையின் முழு பிம்பம் உலகனேரியின் உடம்பில் தெரியுமாம். அப்படியென்றால் எவ்வளவு பரந்து விரிந்திருக்கும் இந்த உலகனேரி என்று நினைத்துப் பாருங்கள். உத்தங்குடி, ஒத்தக்கடை, திருமோகூர், நரசிங்கம்பட்டி ஆகிய பகுதிகளின் மக்களுக்கு இந்த உலகனேரிதானே தாய். குளிக்கவும் குடிக்கவும் விவசாயம்செய்யவும் உலகனேரியை விட்டால் வேறு யார்? தேனி மாவட்டத்திலிருந்து ஊற்றhகப் பொங்கி, வைகையாக வடிவமெடுத்து வருச நாட்டுப் பக்கத்தில் முல்லை பெரியாறுடன் கலந்து, காடு மலை தாண்டி மதுரையை நோக்கி ஓடிவந்து, மதுரைக்குள் வந்ததும் பல கிளைகளாய் பிரிந்து மக்களுக்குப் பயன்படும் நீர்நிலைகளில் இந்த உலகனேரியும் முக்கியமானது என்றே இந்நேரத்தில் சொல்லலாம். இந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வளிக்க வந்த உலகனேரியின் வாழ்க்கையை அரசு அதிகாரிகள் அழித்தனர். நெல்லும் வாழையும் கரும்பும் தென்னையும் விளைவிக்கப்பட்ட இந்தப் பகுதியில் இன்று கான்கிரீட் காடு தான் முளைத்துள்ளது. தங்கள் வாழ்வாதாரத்தை அழித்து நீதிமன்றத்தை இங்கே கட்ட வேண்டுமா என்று கேட்ட ஏழை விவசாயிகளின் குரல் அப்போது அரசின் செவியில் ஏறவில்லை. முன்பு உத்தங்குடி ஊராட்சியில் ஏரியாக இருந்த உலகனேரியை, இப்போது மதுரை மாநராட்சிக்குள் இணைத்து உலகனேரி உயர் நீதிமன்றமாக ஆக்கியுள்ளது ஒன்று தான் ஆட்சியாளர்களின் சாதனை.
என்னதான் இருந்தாலும் உலகனேரி இருந்த சுவட்டை முற்றிலும் மறைக்க முடியாது. சமீபத்தில் பெய்த சாதாரண மழையில் தேங்கிய தண்ணீர், கண்மாய்போல நீதிமன்றத்தின் வலது பக்க மைதானத்தில் தேங்கியிருப்பதை நீங்கள் இப்போதும் பார்க்கலாம்.
‘சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எங்களால் அலைய முடியவில்லை, நேரமும் பொருளாதாரமும் அதிகம் செலவாகிறது’ என்ற தென்மாவட்ட மக்களின் கோரிக்கை நியாயமானதே. அது நியாயமில்லை என்று சொல்ல முடியாது. அவர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பின் 1981-ல் நீதிபதி ஜஸ்வந்த் சிங் கமிஷனை மத்திய அரசு அமைத்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நிரந்தரமான உயர் நீதிமன்ற கிளை அமைக்க அந்த கமிஷன் பரிந்துரைத்தது. அதன் பின்னரும் ஏற்பட்ட தாமதத்தை எதிர்த்துத் தென் மாவட்ட மக்களும் மதுரை வழக்கறிஞர்களும் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். ஒரு வழியாக 2000-ம் ஆண்டு கருணாநிதியால் அடிக்கல் நாட்டப் பட்டது. அப்போதே அவர்கள் உலகனேரியைத் தேர்வு செய்யாமல், வேறு ஓர் அரசுப் புறம்போக்கு இடத்தைத் தேர்வு செய்திருக்கலாம்.
உலகனேரியைப் போலவே அதன் கிளை நீர் ஆதாரங்களும் மதுரையின் பல கட்டடங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டிருக்கிறhர்கள்.
அழிவை சந்தித்த உலகனேரியின் வேதனையை வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ந.பாண்டுரங்கன் கூறியுள்ளதாவது,
‘‘70-கள் வரைக்கும் மதுரையின் அனைத்துக் குளங்களும் எரிகளும் நிரம்பி வழிந்தன. வைகை நதியின் இரண்டு கரை நெடுகிலும் மக்கள் குளித்தனர். ஊரைச் சுற்றி எத்தனை குளங்கள், கண்மாய்கள். உலகத்துக்கே கொடுக்கும் வகையில் நீர் நிரம்பி இருந்ததால் தான், அதற்கு உலகனேரி என்று பெயர் வந்தது. 70-க்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் தங்கள் கட்சியினர் பயன்பெற கட்டடங்கள் எழுப்புவதற்கு நீர்நிலைகளைத் தேர்வு செய்ய ஆரம்பித்தனர். இன்று மதுரையில் பல முக்கியமான அரசு கட்டடங்கள், தனியார் கட்டடங்கள், கல்லு}ரிகள் போன்றவை கண்மாய்களிலும், ஏரிகளிலும்தான் அமைந்துள்ளன. அப்படித்தான் உலகனேரியைத் தூர்த்து அதில் உயர் நீதிமன்றம் கட்டியுள்ளனர்.
மதுரைக்குள் இரண்டு நதிகள் ஓடின. வைகை எப்போதாவதுதான் எட்டிப் பார்க்கிறது. கடைமடைப்பகுதியான ராமநாதபுரத்துக்குச் செல்வதில்லை. முன்பு சாயல்குடி வரை ஓடிய கிருதுமால் நதி இன்று குறுகிப் பெரும் சாக்கடையாகிவிட்டது. இன்னும் பல குளங்களைக் காணோம். மதுரையில் மலைகள் காணாமல் போனதுபோல் பல நீர்நிலைகளும் காணாமல் போய்விட்டன’’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகள் காக்க வேண்டி வழக்காடி வரும் வழக்கறிஞர் லஜபதிராய் கூறியது என்னவென்றhல், ‘‘உலகனேரியின் வருத்தம் எல்லோருக்கும் உள்ளது. நீதிமன்றம் திறந்த புதிதில் அப்போது நீதிபதியாக இருந்த பி.கே.மிஸ்ரா, ஏரி ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திலிருந்து இயற்கை வளங்களைக் காக்க உத்தரவிடுகிறேhம் என்று வேதனையுடன் சொல்வார். பொதுவாக, அரசு கட்டடங்கள் கட்டும்போது, பல துறைகளிலும் அனுமதி வாங்க வேண்டுமென்ற நெருக்கடி கிடையாது. அதனால், அப்போது ஆட்சியில் இருப்பவர்களின் மன நிலைக்கு ஏற்ப நிலங்கள் எடுக்கப்படுகின்றன. இதை விடக் கொடுமை, மதுரையில் தனியார் மருத்துவமனைக்கு ஒரு ஏக்கருக்கும் மேற்பட்ட மேலமடை கண்மாயை பட்டா போட்டு வழங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். இப்போது சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மக்களிடம் ஒரு கருத்தையும் உருவாக்கி, களத்தில் இறங்கிய அதிகாரிகள், விளிம்புநிலை மக்களின் குடியிருப்புகளைத் தான் காலி பண்ணுகிறhர்கள். அரசு கட்டடம், தனியார் கட்டடங்களை கை வைப்பதில்லை. மதுரையில் உயர் நீதிமன்றத்தில் தொடங்கி பல கல்லு}ரிகள், மாவட்ட நீதிமன்றம், அரசு கட்டடங்கள், இப்போது வேகமாகக் கட்டப்பட்டு வரும் உலக தமிழ்ச் சங்க கட்டடம் அனைத்தும் நீர்நிலைகள] தான்’’ என தெரிவித்துள்ளார்.
இனிமேலும் இதைப்போன்ற நீர் படுகொலைகள் நடக்காமல் தடுக்க எல்லோரும் முன் வாருங்கள்... இல்லை என்றhல் சென்னையைப்போன்ற பாடத்தை நாளை மதுரையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்ற எச்சரிக்கையையே இந்நேரத்தில் சொல்ல முடியும்
மிஞ்சியிருக்கும் கண்மாய்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும், வரத்து கால்வாய்களையும் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டெடுத்தால் மட்டும் கண்மாய்களால் மக்களுக்கும் பலன் கிடைக்கும். விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும] கண்மாய்களும் தப்பிக்கும் எனக்கூறி மீண்டும் ஒரு புதிய தொகுப்புடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள

No comments:
Post a Comment